தொடர்புடைய படைப்புகள்

காவல்துறையின் சாதி வெறி

சாதாரணமாக முடிய வேண்டிய ஒரு சம்பவத்தை சாதிப் பதட்டமாக வாடிப்பட்டி காவல்துறை மாற்றியது. இந்தச் சம்பவம் சாதி ஒடுக்குமுறையில் காவல்துறையின் பாத்திரம் குறித்த வகைமாதிரி என்பதால் பகிர்கிறேன். இந்த கட்டுரையில் காவல்துறை பற்றிய வேறு சில செய்திகளை நான் பகிர்ந்துகொள்ளவில்லை. உரிய காலம் போகவேண்டியிருக்கிறது.

rajendiran_dalit_360கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர்களும் தலித்துகளும் (பள்ளர் பிரிவு) ஒரே நாளில் பாரி வேட்டைக்குத் தனின்தனியே செல்வார்கள். ஒரு முயலை வேட்டையாடிவருவதுதான் பாரி வேட்டை.

12 மார்ச் அன்று முயலைப் பிடித்துக்கொண்டு வழக்கப்படி ஆடிப்பாடி வந்த தலித் இளைஞர்களை கள்ளர் இளைஞர் சிலர் எங்கள் ஊருக்குள் வர முடியுமா என்று சீண்ட, கோபமுற்ற இளைஞர்கள் சிலர் கள்ளர் தெருவுக்குள் நுழைந்து சவாலைச் சந்தித்துவிட்டதாக குரல் கொடுத்துள்ளனர்.

இதனால், கோபமுற்ற கள்ளர்கள் விரட்ட, தங்கள் தெருவுக்கு திரும்பிய இளைஞர்களை தலித் பெரியவர்கள் திட்டினர். தவறைச் சுட்டிக் காட்டினர். கண்டித்து வைத்தனர்.

ஆனால், சற்று நேரத்தில் வந்த காவல்துறை, தலித் பெரியவர்கள் எடுத்த முயற்சியைப் பாராட்டி, சமூகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதற்கு மாறாக, கள்ளத் தெருவுக்குள் நுழைந்தவர்களைக் கைது செய்வோம் என்று மிரட்டியது. நிலைமையை எடுத்துச் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை. இரவு முழுவதும் ‘எவளையும் தூங்கவிடமாட்டோம்’, என்று ஒரு காவல் அதிகாரி மிரட்டியுள்ளார். ‘எத்தன ஆயிரம்போட்டு எங்களக் கட்டின?’ என்று தலித் பெண்கள் முற்றுகையிட்டனர். காவல்துறை பின்வாங்கியது.

ஆனால், (13, மார்ச்) மறுநாள் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி, மூன்று தலித் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்தது. தேவையற்ற இந்த நடவடிக்கை தலித்துகளின் கோபத்தைத் தூண்டினாலும் அமைதி காத்தனர்.

அன்று மாலையே சம்பந்தமேயில்லாத குழந்தைவேல் என்ற தலித் இனp பெரியவர் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைகிறார். தாக்கியது கள்ளர்களைச் சேர்ந்த ஒரு இளைஞர். (இதில் குறிப்பிட வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. தாக்கப்பட்ட குழந்தைவேல் அதிமுகவின் கிளைச் செயலாளர்!)

குழந்தை வேல் கல்லால் அடித்து வீழ்த்தப்பட்டதால் கோபமுற்ற அவரின் பேரன் ராஜேந்திரன் கள்ள சாதியினர் தெருவை நோக்கி ஓட, இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் ஊர் மந்தையில் காவலுக்கு நின்ற பெண் உதவி ஆய்வாளரும் மற்றொரு காவலரும் ராஜேந்திரனை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கள்ளர் சாதியினர் திரண்டு ஆயுதங்களுடன் ஓடி வந்தனர். “அந்தம்மா ராஜேந்திரனை தடுத்து நிறுத்திய பின் ஜீப்பில் ஏற்றவில்லை. இரண்டு அடியைப் போட்டு எங்களிடமும் ஒப்படைக்கவில்லை”, என்று சம்பவ இடத்தில் இருந்த தலித் பெண்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.

