தோழர்களே,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து, 3 அம்ச கோரிக்கைகளுடன் 30/01/11, காந்தி ஜெயந்த்தி அன்று காலை 9 மணிக்கு காலவாசல் மதுரையில் இளைஞர் சான்றோர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரு.தமிழ்வாணன் மற்றும் திரு.ஆனந்தன் காலவரையறைய‌ற்ற உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளனர்.

அவர்களது மூன்று அம்ச கோரிக்கைகளாவது

1. பெட்ரோல் விலையை ரூ.50க்கும் கீழ் குறைத்து, மக்களைப் பாதிக்கும் வருமான வரியையும் சுங்க வரியையும் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.விலைவாசி உயரும்போது அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் டஷ் பொது மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

3.விலைவாசி உயர்வுக்கு காரணிகளான ஊகவணிகம், உற்பத்திக் குறைவு போன்றவற்றை கட்டுபடுத்தும் திட்டங்களை அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

இப்பிரச்சனை குறித்து அனைத்து கட்சிகளும் மௌனம் சாதிக்கும் நேரத்தில் இளைஞர் சான்றோர் காங்கிரஸ் இதற்கு தீர்வு காண முன்வந்துள்ளது.

உண்ணாவிரதம் இருக்கும் நிர்வாகிகள் திரு.தமிழ்வாணன் மற்றும் ஆனந்தன் அவர்களை 30/01/11 அன்று மாலை 5 மணிக்கு போலீசார் கைது செய்து இரவு 11 மணிக்கு விடுவித்தனர். 2ஆம் நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த அவர்களை மீண்டும் போலீசார் கைது செய்து நேற்று காலை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது இவர்களின் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனையில் பாதுகாப்பில் வைத்துள்ளனர். எனினும் அங்கும் நிர்வாகிகள் 4ஆம் நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கின்ற்னர். கோடிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருப்போரையெல்லாம் கௌரவமாக நடத்தும் நம் போலீசார், உயிரை துச்சமாக மதித்து மக்களுக்காக பாடுபடுபவரை நடத்தும் விதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நியாயமான கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க மறுப்பது ஏன்? மக்களின் நலன்விரும்பிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஊடகங்களும் மௌனம் சாதிப்பது ஏன்?

கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை இளைஞர் சான்றோர் காங்கிரஸ் நிர்வாகிகளின் உண்ணாவிரதம் தொடரும்.

மேலும், 03/02/11 அன்று உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர் சான்ரோர் காங்கிரஸ் நிர்வாகிகளை ஆதரித்து மாணவர்களும் பொதுமக்களும் ஒன்றுதிரண்டு பேரணி நடத்தவுள்ளனர்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் எற்பட்ட எழுச்சி, உத்வேகத்தோடு மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் அனைத்து மக்களும் ஆதரவு தருவோம். ஆர்வமுள்ளோர் பங்கேற்ப்பீர்.

தொடர்புகொள்வீர் : திரு.காளிமுத்து - 9943595340
இளைஞர் சான்றோர் காங்கிரஸ்
தலைமையிடம்: 72/9,
ஆதீனம் காம்பவுண்டு,
தானப்ப முதலி தெரு,
மதுரை- 625001

Pin It