உலக நாகரிகங்களின் தொல்லெழுத்துகள் அனைத்தும் படிக்கப்பட்டுவிட்டன. படவுருத்தன்மை கொண்ட சுமேரிய ஆப்பெழுத்து (Cuneiform) வடிவங்களும், எகிப்திய புனிதப்பொறிப்பு (Hieroglyphs) வடிவங்களும் அவற்றின் படவுருத்தன்மையின் காரணமாகப் படிக்கப்பெற்றுவிட்டன. உயிர்மெய்யன் (Syllabary) எழுத்து முறையான இலீனியர்-பி மற்றும் சைப்ரட் எழுத்துகளும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்பெற்றுவிட்டன. சிந்து எழுத்து முழுமையான படவுருவன் முறைக்குரிய சொல்லசையன் (logo syllabic) எழுத்து முறையாக இருந்திருப்பின் இதற்குள் படிக்கப்பெற்றிருக்கும்.

 1.0 சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண உரோசட்டா (Rosetta) கல்வெட்டுப் போன்றதொரு கல்வெட்டிற்காகத் தவம் கிடக்கிறான் தமிழன். சிந்து எழுத்தைப் படித்துக் காட்டவியலாதபோது ஆய்வாளர்கள் சாம்போலியனுக்குக் கிடைத்த உரோசட்டா மூவெழுத்துக் கல்வெட்டு போன்ற ஒன்று சிந்து எழுத்துக்குக் கிடைக்காதது நமது நற்பேறின்மையே என்று கூறிவிடுகின்றனர்.

1.1 சிந்து எழுத்தைப் படிப்பதற்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்பது உலக ஆய்வாளர்களது கருத்து. அவற்றுள் தலையாயது சிந்து எழுத்து குறித்து அவர்கள் கொண்டுள்ள முன்முடிவுகள் என்பது உறுதி. சிந்து எழுத்து படவுருக்களுடன் தொடர்புடைய சொல்லசையன் (Logo syllabic) என்பதாக அவர்கள் முடிவு செய்துவிட்டனர். சிந்து எழுத்து வடிவங்கள் அழகுணர்வும், அறிவியல் தன்மையும் கொண்டு உருவாக்கப் பெற்றவை. கூட்டெழுத்து வடிவங்களே சிந்து எழுத்தை ஓவியத்தன்மை கொண்டனவாகக் கருதத்தக்கவாறு அமைத்துவிட்டன.

1.2. உலக நாகரிகங்களின் தொல்லெழுத்துகள் அனைத்தும் படிக்கப்பட்டுவிட்டன. படவுருத்தன்மை கொண்ட சுமேரிய ஆப்பெழுத்து (Cuneiform) வடிவங்களும், எகிப்திய புனிதப்பொறிப்பு (Hieroglyphs) வடிவங்களும் அவற்றின் படவுருத் தன்மையின் காரணமாகப் படிக்கப்பெற்றுவிட்டன. உயிர்மெய்யன் (Syllabary) எழுத்து முறையான இலீனியர்-பி மற்றும் சைப்ரட் எழுத்துகளும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்பெற்றுவிட்டன. சிந்து எழுத்து முழுமையான படவுருவன் முறைக்குரிய சொல்லசையன் (Logo syllabic) எழுத்து முறையாக இருந்திருப்பின் இதற்குள் படிக்கப்பெற்றிருக்கும்.

1.3 சிந்து எழுத்தினைப் படிக்க மரபுமுறைப் பார்வையை விடுத்து, எவற்றுடனும் சாராத, நுண்ணாய்வு தேவைப்படுகிறது. மாற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சிந்து கூட்டெழுத்தில் காணும் வடிவழகும், பொருளுணர்வுடன் கூடிய வடிவமைப்புமே சிந்து எழுத்தை ஓவிய -படவுருத்தன்மை கொண்டனவாகக் கருத வைத்துவிட்டன. ஆனால், அதன் வடிவம் எந்த ஒரு இயற்கைப் பொருளின் அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு இருக்கும் ஒன்றிரண்டும் தனக்குரிய பொருளை வெளியிடுவதாகக் கருத முடியவில்லை. எனவே, படவுருத் தன்மையுடைய சொல்லசையன் என்னும் பொதுமைக் கருத்தை விலக்கி, அவ்வடிவங்களின் சிறப்புத் தன்மைகளைக் காண முயலவேண்டும்.

