shiv sena kerala 400

வழக்கமாக இந்துத்துவா பொறுக்கிகள் காதலர் தினத்தில் தான் கையில் உருட்டுக்கட்டையுடனும், கையில் தாலியுடனும், ராக்கி கயிறுகளுடனும் பீச், பார்க் என்று ஒன்றுவிடாமல் காதலர்களை மிரட்டி, அடித்து, உதைத்து, ஒன்று தாலி கட்டு இல்லைனா அவளை சகோதரியா ஏற்றுக்கொண்டு ராக்கி கயிறு கட்டு என்று பொறுக்கித்தனத்தைக் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை மகளிர் தினத்தன்று கேரளாவில் மெரைன் ட்ரைவில் நிம்மதியாக காதலித்துக் கொண்டு இருந்த காதலர்களை அடித்து, உதைத்துள்ளனர். பெண்களிடம் மிக ஆபாசமாக நடந்துள்ளனர். சட்ட மன்றத்தில் அம்மணப்படம் பார்ப்பவனையும், ஆளுநர் விடுதியை அந்தப்புரமாக மாற்றி கூத்தடித்தவனையும், சங்கரமடத்தில் விபச்சாரம் செய்தவனையும், கோயில் கருவறைக்குள் சாமிக்கே இலவசமாக பிட்டுப் படம் காட்டியவனையும், கட்டின பொண்டாட்டி பெயரையே மறைத்து பிரதமர் பதவிக்கு வந்தவனையும் விட்டு விட்டு, அப்பாவிக் காதலர்களை அடித்து உதைக்கும் இந்தக் கோழைகள் உண்மையில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் ஆவார்கள்.

 காவிப் பொறுக்கிகள் தங்களுடைய இத்தனை அயோக்கியத்தனங்களையும் காவல்துறை முன்னிலையில் செய்திருக்கின்றார்கள். காதலர்கள் தாக்கப்படுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துள்ளனர். அவர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், அரசு அமைப்பு எந்த அளவிற்கு காவிமயமாக்கப்பட்டிருக்கின்றது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இந்தியாவில் காவி பயங்கரவாதம் நீதித்துறை, காவல்துறை, இராணுவம் என அனைத்தின் துணையுடனும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அரசின் அனைத்துத் துறைகளிலும் காவி பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றார்கள். எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் தான் இந்தக் கோழைகளை எல்லாம் குண்டாந்தடிகளைத் தூக்குவதற்கு உத்வேகம் அளிக்கின்றது. ஏதோ பெண்களை எல்லாம் இந்தியாதான் கடவுளாக வணங்கும் நாடு, நாங்களெல்லாம் பாரத மாதாவின் பிள்ளைகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த காவி பயங்கரவாதிகளின் உண்மையான முகம் இதுதான்.

 பெண்களை மிக இழிந்த பிறவிகளாய், அடிமைகளாய், பாலியல் பொருட்களாகப் பார்க்கும் மனுவின் வாரிசுகள் இவர்கள். காவி பயங்கரவாதிகளின் கட்சிகளில் இருக்கும் அனைத்துப் பெண்களும் மனுவின் கருத்துக்களை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட அடிமைகளே ஆவார்கள். தன்மானமும், சுயமரியாதையும் உள்ள எந்தப் பெண்ணும் இது போன்ற பெண்களைப் பற்றி இழிவான சித்தாந்த பின்புலத்தைக் கொண்ட கட்சியில் இருக்க மாட்டார்கள். இவர்கள் கட்சியில் இருக்கும் எந்தப் பெண்ணும் பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த வன்முறை சம்பவங்களையும் கண்டிக்கும் திராணியற்றவர்களாய் இருப்பதை நாம் பார்க்கலாம். தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு மோசமான பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும், பெண்களுக்கு எதிராக செயல்பட்டு இருந்தாலும், அதைக் கண்டும் காணாத பிழைப்புவாதிகளாய், தனக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அலைபவர்களாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அடிப்படையிலேயே ஆணாதிக்க கருத்தியலை முழுவதும் ஏற்றுக் கொண்டவர்களாய், ஆண்கள் ஊர்மேய்வதையும், பெண்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதையும் கடமையாகக் கருதும் சனாதன சிந்தனையில் ஊறிப்போன ஜென்மங்கள் தான் இது போன்ற காவி பயங்கரவாதிகளின் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்பவர்கள். இது போன்ற பெண்கள், மகளிர் தினம் வேறு கொண்டாடுகின்றார்கள். அப்படிக் கொண்டாட அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று தெரியவில்லை.

 கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தச் சம்பவத்தில் எடுத்த நடவடிக்கையும் அதைக் கண்டித்து அவர் விட்ட அறிக்கையும் உண்மையில் பாராட்டத்தக்கதாகும். காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ச்சியான கடும் விமர்சனங்களை அவர் முன்வைப்பது உண்மையில் கேரளாவில் பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு செய்தியாகும். பெண்களின் பாலியல் சுதந்திரத்தையும் அவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும் திட்டவட்டமாக மறுத்து, அவர்களைப் பொதுவெளியில் இருந்தே அப்புறப்படுத்திய மனுவின் வாரிசுகள், மன்னராட்சி மறைந்து சட்டப்படியான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று சொல்லப்படும் இப்போதும், பெண்கள் மீதான வக்கிரத்தை காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். பொதுச்சமூகத்தின் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, அதைத் தீர்க்க உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்று சொல்லப்படும் காவல்துறை போன்றவை இன்னும் பார்ப்பனிய சித்தாந்தத்தின் மேலாண்மையில் இருந்து விடுபடாமல், அதை மேலும், மேலும் சமூகத்தின் பொதுச்சட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்கின்றது. சாகாவில் இருந்து வெளியேறிய பார்ப்பனிய அடிமைகள் தாங்கள் அரசு என்ற அமைப்பிற்குக் கட்டுப்பட்டவர்களா? இல்லை ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்குக் கட்டுப்பட்டவர்களா? என்பதை இன்னும் அறியாமல் அதே மனநிலையிலேயே பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

