குவைத்தில் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புடன், மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
 
இராசீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் அண்மையில் இந்திய சனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதென வெளிவந்த அறிவிப்பு அனைத்து தமிழர்களின் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதைத் தொடர்ந்து உலகெங்கும் மரணதண்டனைக்கு எதிரான குரல்களும், மரண தண்டனையை இரத்து செய்யக்கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருவதோடு, இக்கருத்தினை வலியுறுத்தி இந்திய அரசிற்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் குவைத்வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து, அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் பங்களிப்புடன், இந்திய சனாதிபதி, துணை சனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உள்துறை அமைச்சர், மனித உரிமை மன்ற நீதிபதி, தமிழக ஆளுனர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இம்மனுவில் அனைத்துத் தமிழர்களும் குவைத்வாழ் இந்தியர்களிடமும் கையெழுத்து பெற்று அனுப்பிவைக்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கப் பெற்றுள்ளது.
 
இது குறித்தான மேலதிக தகவல்களை, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் வழியாகவோ, 66852906 என்ற கைபேசி எண்ணிலோ தமிழ்நாடன் அவர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
 
குவைத்வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடனிடம் இப்படிவத்தினைப் பெற்று கையெழுத்துக்களை சேகரித்து இந்த முயற்சிக்கு வலுசேர்க்க வேண்டுகிறோம்.

Pin It