2.0 சிந்து எழுத்தை வடிவமைப்பு அடிப்படையில் (1) எளிய அடிப்படை வடிவங்கள் (2) குறியீடேற்ற அடிப்படை வடிவங்கள், (3) கூட்டு வடிவங்கள் என்பதாகப் பகுக்கலாம். இவற்றைத் தவிர தொடர்நிலையில் ஏற்படும் இடைவெளியை நிரப்பப் படவுருக்கள், குறியீடுகள், எண்கள் மற்றும் சிந்து எழுத்து முறைக்கு முந்திய எழுத்து முறைகளின் எச்ச வடிவங்களையும் கலந்து ஓர் ஒருங்கிணைந்த எழுத்து முறையாக அமைத்துள்ளனர். எகிப்திய எழுத்து முறை இத்தகையதென்று அறிஞர்கள் கூறுகின்றனர்.1 இம்மூவகை வடிவங்களும் எத்தகைய அடிப்படை வடிவங்களால் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ந்து, பிரித்தறிய வேண்டும். அவை, செயற்கையான வடிவியல் தன்மையுடைய அடிப்படை வடிவங்களாலேயே உருவமைக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். அவ்வடிவங்கள்:

இவற்றை ஓவியத் தன்மை கொண்ட படவுருக்களாக எவரும் கருத இயலாது. இத்தகைய வடிவியல் கோணமுடைய, செயற்கை வடிவங்களைப்பற்றி நுணுகி ஆராய்வதே சிந்து எழுத்துச் சிக்கலைத் தீர்ப்பதன் முதற்படியாக அமையும்.

2.1 மேற்காணும் வடிவங்களுடன் மேலும் சில எளிய குறியீடு ஏற்காத அடிப்படை வடிவங்களும் சிந்து எழுத்துப்பட்டியலில் உள்ளன.2 அவற்றையும் தொகுத்து இந்தப் பட்டியலைக் கீழ்க்கண்டவாறு நிறைவு செய்யலாம்.

இவ்வடிவங்கள் மேற்கூறிய மூவகையான வடிவங்களிலிருந்து  பிரித்தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டு முறையில் மாற்று வடிவங்களையும், ஒப்புடை வடிவங் களையும் விலக்கித் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர வேறு வடிவங்கள் எவற்றையும் சிந்து எழுத்தில் காட்ட இயலாது என்பது உறுதி.

2.2 மேற்காணும் செயற்கை வடிவங்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது என்று உணர முடிகிறது. பொதுவாக நாகரிக வளர்ச்சியோடு மொழிவளர்ச்சியும், மாநகர நாகரிகத்தின் வளர்ச்சியோடு எழுத்துமுறை வளர்ச்சியும் தொடர்பு கொண்டுள்ளன. சிந்துவெளியின் மாநகர வளர்ச்சி நிலைக்கு ஒப்பான வளர்ச்சியை அதன் எழுத்து முறையிலும் காண்கிறோம். நகரமைப்பு, கட்டடக்கலை, அளவை முறைகள், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறை வளர்ச்சியின் பட்டறிவு எழுத்துமுறை அமைப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.

3.0 சிந்து எழுத்தின் மிகுவளர்ச்சி, அதன் பரவல் என்பவை இருவகையானவை. முத்திரை எழுத்தின் பரவல் மகாராட்டிரத் தய்மாபாத்துடன் முடிகிறது. அதன் எழுத்துத் தொடர்பான பரவலை, இலங்கை யாழ்ப்பாணம் வரையிலும் காண்கிறோம். குசராத்தில் உள்ள பேட் துவாரகை, தமிழகத்தில் பொதிகை மலைக்குகை, கீழ்வாலை, பெருமுக்கல் ஆகிய இடங்களிலும், இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் இந்த எழுத்துமுறையையும், அதன் தொடர்வளர்ச்சி நிலையையும் காணலாம்.

3.1 குசராத் பேட்துவாரகை3

வ்வ்ர் ணா ண வர ய் ண் ம

                                       = மண்ய்வரணணாவ்வோர்

இதன் முதல், மூன்றாவது (வலமிருந்து) வடிவங்கள் சிந்து எழுத்து தமிழியாகும் மாற்றத்தைக் காட்டுகின்றன.

