ramaiah_560

(கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தின் முன்பு ராமையா)      

கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தும் சமூகமே விடுதலையை நோக்கி நகரும் என்பது, சமூக இயங்கியலின் முக்கிய விதி. எனவே, கல்வி மூலம் தங்கள் சமூக இழிவுகளை அறுத்தெறிய முனைகின்றவர்களையும் நாம் ‘மாற்றுப்பாதை'யில் இணைத்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையதொரு சாதனையாளர்தான் பேராசிரியர் ராமையா. இவர், மும்பையிலுள்ள ‘டாட்டா சமூகப் பணி நிறுவன'த்தின் துறைத் தலைவராக பணியாற்றுகிறார். சமூகப் பணியில் இந்தியாவின் முக்கிய உயர் கல்வி நிறுவனமாகத் திகழும் இங்கு, அம்பேத்கரிய பார்வையில் சாதி ஒழிப்பிற்கான வழிகளைக் கற்பித்து – ஆய்வாளர்களையும், அறிவாளர்களையும் உருவாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார் ராமையா.

தமிழ்நாட்டின் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் பரமக்குடிக்கு அருகில் இருக்கும் நெடும்புலி கிராமத்தில், விவசாய வேலை செய்யும் பெற்றோர்களுக்கு பிறந்தவர் ராமையா. சிறு வயதில் ராமையாவுக்கு படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை. இசைதான் அவரை ஆக்கிரமித்திருந்தது. ஓரளவு வருமானம் இருந்ததால், அவருடைய அப்பாதான் ராமையாவை கட்டாயப்படுத்தி படிக்க வைத்திருக்கிறார்.

ராமையா தனது தொடக்கக் கல்வியை கொத்தமங்கலத்திலும், உயர்நிலைக் கல்வியை பார்த்தீபனூரிலும் முடித்திருக்கிறார். இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் படித்தபோது, ஆங்கிலத்தில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்னும் உந்துதல் அவருக்குள் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் எப்படியாவது ஆளுமை பெற வேண்டும் என்கிற அந்த எண்ணம், அவரை மேலும் உழைக்கத் தூண்டியது. இளங்கலைப் படிக்கும்போது தமிழ் வழியில் சேர்ந்துதான் படித்திருக்கிறார். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தேர்வு எழுதும்போது தமிழில் எழுதுவார்கள். ஆனால் ராமையாவோ தமிழ் வழியில் சேர்ந்து, இறுதி ஆண்டுத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதி, வகுப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்!

இதனூடே அவர் தன்னுடைய உள்ளக் கிடக்கையான இசையையும் கற்று, பல இசைக்கருவிகளை மீட்டுகின்ற ஆற்றலையும் பெற்றிருக்கிறார். தன்னுடைய முதுகலையில் சமூகப் பணியைப் பாடமாக எடுத்துக் கொண்டு, சென்னை லயோலா கல்லூரியில் படித்திருக்கிறார். இளம் ஆய்வாளருக்கான பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முடித்திருக்கிறார். தான் வளர்ந்த கிராமத்தில் அனைவருமே தலித்துகளாக இருந்ததால், சிறுவயதில் நேரடியான சாதிய ஒடுக்குமுறை எதற்கும் தான் ஆளாகவில்லை என்று அவர் கூறியதைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. அந்த வியப்பு தீர்வதற்குமுன் அவர் சொன்ன அடுத்த செய்தி, நம்மை ஏமாற்றமடையச் செய்தது.

டில்லியில் படிக்கும்போது, முனைவர் ஆய்வுக்காக அவர் எடுத்துக் கொண்ட ஆய்வுத் தலைப்பு – ‘தமிழ் நாட்டின் கிராமங்களில் புரட்சிகர இயக்கங்களும் தலித் அடையாளங்களும்' என்பதாகும். அதற்காக தகவல் சேகரிக்க கிராமங்களுக்குச் செல்லும்போது, அவருடைய உயர் படிப்பையும் கருத்தில் கொள்ளாமல், சாதிய ஆதிக்கம் அவரை கால்களில் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொல்லி, கைகளில் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது. ஒரு தலித் எத்தகைய உயர் நிலையை அடைந்தாலும், சாதிய இழிவு மட்டும் நீங்காது என்பதை அவர் இத்தருணத்தில்தான் உணர்ந்திருக்கிறார்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழத்தில் படிக்கும்போது, இடது சாரி இயக்கத்தில் இணைந்து பணியாற்றி யுள்ளார். இப்பல்கலைக் கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர்களில் ஒருவரான நந்துராம் அவர்கள்தான் ராமையாவுக்கு அம்பேத்கர் நூல்களை வாசிக்கத் தந்திருக் கிறார். அதன் பிறகு இடதுசாரி இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் ராமையா. அம்பேத்கரின் நூல்களைப் படித்த பிறகுதான் – நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம்; மதத்தின் பெயரால் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சி அது என்பதை தான் உணர்ந்ததாகக் கூறுகிறார்.

ராமையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த ஒரு நிகழ்வு, அம்பேத்கருடன் நெருங்கிப் பழகி, அண்மையில் மறைந்த பகவான் தாஸ் அவர்களுடன் அவருக்கிருந்த நட்பு. அவரோடு தொடர்ந்து உரையாடுவதும், அவரோடு பயணங்கள் மேற்கொண்டதும் அவருக்கு வற்றாத சமூக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகவான் தாஸோடு அவர் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளார். பல்வேறு இடங்களில் அவர் தலித் தொடர்பான உரை நிகழ்த்தி இருக்கிறார். தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் குறித்து பல பல்கலைக் கழகங்களில் ராமையா ஆற்றிய உரை, அவரை உலகளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இன்றைக்கு ராமையா அவர்கள் தலைமையேற்றுக் கொண்டிருக்கும் டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில், சாதி பற்றிய கருத்தியல்களை தலித் நோக்கில் ஆராய்வதற்கான தத்துவங்களையும், அம்பேத்கரியலையும் ஒரு பாடத்திட்டமாக – கல்வியியல் நோக்கில் மாணவர்களுக்கு கற்றல் பொருளாகத் தரப்பட்டிருக்கிறது என்றால், அது ராமையாவின் கடுமையான உழைப்பால் நிகழ்ந்தது என்பது பொய்யில்லை.

2009 செப்டம்பர் முதல் 2010 சனவரி வரை, அமெரிக்காவின் நியூயார்க்கில் தரப்படும் ‘புல்பிரைட் ஸ்காலர்ஷிப்' ராமையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. சமூகப் பணி பிரிவில் இந்த உதவித் தொகையை வாங்கிய முதல் தலித் – இந்தியாவிலேயே ராமையா அவர்கள்தான். அது கிடைத்தவுடன் எந்த பல்கலைக் கழகத்திற்குச் செல்வது என்ற கேள்வி எழுந்த வுடன் – ராமையா தேர்ந்தெடுத்தது அம்பேத்கர் படித்த கொலம்பியா பல்கலைக் கழகம்.

அப்பல்கலைக்கழகத்திலிருந்து எவராவது ஒருவர் ராமையாவுக்கு பரிந்துரைக் கடிதம் தர வேண்டும். அங்கு பணியாற்றும் மூத்த பேராசிரியர் எலினார் ஜெலியட் என்பவரை அணுகியிருக்கிறார் ராமையா. அவர் அப்பல்கலைக் கழகத்தில் தலித் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை வாசித்திருப்பவர். அவரிடம் ராமையாவைப் பற்றி சொன்ன வுடனேயே ராமையாவின் பல கட்டுரைகளைத் தான் படித்திருப்பதாகவும், அவருக்கு தான் கடிதம் தருவதாகவும் கூறி, ஆகச் சிறந்த கடிதம் ஒன்றை ராமையாவுக்காக அவர் தர, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அவர் சிறப்புற பணியாற்றி இருக்கிறார்.

அவர் அங்கு பணியாற்றும் காலத்தில் தலித் விடுதலைக் கருத்தியல் குறித்த பல விரிவுரைகளை முன்வைத்தார். அங்கு இது குறித்த விவாதங்கள் எழுவதற்கு முக்கியக் காரணமாக அது அமைந்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக் கழகத்திலும் இவர் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவ்வாறு தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் ராமையா தலித் கருத்தியலை பரப்புவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல ஆய்வுக் கட்டுரைகளை ராமையா எழுதியிருக்கிறார். மகாராட்டிர அரசின் உதவியோடு, மகாராட்டிர மாதங் சமாஜின் சமூக, பொருளாதார கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி குறித்து ஓராய்வினை அவர் முடித்திருக்கிறார். மகாராட்டிர அரசின் சமூக நீதித் துறையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த வரவு செலவு அறிக்கையின் மீதான இறுதி அறிக்கையை அளித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு இயக்கத்தின் பாதிப்புகளைப் பற்றி அவர் ஆய்வு செய்திருக்கிறார்.

சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955, எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆகிய சட்டங்களின் கீழ், தென் தமிழ் நாட்டில் வழக்குப் பதிவுகள் செய்யப்பட்ட குற்றவாளிகள் அதிகளவில் விடுதலை செய்யப்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, ஒரு விரிவான அறிக்கையை இந்திய அரசின் சமூக நீதித் துறையிடம் அளித்து இருக்கிறார்.

இப்படி பல ஆய்வுகளை மேற்கொண்டு பணியாற்றிவரும் ராமையா, சாதி என்பது பல்லாண்டுகளாக மக்கள் மனதில் இருக்கும் ஒரு மனநோய். இது, ஒரு மாத்திரையில் குணப்படுத்தக்கூடிய நோயல்ல. தலித்துகள் இந்நோயிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள். ஆனால், தலித் அல்லாதவர்கள் இன்னும் இந்த நோயிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை சாதி என்னும் மனநோயிலிருந்து காப்பாற்றி, கரையேற்றும் பெரும் பொறுப்பு தலித்துகளுக்கு இருக்கிறது என்று ஆணி அடித்ததைப் போல் கூறுகிறார்.

அதற்கு புரட்சிகர எண்ணங்களும் செயல்பாடுகளும் மிகவும் அவசியம் என்று கருதும் பேராசிரியர் ராமையா, அனுபவங்களும் அறிவு நேர்மையும் கொண்ட ஓர் ஆளுமை.

– யாழன்ஆதி

ராமையாவை தொடர்பு கொள்ள : 09819804728 

       கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தும் சமூகமே விடுதலையை நோக்கி நகரும் என்பது, சமூக இயங்கியலின் முக்கிய விதி. எனவே, கல்வி மூலம் தங்கள் சமூக இழிவுகளை அறுத்தெறிய முனைகின்றவர்களையும் நாம் ‘மாற்றுப்பாதை'யில் இணைத்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையதொரு சாதனையாளர்தான் பேராசிரியர் ராமையா. இவர், மும்பையிலுள்ள ‘டாட்டா சமூகப் பணி நிறுவன'த்தின் துறைத் தலைவராக பணியாற்றுகிறார். சமூகப் பணியில் (குணிஞிடிச்டூ ஙிணிணூடு) இந்தியாவின் முக்கிய உயர் கல்வி நிறுவனமாகத் திகழும் இங்கு, அம்பேத்கரிய பார்வையில் சாதி ஒழிப்பிற்கான வழிகளைக் கற்பித்து ஆய்வாளர்களையும், அறிவாளர்களையும் உருவாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார் ராமையா.

தமிழ்நாட்டின் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் பரமக்குடிக்கு அருகில் இருக்கும் நெடும்புலி கிராமத்தில், விவசாய வேலை செய்யும் பெற்றோர்களுக்கு பிறந்தவர் ராமையா. சிறு வயதில் ராமையாவுக்கு படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை. இசைதான் அவரை ஆக்கிரமித்திருந்தது. ஓரளவு வருமானம் இருந்ததால், அவருடைய அப்பாதான் ராமையாவை கட்டாயப்படுத்தி படிக்க வைத்திருக்கிறார்.

ராமையா தனது தொடக்கக் கல்வியை கொத்தமங்கலத்திலும், உயர்நிலைக் கல்வியை பார்த்தீபனூரிலும் முடித்திருக்கிறார். இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் படித்தபோது, ஆங்கிலத்தில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்னும் உந்துதல் அவருக்குள் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் எப்படியாவது ஆளுமை பெற வேண்டும் என்கிற அந்த எண்ணம், அவரை மேலும் உழைக்கத் தூண்டியது. இளங்கலைப் படிக்கும்போது தமிழ் வழியில் சேர்ந்துதான் படித்திருக்கிறார். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தேர்வு எழுதும்போது தமிழில் எழுதுவார்கள். ஆனால் ராமையாவோ தமிழ் வழியில் சேர்ந்து, இறுதி ஆண்டுத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதி, வகுப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்!