மாறாக, ராஜேந்திரனை காவல்துறை அதிகாரி பிடித்துக்கொள்ள, அவன் கழுத்தில் அரிவாள் இறங்கப் பார்த்திருக்கிறது. அவன் தலையைக் குனிந்துகொண்டதால் கையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப அவன் மீது அறிவாள் பாய்ந்தும் காவல்துறை உதவி ஆய்வாளர் விடவில்லை. சூழ்ந்து கொண்டவர்களின் தாக்குதலால் இரத்தம் கொட்ட அவன் சரியும்வரை அவனை அந்த பெண் அதிகாரி விடவில்லை.

இந்த பெண் அதிகாரியின் பெயர் சுதா. மார்ச் 12 இரவே காவலுக்கு வந்துவிட்ட அந்த அதிகாரி, ‘கள்ளத் தெருவுக்குள்ள பள்ளங்க நெழயுறதா? எனக்கு இரத்தம் கொதிக்குது… இதுக்கெல்லாம் சும்மா விடமாட்டோம்’, என்ற தலித் பெண்களை பலமுறை மிரட்டியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

அதன் பின்னும் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த எமது கட்சி கிளைச் செயலாளர் முத்தம்மா களத்தில் நின்று போலீசோடு போராடியிருக்கிறார். காவல்துறையின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி நியாயம் கேட்டிருக்கிறார்.

பின்பு என்னை தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னார். நான் உடனடியாக காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு செய்தியைச் சொல்லி, காவல்துறை ஒரு சார்புடன் செயல்படுகிறது என்பதையும் சொல்லி எச்சரித்தேன்.

மறுநாள் நானும் தோழர் முத்தம்மாவும் காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தோம். முத்தம்மா சொன்னதை விரிவாகக் கேட்டுக்கொண்ட அதிகாரி, முறையான விசாரணை நடத்தி உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இப்போது காவல்துறை பின்வாங்கிக்கொண்டு இரதரப்பு பேச்சு வார்த்தைக்கான முயற்சி நடக்கிறது.

இரண்டு நாட்கள் போய்விட்டன. என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டுள்ளோம்.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

8 comments

8
naathan
"மாறாக, ராஜேந்திரனை காவல்துறை அதிகாரி பிடித்துக்கொள்ள, அவன் கழுத்தில் அரிவாள் இறங்கப் பார்த்திருக்கிறது. அவன் தலையைக் குனிந்துகொண்டதால் கையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது" - நம்புவது போல் இல்லை - தலயை குனிந்தால் கையும் தாழுமே தவிர மேலே வராது "திரும்பத் திரும்ப அவன் மீது அறிவாள் பாய்ந்தும் காவல்துறை உதவி ஆய்வாளர் விடவில்லை" ஒரு கட்டு மட்டுமே உள்ளது. ஒரு பெண் பிடித்து இந்த வாலிபர் அந்த பிடியில் இருந்து விடுபட முடியவில்லையா???. "சூழ்ந்து கொண்டவர்களின் தாக்குதலால் இரத்தம் கொட்ட அவன் சரியும்வரை அவனை அந்த பெண் அதிகாரி விடவில்லை" - சரிந்தவுடன் விட்டு விட்டு போய்விட்டாரா???!!
raghava raj
ஒரு குறிப்பிட்ட சாதிக் கும்பலின் சாதிவெறி அவை எந்தத் துறைக்கு,எந்தப் பணிக்கு சென்றாலும் சற்றும் குறையாமல் அப்படியே நீடிக்கிறது என்பதற்கு இந்நிகழ்வு மேலும் ஒரு சான்று.அவை கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள அந்தப் பெயராலேயே இப்பொழுதும் தங்களை அழைத்துக் கொள்வதற்கு ஒருவகையில் நன்றி சொல்லத் தான் வேண்டும்.ஏடறியாத வரலாற்றுக் காலகட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளையை மட்டுமே பிழைப்புக்கான வழியாக சில குலச் சமூகங்கள் கொண்டிருந்தன என்பது பலருக்கும் தெரிந்தது தான்.ஆனால் இப்போதும் அந்தப் பெயரையே வைத்துக் கொண்டிருப்பது, அதிலே ஒருவகையான திருப்தி காண்பது என்பது வக்கிர புத்தியை வெளிக்காட்டுகிறது.இதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.காவல்துறையில் சாதிவெறி விலங்குகள் இப்பொழுதும் இருப்பதைத் தான் 2011செப்.11 பரமக்குடியில் காவல்துறை நடத்திய படுகொலைகளும் இந்த நிகழ்வும் சுட்டுகின்றன.முதன்மையாக காவல்துறை சரிசெய்யப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்காகப் போராடுவோர் இவ்விஷயத்தில் முனைப்பு காட்டவேண்டும்.
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
வசையின்றி இசைகொண்டு வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்.
சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்
காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகாரென்பர்
நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்
மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்
அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்
தொண்டைமானின் தொன்மையும் வளமையும்கொண்ட ஊர் காஞ்சி என்பர்
வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்
பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்
ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்
வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்.

தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பதும் வரலாறு.
அப்புறம் எந்த பக்கத்துல்ல அவன் அடிமையாக இருக்கான பர்ரு, நீ சொல்லுற மாதுரி அவன் திருடனா இருந்த, எப்படி எல்லா இடத்துலயும் அவன் ஆண்டயாவும், ஜமீனாவும், பண்ணாயாறும இருக்கான், உனக்கு சந்தேகம் இருந்தா, தஞ்சாவூர் பக்கம் வந்து பர்ரு,
kannan
மேலெ விக்கி சுத்தியார் கூறுவது ஆதரமற்றது. அவர்கூறும் பட்டபெயர்கள், பாடுபட்டதால் அரசரால் கொடுக்கப்பட்ட பட்பெயர்களே மறாக சாதி பெயரல்ல. அவர்கூறும் வேளிர்களும் சிற்றரசர்களும் பேரரசர்களும் கள்ளர் சாதியய் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதரஙளை தேடிபர்த்தவர்கள் எல்லாம் ஓய்ந்து பொய்விட்டர்கள். விக்கி ஆதாரம் காட்டினால் ஒத்துக்கொள்வோம். பிரான்மலை கள்ளருக்கும் தஞ்ஜாவூர் பகுதி கள்ளர்கள் பிரான் மலய் கள்ளரோடு முற்றிலும் வேரானவர்கள் என்கிரார் வேஙடசாமி நட்டார் அவரின் கள்ளர் சரித்திரம் படித்துபர்க்கவும். அவர் சொல்லமறந்த கதை ஒன்று உண்டு அது என்னவென்றால்
kannan
கி.பி 1-௨ ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் ஈழ நட்டிலிருந்து சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவந்து காவிரிக்கு கரையமைக்க பயன்படுத்தப்பட்டவர்கள் தான் தஞவூர் கள்ளர்கள் அதனால் தான் அவர்கள் ஈழனட்டு கள்ளர் என்று இவ்ன்றும் அழைத்துக்கொள்ளுவதை யாரும் மறுக்கமுடியாது.விக்கி அழைப்பை எற்றுக்கொண்டு யாரும் அங்குசென்று இதை உறுதி படுத்திகொள்ளமுடியும்.இன்றயகாலத்தில் அரிவாலும் மீசையும் காட்டி யாரையும் பூச்சாண்டிகாட்ட முடியாது ஏனெனில் எல்லொரும் வரலாறு இலக்கியம் படிக்கின்றனர் இதில் படிக்காதது விக்கி போன்றோர் மட்டுமே.
rajapandian
hi ,
kallar is not as criminals they are one of the spy agent like RAW . They worked for pandiya king before king were going to war kallar padai went to enemies area and taken all possession from them including weapons . Then king(maravar paddi) went there and occupied enemies territory.
by raja pandian
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
கண்ணன் = அது ஈழனட்டு கள்ளர் அல்ல ஈசநாட்டு கள்ளர்

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்

கிளைவழிக்கள்ளர்
அம்புநாட்டுக்கள்ளர்
ஈசநாட்டு கள்ளர்
செங்களநாட்டுக்கள்ளர்
மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
ஏழுநாட்டுக்கள்ளர்
நாலுநாட்டுக்கள்ளர்
பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
மாகாணக்கள்ளர்
பிரமலை கள்ளர்
மேல்ராயன் கோட்டை கள்ளர்