3.2 பெருமுக்கல் (தமிழ்நாடு)4

இதன் முதலெழுத்து தவிர பிற எழுத்துகளில் தமிழி எழுத்தாகும் மாற்றம் உள்ளது.

3.3. கீழ்வாலை (தமிழ்நாடு)5

அ ர ச் ர்                      = அரசர்

இதன் முதலெழுத்து தவிர பிற எழுத்துகளில் தமிழி எழுத்தாகும் மாற்றம் உள்ளது.

த வ ச ச தவ ரவ்                    = தவச சதவரவ்

தவ சய்ய சரை                       = தவசய்ய சரை

இவ்வடிவங்கள் வட்டார வழக்கு வடிவங்களாக உள்ளன.

3.4 பொதிகை மலைக்குகை (தமிழ்நாடு)6

மூ அய் தவ ண ண் தன் இன் தவ

= மூ அய் தவணந்தன் இன் தவ

இவ்வெழுத்துகள் காலத்தால் முந்தியவை. சிந்து எழுத்தை நன்கறிந்தவர் எழுதியது.

3.5 யாழ்ப்பாணம் ஆனைக்கொட்டடி (இலங்கை)7

ம ய ன            = மயன

த் வே கோ = கோவேத்த

இது ஒரு குயவர் முத்திரை. கோவேத்து - வேட்கோவர் = குயவர்

3.6 இவ்வடிவங்கள் தெளிவான சிந்து எழுத்து வடிவங்களாகவும், தமிழியாக மாறும் தெளிவான மாற்றங் களுடனும் உள்ளன. பேட்துவாரகை எழுத்து தமிழியாகும் தொடக்க நிலையையும், பெருமுக்கல் எழுத்துகள் இடை நிலையையும், யாழ்ப்பாணம் எழுத்து சிந்து எழுத்து முழுமை யான தமிழியாகும் இறுதி நிலையையும் காட்டுகின்றன. அதன்பின், தமிழியின் முழுவளர்ச்சி கி.மு. 8-6 நூற்றாண்டு களில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

4.0 இத்தகைய வளர்ச்சி தமிழகத்திலேயே நடை பெற்றுள்ளது. இதனை நாம் தமிழகத்தில் கிடைக்கும் பானை யோடுகளில் கூட சிந்து எழுத்து வடிவங்கள் கிடைப்பதி லிருந்து அறியலாம். தமிழகப் பெருங்கற்கால வாழிடங் களாகிய கொடுமணல், சாணூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ள இவ்விரு வகை எழுத்து வடிவங்கள் வெறும் பானைக்கீறல்களாக மட்டும் இருக்க முடியாது. எ-டு சாணூர்8:

 ஆ ய வ ர்        = ஆயவர்

சிந்து முத்திரைகள் போல சாணூர் எழுத்துகளும் வலமிருந்து இடமாக எழுதப்பெற்றுள்ளன. இதன் காலம் கி.மு. 1400-800 என்று திரு. எஸ்.ஆர். இராவ் வரை யறுத்துள்ளார்.9

4.1 சிந்து எழுத்தும் தமிழி எழுத்தும் ஒன்று கலந்த நிலையில் கிடைப்பது அவற்றின் உறவு - மரபு - வரலாற்றுத் தொடர்பை அறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. இவற்றின்  அடிப்படை வடிவங்களைத் தேர்வு செய்து ஒப்பாயும்போது அவற்றிடையே காணப்பெறும் வடிவ - ஒலிநிலைகள் மிகப் பொருந்தி அமைந்துள்ளமை தெளிவாகின்றது. ஒன்றிரண்டு வடிவங்கள் மட்டுமே சற்று மாறுபட்டு அமைந்துள்ளன. எ-டு.

