கீற்றில் தேட...

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆங்கில நாளிதழ் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நாளிதழான நியூயார்க் டைம்ஸ் மோடியின் அமைச்சரவையை குற்றவாளிகளின் கூடாரம் என இகழ்ந்துள்ளது.

ஊழல் ஒழிப்பு, தூய்மையான அரசியல் என மக்கள் முன்னிலையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு பெரும்பான்மை வெற்றியுடன் பிரதமராக முடிசூட்டிக் கொண்ட மோடி அவர்களுக்கு சமீபத்தில் தேர்தல்கள் நடந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவிலும் வெற்றிதான் கிடைத்துள்ளது.ச்

தற்போது மோடி 21 புதிய நபர்களை தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார்.இதில் ஐந்து பெர் மீது கர்ப்பழிப்பு மற்றும் கலவர குற்றச்சாட்டுகள் உள்ளது. ஏழு பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ராம் சங்கள் சகாரியா என்பவர் இளநிலை கல்வி அமைச்சராக பொருப்பேற்றுள்ளார். இவர் மீது மத வன்முறையை தூண்டியது, கொலை முயற்சியில் ஈடுபட்டது என இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி குற்றவாளிகள் அமைச்சரவையில் உள்ளனர் என்கின்ற வாதத்தை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது சம்பந்த பட்ட நபர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்ட வழக்கு நடைபெறுகிறதே தவிற அவர்கள் குற்றவாளிகள் அல்ல. என்று விளக்கமளித்துள்ளார்.

மோடியின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை குற்றவாளி என்று நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பல அரசியல் நோக்கம் கொண்டதாகும் என கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சொல்வது சரிதான். ஒருவரை குற்றவாளி என்றோ அல்லது அவர் நிரபராதி என்றோ முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம்தான். அதே சமயம் குற்றங்களில் பலவற்றையும் அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறுவது ஏற்புடைதல்ல. இதில் சட்டத்துறை மற்றும் நீதித்துறையின் மூலம் ஒரு வழக்கை பல வருடங்கள் இழுத்தடிப்பதும் நீதியை தாமதப்படுத்துவதும் வாடிக்கையே.

இந்தியாவில் உள்ள் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என இந்தியாவின் அசோசியசன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபாம்ஸ் என்ற அமைப்பு கூறியுள்ளது.

குறைந்த பட்சம் மோடி இதுபோன்ற குற்றவாளிகளை அமைச்சரவையில் சேர்ப்பதை தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இந்த நியமன்ங்கள் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் குறித்து தவறான எண்ணங்களையும், குற்றவாளிகள் பதவிகளுக்கு வரும் பட்சத்தில் அவர்கள் சட்டத்திட்டங்களை மதித்து செயல்படுவார்களா? என்ற கேள்வியினை எழுப்பும்.

இந்திய மக்களில் பெரும்பான்மையினர் ஜனநாயக வடிவிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் " சிறிய அமைச்சரவை பெரிய செயல்பாடுகள் " என முழங்கினார். தற்போது 21 நபர்களை அமைச்சரவியில் சேர்த்திருப்பதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை.

மோடி இந்தியர்களிடம் தான் ஒரு வித்தியாசமான தலைவர் என கூறியுள்ளார். அது போல அவரது கட்சியின் சில மேல்மட்டத்தினர் அமைச்சரவையின் மொத்த அதிகாரமும் மோடி வசமே இருப்பதாகவும் அமைச்சரவை நியமனங்கள் எல்லாம் ஒரு பொருட்டு இல்லை எனவும் கூறியுள்ளனர். (Carol Giacomo, Nov-10, Newyork Times)

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் அமைச்சரவையை குற்றவாளிகளின் கூடாரம் என்றும் இந்திய மக்களில் பெரும்பான்மையினர் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கையிழந்து விட்டனர். என்று செய்தி வெளியிட்டிருப்பது நிகழ்வுகளின் நிதர்சனமாகும்!

பல்லாயிரக்கணக்கான உயிர்களை குஜராத்தில் படுகொலை செய்த மோடியால் இந்தியாவை வழிநடத்த இயலாது என ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே இந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கருத்து வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்துணை கறைகளுடன் ஆட்சியில் இருக்கும் இந்துத்துவத்தை மாய்ப்பதும் போலி ஜனநாயகத்தை ஒழிப்பதும் பொருப்புள்ள ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும்.