தஞ்சாவூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் தோன்றிய தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. வ். கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் தன் குல மக்கள் குற்றப்பரம்பரை சட்டம், 1911 ஆல் வார்த்தையால் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருவதைக் கண்டு கொதித்தெழுந்து, 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து தீவிர நடவடிக்கை தளர்த்தப்பட்டது. இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் டெனொடிஃபிஎட் கல்லர் ட்ரிபெ என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (ஏசனட்டு கல்லர்ச்) அழைக்கப்பட்டனர். அரசு ஆவணங்களிலும் அவ்வாறே ஈசநாட்டு கள்ளர்கள் என்றே குறிக்கப்பட்டனர். தஞ்சை, மதுரை மாவட்டங்களில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1930 வரை ச்ட் ஆச்ட். பிரகாரம் கள்ளர் இன மக்களை கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாகினார்கள் என்று அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் ப்லொச்க் புர்ன் என்பவர் குறிப்பிட்டுள்ளார். 1939 வரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தஞ்சை, திருச்சி, மாவட்டங்களில் செயல்பட்டு வந்திருக்கிறது.
மன்னை மைந்தன்
தமிழ் நாடு அரசுகள்
================
ஆட்சி 2050 வருடம் - பாண்டிய அரசு (தமிழ் பாண்டியன்) : கி.மு.600–கி.பி.1550

ஆட்சி 1579 வருடம் - சோழ அரசு (தமிழ் சோழன்) : கி.மு.300–கி.பி.1279

ஆட்சி 1424 வருடம் - சேர அரசு (தமிழ் சேரன்) : கி.மு. 300 –கி.பி.1124

ஆட்சி 622 வருடம் - பல்லவ அரசு (தமிழ் & தெலுங்கு பல்லவன்) : கி.பி.275–கி.பி.897

ஆட்சி 409 வருடம் - யாழ்ப்பாண அரசு ( தமிழ் சேது ) : கி.பி.1215–கி.பி.1624

ஆட்சி 400 வருடம் - களப்பிர அரசு (பாளி களப்பாளன்) : கி.பி 300- கி.பி. 700

ஆட்சி 389 வருடம் - பூழி நாடு (தமிழ் மறவர்) : கி.பி.1378 -கி.பி.1767

ஆட்சி 333 வருடம் - சேதுபதி அரசு (தமிழ் மறவர்) : கி.பி.1590-கி.பி.1923

ஆட்சி 310 வருடம் - விஜயநகர அரசு (தெலுங்கு,கன்னடம் நாயக்கர்) : கி.பி.1336–கி.பி.1646

ஆட்சி 281 வருடம் - பிரெஞ்சு குடியரசு (பிரெஞ்சு): கி.பி.1673–கி.பி. 1954

ஆட்சி 262 வருடம் - கள்ளர் குல தொண்டைமான் அரசு (தமிழ் கள்ளர் ) : கி.பி.1686 - கி.பி.1948

ஆட்சி 254 வருடம் - வெள்ளையர்கள் (ஆங்கில) : கி.பி.1693 - கி.பி.1947

ஆட்சி 241 வருடம் - முத்தரையர் அரசு (தமிழ் முத்தரையன்) : கி.பி.610 - கி.பி.851

ஆட்சி 207 வருடம் - மதுரை நாயக்கர் அரசு (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1529 - கி.பி.1736

ஆட்சி 181 வருடம் - மராட்டிய அரசு (மராட்டி) : கி.பி.1674–கி.பி.1855

ஆட்சி 141 வருடம் - தஞ்சாவூர் நாயக்கர்கள் (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1532–கி.பி.1673

ஆட்சி 139 வருடம் - சம்புவரைய அரசு (தமிழ் சம்புவரையன் ) : கி.பி.1236- கி.பி.1375

ஆட்சி 43 வருடம் - மதுரை சுல்தான் (உருது துலுக்கர்): கி.பி.1335–கி.பி. 1378.

மூவேந்தர்களுக்கு பிறகு தமிழ் நாட்டை ஆண்ட ஒரே மன்னர் இனம் முக்குலத்தோர் மட்டுமே.

கள்ளர் குலம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.