4.2 சிந்து எழுத்தின் ஙகர, நகர, னகர மெய்கள் தமிழியில் மாறியுள்ளன. மீன் வடிவுடன் ழகரமெய் மட்டுமே பொருந்துகிறது. தமிழியின் ல-ள வடிவங்களுடன் சிந்து எழுத்தேதும் பொருந்தவில்லை. எனவே, இவை பிற்காலத் தில் உருவாக்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழியின் மொழி யாக்க அடிப்படையில் பார்த்தால் சிந்து எழுத்தின் மீன் வடிவம் ல-ழ-ள வடிவங்களை ஒலிக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். அய், அவ் வடிவங்கள் சிந்துவில் ஆகார எழுத் தடிப்படையில் ஒன்று, இரண்டு கோடுகளிட்டு அமைக்கப் பெற்றுள்ளன. அவ்வொலிகள் தொடர்நிலையில் அவ்வாறே அய், அவ் என ஒலிப்பதால் அப்படியே இங்கும் பயன் படுகிறது.

4.3 சிந்து எழுத்துக் கூட்டு வடிவங்களும், சிந்து அடிப்படை வடிவங்களைக் கொண்டு அமைக்கப் பெற்றவையே. அவற்றை நாம் பிரித்தறிந்து, தமிழியுடன் பொருத்தி அமைத்துப் பார்க்கலாம்.10

இக்கூட்டு வடிவங்கள் சிந்து - தமிழி எழுத்துமுறை களின் வடிவ - ஒலிநிலை ஒற்றுமையைக் காட்டுகின்றன.

4.4 சிந்து - தமிழி எழுத்துகளிடையே வடிவ - ஒலி ஒப்புமைகள் உள்ளதென்று பார்த்தோம். அதனடிப்படையில் சிந்து முத்திரை எழுத்துகளைப் படிக்க முடியுமா என்று காண லாம். இதற்குச் சிந்து எழுத்து இயைக்கோவையிலிருந்து பரவலாக மாதிரிகளைத் திரட்டிப் படித்துக் காட்டலாம்: எ.டு.

1004   ல் ர் இட அய் இள இட இட

தமிழி  ழ் ர் இட அய் இழ இட இட = இட இட இள அய் இடரில்

1008   கோழி யார் இரு ள் ளா ய் மு ன்

தமிழி  கோழி யார் இரு ழ் ழா ய் மு ன்       = கோழியார் இருள்ளாயி முன்

1042   கய” ல அரசு ட இரு ஆ

தமிழி  கய” ழ அரசு ட இரு ஆ         = கய” கயல அரசுட இரு ஆ

2169   அ ம யார் ட ன ன் தொழு

தமிழி  அ ம யார் ட ன ன் தொழு    = அமயார்த்தனன் தொழு

 3396 வனா இல் ல ய் மூ ஞான் னி

தமிழி  வன இழ் ழ ய் மூ ஞான் னி  = வனா இல்லய் மூ ஞான்னி

 

 4016   தவ” ம லா ள அரசண ஆ

தமிழி  தவ” ம ழா ழ அரசண ஆ      = தவ” மலாள அரசன ஆ

 

4073   மி” மூ ல் ய்ய காவ்வ

தமிழி  மி” மூ ழ் ய்ய காவ்வ

= மி” மூலிய காவ்வ

 

4262   ள ண ட ன ய்ய ஆ

தமிழி  ழ ண ட ன ய்ய ஆ

=(இ)ள நடனய்ய ஆ

 

6306   இ ட் ர் இல் லா வ்வ இரு ஆ

தமிழி  இ ட் ர் இழ் ழா வ்வ இரு ஆ = இடர் இல்லாவ்வ இரு ஆ

 

 

7244   கோயில் இட ண்ண ஆ காவ்வ

தமிழி  கோயில் இட ண்ண ஆ காவ்வ       = கோயில் இடண்ண. ஆ காவ்வ

 

8017   கம அய் வய லா ள ன்

தமிழி  கம அய் வய ழா ழ ன்

= கம அய் வயலாளன்

8040   தவ மலய்” ய்யரி ட்டத்

தமிழி  தவ மலய்” ய்யரி ட்டத்

= தவ மலய்” மலயய்யரிட்டது

9111   ய் ம ட்” ளார் ஆ சி ணா

தமிழி  ய் ம ட்” ழார் ஆ சி ணா         = இமத்” இமத்துளார் ஆசினான்

 

9851   அரசண ர ய லார் ஆ காவ்வ

தமிழி  அரசண ர ய ழார் ஆ காவ்வ            = அரசனரயலார் ஆ காவ்வ

 