shiv sena kerala 401

 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கிவைக்கப்பட்ட பெண்கள் இப்போதுதான் பொதுவெளிகளில் தங்களுக்கான இடத்தைப் பெற முயன்றுகொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அழகுப் பதுமைகளாக, வைப்பட்டிகளாக, விபச்சாரிகளாக, அடிமைகளாக, வேலைக்காரிகளாக, அடிமைப்படுத்தி வைத்திருந்த பார்ப்பன சித்தாந்தம் பெற்றெடுத்த அடிமை நாய்கள் அப்படி அவர்கள் பொதுச்சமூகத்திற்குள் வருவதை சகித்துக் கொள்ள முடியாமல் ஓட ஓட விரட்டி அடிக்கின்றன. திரும்பவும் அவர்களை இருட்டறையில் பூட்டி வைக்க குண்டாந்தடிகளுடன் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஊரார் வீட்டுப் பெண்களையே இப்படி பொதுவெளியில் நடமாடவிடாமல் அடித்து உதைத்துச் சித்தரவதை செய்யும் இந்த அயோக்கியர்கள், தங்கள் வீட்டுப் பெண்களை என்ன பாடு படுத்துவார்கள் என்பதை நினைத்தாலே நமக்குப் பயமாக இருக்கின்றது. நிச்சயமாக அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு எப்படி தினம் தங்களை அழகுபடுத்திக்கொண்டு தங்களது கணவன்களுக்கு சிறந்த பாலியல் அடிமைகளாக வாழ்வது என்பதைத்தான் தினம் போதிப்பார்கள். இந்தச் சமூகமே தங்கள் சித்தாந்தத்திற்கு கட்டுப்பட்டது, அதை மீறினால் அடிப்போம், உதைப்போம் என ஒரு பொறுக்கிக்கும்பல் நடந்துகொள்ளும் என்றால், சட்டமும் அதை வேடிக்கை பார்க்கும் என்றால், இந்தியா இன்னும் மனுவின் பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

 ஒரு ஆணும் பெண்ணும் பொதுவெளியில் பேசுவதோ, சேர்ந்து நடப்பதோ தவறு என்று கையில் தாலியையும், ராக்கி கயிறுகளையும் வைத்துக்கொண்டு அடித்து, உதைக்கும் பார்ப்பனிய அடிமைகள், தங்கள் கட்சியின் பெண்தலைவர்கள் ஆண்கள் புடைசூழ வரும் போது மட்டும் அதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. தமிழ்நாட்டில் தமிழசை, வானதி சீனிவாசன் போன்றவர்கள் பொதுவெளியில் வரும் போது அவர்களை சுற்றி பத்துப் பதினைந்து ஆண்கள் கூட வருகின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பெரியாரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. நீ எப்படி பத்து ஆண்களுடன் பொதுவெளியில் வரலாம், உன் தாத்தன் மனு உன்னை வீட்டுக்குள்ளே அடிமையாகத்தானே இருக்கச் சொன்னான், பொதுவெளியில் வந்து உனக்கு என்ன அரசியல் வேண்டிக் கிடக்கின்றது என்று மிரட்டியதில்லை. இதுதான் கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால், சாதிகளின் பெயரால் இயங்கும் கழிசடை அமைப்புகளுக்கும், கடவுள் மறுப்பு, தன்மானம், சுயமரியாதை போன்றவற்றின் பெயரால் இயங்கும் அமைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம். பெண்களை கடவுள் என்று சொல்லி அவளைப் பொதுவெளியில் இருந்து விரட்டி, பாலியல் அடிமையாக நடத்தும் சனாதனக் காலிகளை விட, அவர்களை அரசியல் படுத்தி ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு எதிராக போராட களம் இறக்கும் கடவுள், மத, சாதி மறுப்பாளர்களே உண்மையில் நேர்மையானவர்கள் ஆவார்கள்.

 இனிமேல் பெண்கள் பொதுவெளியில் தங்களின் ஆண் தோழர்களோடு அது காதலராக இருந்தாலும் சரி, இல்லை நண்பராக இருந்தாலும் சரி அவர்களோடு இருக்கும்போது யாராவது இந்துமத பொறுக்கிகள் வந்து மிரட்டினால் காலில் போட்டிருக்கும் செருப்பைக் கழற்றி நாலு சாத்து சாத்தவும். தங்களைக் கலாச்சார காவலன் என்று சொல்லிக்கொண்டு உரிமையோடு உங்களிடம் வம்பிழுக்கும் அவர்களின் முகத்தில் நீங்களும் உரிமையோடு காறி உமிழவும். பயந்து பயந்து ஒதுங்கிச் சென்றீர்கள் என்றால், இனி நீங்கள் உங்களின் தந்தையுடனோ இல்லை சகோதரனுடனோ கூட செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். எனவே காவி பயங்கரவாதிகளின் பொறுக்கித்தனங்களுக்கு அஞ்சாமல், அவர்களை எதிர்த்துப் போராடும் குணத்தை பெண்தோழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கையிலே கற்களை வைத்துக் கொண்டு நாய்களைப் பார்த்து ஏன் பயந்து ஓடுகின்றீர்கள்?

- செ.கார்கி

Pin It