இதனூடே அவர் தன்னுடைய உள்ளக் கிடக்கையான இசையையும் கற்று, பல இசைக்கருவிகளை மீட்டுகின்ற ஆற்றலையும் பெற்றிருக்கிறார். தன்னுடைய முதுகலையில் சமூகப் பணியைப் பாடமாக எடுத்துக் கொண்டு, சென்னை லயோலா கல்லூரியில் படித்திருக்கிறார். இளம் ஆய்வாளருக்கான பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முடித்திருக்கிறார். தான் வளர்ந்த கிராமத்தில் அனைவருமே தலித்துகளாக இருந்ததால், சிறுவயதில் நேரடியான சாதிய ஒடுக்குமுறை எதற்கும் தான் ஆளாகவில்லை என்று அவர் கூறியதைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. அந்த வியப்பு தீர்வதற்குமுன் அவர் சொன்ன அடுத்த செய்தி, நம்மை ஏமாற்றமடையச் செய்தது.

டில்லியில் படிக்கும்போது, முனைவர் ஆய்வுக்காக அவர் எடுத்துக் கொண்ட ஆய்வுத் தலைப்பு – ‘தமிழ் நாட்டின் கிராமங்களில் புரட்சிகர இயக்கங்களும் தலித் அடையாளங்களும்' என்பதாகும். அதற்காக தகவல் சேகரிக்க கிராமங்களுக்குச் செல்லும்போது, அவருடைய உயர் படிப்பையும் கருத்தில் கொள்ளாமல், சாதிய ஆதிக்கம் அவரை கால்களில் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொல்லி, கைகளில் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது. ஒரு தலித் எத்தகைய உயர் நிலையை அடைந்தாலும், சாதிய இழிவு மட்டும் நீங்காது என்பதை அவர் இத்தருணத்தில்தான் உணர்ந்திருக்கிறார்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழத்தில் படிக்கும்போது, இடது சாரி இயக்கத்தில் இணைந்து பணியாற்றி யுள்ளார். இப்பல்கலைக் கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர்களில் ஒருவரான நந்துராம் அவர்கள்தான் ராமையாவுக்கு அம்பேத்கர் நூல்களை வாசிக்கத் தந்திருக் கிறார். அதன் பிறகு இடதுசாரி இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் ராமையா. அம்பேத்கரின் நூல்களைப் படித்த பிறகுதான் நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம்; மதத்தின் பெயரால் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சி அது என்பதை தான் உணர்ந்ததாகக் கூறுகிறார்.

ராமையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த ஒரு நிகழ்வு, அம்பேத்கருடன் நெருங்கிப் பழகி, அண்மையில் மறைந்த பகவான் தாஸ் அவர்களுடன் அவருக்கிருந்த நட்பு. அவரோடு தொடர்ந்து உரையாடுவதும், அவரோடு பயணங்கள் மேற்கொண்டதும் அவருக்கு வற்றாத சமூக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகவான் தாஸோடு அவர் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளார். பல்வேறு இடங்களில் அவர் தலித் தொடர்பான உரை நிகழ்த்தி இருக்கிறார். தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் குறித்து பல பல்கலைக் கழகங்களில் ராமையா ஆற்றிய உரை, அவரை உலகளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இன்றைக்கு ராமையா அவர்கள் தலைமையேற்றுக் கொண்டிருக்கும் டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில், சாதி பற்றிய கருத்தியல்களை தலித் நோக்கில் ஆராய்வதற்கான தத்துவங்களையும், அம்பேத்கரியலையும் ஒரு பாடத்திட்டமாக கல்வியியல் நோக்கில் மாணவர்களுக்கு கற்றல் பொருளாகத் தரப்பட்டிருக்கிறது என்றால், அது ராமையாவின் கடுமையான உழைப்பால் நிகழ்ந்தது என்பது பொய்யில்லை.

2009 செப்டம்பர் முதல் 2010 சனவரி வரை, அமெரிக்காவின் நியூயார்க்கில் தரப்படும் ‘புல்பிரைட் ஸ்காலர்ஷிப்' ராமையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. சமூகப் பணி பிரிவில் இந்த உதவித் தொகையை வாங்கிய முதல் தலித் இந்தியாவிலேயே ராமையா அவர்கள்தான். அது கிடைத்தவுடன் எந்த பல்கலைக் கழகத்திற்குச் செல்வது என்ற கேள்வி எழுந்த வுடன் ராமையா தேர்ந்தெடுத்தது அம்பேத்கர் படித்த கொலம்பியா பல்கலைக் கழகம்.

யாழன்ஆதி

 ராமையாவை தொடர்பு கொள்ள : 09819804728

Pin It