9904   கான் அரச கய கய ன்

தமிழி  கான் அரச கய கய ன்

= கான் அரசன் கய்கயன்

 4.5 சிந்து எழுத்து மெய்யெழுத்தை மிகுதியாகக் கொண்ட செயற்கை உயிர்மெய்யாகிய –அசையெழுத்து முறையென்று உறுதியாகிறது. சிந்து எழுத்தின் காலத்தி லேயே கி.மு. 2250 அளவில் மினாவோன் கிரீட் தீவில் இலீனியர்-பி எனப்படும் உயிர்மெய்யன் (Syllabory) எழுத்துமுறை வழங்கியுள்ளது. உயிர்மெய்யன் எழுத்து ஒலிநிலை எழுத்தின் தொடக்கமாகும். இதிலிருந்தே மெய் யெழுத்து முறைகள் தோன்றின. சிந்து எழுத்து முறையிலும் உயிர்மெய்யன் எழுத்துமுறைக்குரிய சான்றெச்சங்கள் உள்ளன.

உயிர்மெய்யன் முறையின் பயன்பாட்டிலுள்ள கடுஞ்சுமையால் மக்கள் மெய்யெழுத்துகளைக் கண்டு பிடித்துப் பயன்படுத்தினர். சிந்து மக்களும் கி.மு.2500 அளவில் அதனையே செய்திருக்க வேண்டும். மெய்யெழுத்து முறையே ஒலிநிலை (Phonetic) எழுத்தின் தாயென்பதால், சிந்து எழுத்தே உலக ஒலிநிலை எழுத்தின்  தாயெனலாம்.

5.0 மேற்காணும் சான்றுகள் சிந்து எழுத்தைத் தமிழி எழுத்துகளின் அடிப்படையில் படிக்க முடியுமென்று உணர்த்துகின்றன. இவை, வடிவநிலை – ஒலிநிலைகளில் பொருந்தியுள்ளன. எனவே, சிந்து எழுத்தைப் படித்தறிய உதவும் உரோசட்டா கல்வெட்டு என்று தமிழிக் கல்வெட்டுகளைக் கூறலாம்.

குறிப்புகள்:

1.  Swain. J.W., A History of world Civilizatin, 2 Ed., 1984, Eurasia Publishing House, New Delhi.

2. Mahadevan, Iravatham, The Indus Script, Text, Concordance and Tables, A.S.I., New Delhi,

1977. கட்டுரையில் வரும் முத்திரை எண்கள், வடிவங்கள், முத்திரைகள் இந்நூல் அடிப்படை யில் திரட்டப்பெற்றவை.

 3.  Marine Archaeology of Indian Ocean Countries, Ed, S.R. Rao, NIO, Goa, 1988, Excavation of submerged Ports - Dwaraka a case Study, S.R.Rao, Plates 36, Bet - Dwaraka Pottery Vessel, Post - Harappan Script.

4.  பவுன்துரை, டாக்டர், இராசு, தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம் பரம், 2001 பெருமுக்கல் கீறல் வரி வரைவுகள், பக். 132.

5.  திரு.அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களது படியேடு, கீழ்வாலை எழுத்து வடிவங்கள்; மற்றும், கட்டுரை: தினமணி சுடர் 1-8-1982.

6.  Engreved Graffite Panel, Pothikai Hills finds, Indian Express, 23 March, 1985.

7.  Indrapala, Dr.K. University of Jaffna, Sri Lanka, Is it an Indus - Brahmi epigraph?, The Hindu, 26 April 1981.

8.  Bannerjee N.R and Soundara Rajan K.V. 1995, Sanur 1950, 1952’ A Megalithic Site in district Chingleput, Ancient India, 15.4-42.

9.  Marine Archaeology of Indian Ocean Countries, அதே நூல் Excavation of submerged Ports - Dwaraka a case Study, S.R. Rao: Post - Harappan and Megalithic Scripts.

10.       சிந்து எழுத்துக் கூட்டு வடிவங்களின் அமைப்பில், சிந்து எழுத்துடன் ஒத்த வடிவங்கள் கொண்ட தமிழி எழுத்துகளால் தமிழியில் கூட்டு வடிவங்கள் அமைத்துக் காட்டப்பெற்றுள்ளன. இக்கூட்டு வடிவங்கள் இக்கட்டுரைக்காக மட்டுமே அமைக்கப்பெற்றவை.

Pin It