மலையில் இருந்து அலுமினியம் தாதுக்கள் வெட்டி எடுக்கவும்   காடுகளிலிருந்து இரும்பு  தாதுக்கள் பெற்றிடம்'' இந்தியா இராணுவ  மயக்கமாக்கப்பட வேண்டும். இராணுவம் மயமாக்குவதற்கு  எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அந்த எதிரிகள் மாவோயியர்கள்.''

மேற்சொன்ன வாக்கியம் இந்தியாவின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை  திடமாக உணர்த்துகிறது. வடகிழக்கு தேசங்களில், காஷ்மீரில் மற்றும் மத்திய இந்தியாவில் ஏன்  இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்வி எழுப்பினால் நிச்சயம் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு எதிரியை  இந்திய அரசால்   அடையாளம் காட்ட முடியும். மறந்து கூட அப்பகுதிகளில் எழுப்பப்படும் சனநாயக கோரிக்கைகளை பற்றி வாய் திறப்பதில்லை இந்திய அரசு. போஸ்கோவின் நிலப்பறிப்பு நடவடிக்கை அமைந்துள்ளது.

சூன் இரண்டாயிரத்து ஐந்தில் ஒரிசா அரசாங்கத் திற்கும் போஸ்கோ நிறுவனத்திற்கும் மாநிலத்தில் இரும்பு சுரங்கம் மற்றும் எஃகு  தொழிற்சாலை அமைப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அத்திட்டத்தின் அடிப்படை பண்புகள் பின்வருமாறு:

1. கியோஸாகர் மற்றும் சுந்தர் யார்க் பகுதியில் சுரங்கம் அமைக்கப்படும்.

 2. கடலோர மாவட்டம் ஜெகதிஸ்சிஸ் புரியில் எஃகு இயந்திர சாதன தொகுதி அமைக்கப்படும்.

3. ஜெகத்கிரி ஆற்று முகத்துவாரத்தில் சிறிய தனியார் துறைமுகம் அமைக்கப்படும்.

இதுவரை இல்லாத அளவு நேரடி அன்னிய "அய்யோ வன்முறை, உள்நாட்டு பயங்கரவாதம் என்று கூக்குரலிடும் ப.சிதம்பரம் முதல் அத்வானி வரை அவ்வன்முறையின் நியாயப்பாட்டைப்  பேசுவதில்லை.      புதிய பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்திய  நாளில்  இருந்து  இந்திய புதிய பொருளாதார கொள்கையின் வெளிப்பாடு என்பது மிகவும்  பின்தங்கிய சமூக நிலையில் உள்ளவர்கள் மேலும் பின் தங்கப்படுவதும், பணம் கொழுப்பேறிய வர்க்கம் மேலும் கொழுப்பேற  வசதி செய்யப்படுகிறது. தவிர வேறு எந்த சனநாயக செயல்பட்டும் எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. முதலீடு ஒரிசா பழங்குடி பகுதியில் திறந்து விடப்பட்டுள்ளது. அம்முதலீட்டின் விபரம்:

சுரங்கம், இரயில்வே வசதி, சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி, குடியிருப்பு வசதி, மற்றும் அலுவலக அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுத்த அனைத்து குடியுரிமை மறுக்கப்பட்டு வருகின்றன.

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் (கார்போர்ட்) நிறுவனங்களின் குப்பை  தொட்டிகளில் வீசப்படுகின்றன. வெளிநாட்டு  நிறுவனங்களின் அடியாட்களாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. "பாரத மாதா' க்கள் இன்று கார்போட் மாதா வாக மாறி இருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக செலவுகளுக்கு 7790 கோடியும் எஃகு இயந்திர சாதன தொகுதிக்கு 44,816 கோடியும் துறைமுக செலவுக்கு 202 கோடியும் ஆக மொத்தம்  திட்டத்தின் மதிப்பு 52,813 கோடி என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்ற  6029 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி இருக்கும். அதாவது 4044 ஏக்கர் நிலம்  சுரங்கத்திற்காகவும் 2000 ஏக்கர் நிலம் தொழிற்சாலை, அலுவலகம், குடியிருப்பு தேவை களுக்காகவும் கையகப்படுத்த வேண்டி இருக்கும்.

 20லிருந்து 25 ஏக்கர் வரை ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் தலைமை அலுவலகம் அமைக்க கையகப்படுத்த வேண்டி இருக்கும். இத்திட்டம் நடைமுறைப்படும்போது பல ஏக்கர் நிலம் தேவைப்படும் தனியார் நிலம் கையகப்படுத்துவதாக இருந்தால் நிலத்திற்கான இழப்பீட்டு  தொகையை போஸ்கோ நிறுவனம் வழங்கும்.

அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் என்றால் தொழிற்சட்டம் அடிப்படையில் பணம் அரசுக்கு செலுத்தப்படும். சுருங்கச் சொல்வது என்றால் மாவட்ட ஆட்சியாளர் நிலத்திற்கு விலையை நிர்ணயிப்பவர். இத்திட்டத்திற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப் படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மாநில அரசாங்கமே அதற்கான தேவையை நிறைவேற்ற வேண்டும்.

ஏறத்தாழ ஆண்டு ஒன்றுக்கு 7000 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மகாந்தி ஆற்று மூலம் இதை ஈடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இத்திட்டத்திற்கு எதிராக காந்தியவாதிகள் முதல் மாவோயியத் தோழர்கள் வரை எதிராக ஒருங்கிணைந்து குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால்  இதை  எதையும் உள் வாங்காத அரசு இயந்திரம் முழு மூச்சோடு போஸ்கோ நிறுவனத்திற்கு அடியாள் வேலை செய்து வருகிறது.

 செப்டம்பர் 2006 இல் போஸ்கோ நிறுவனம் துறைமுகம் அமைக்க சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதிக் கோரியது. மார்ச் 2007 இல் இதற்காக அரசால் அனுமதி வழங்கப்பட்டது.

 2007 இல்  எஃகு தொழிற்சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியது. சூலை 2007 இல் அனுமதி வழங்கப்பட்டது. முதல் கட்டமாக செப்டம்பர் 2008 இல் பழங்குடி மக்கள்  வாழும் பகுதிகளில் உள்ள நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக திசம்பர் 2009 ஆம் ஆண்டு வன நிலங்களை கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

சனவரி 2010இல் நடுவண்  சுற்றுச் சூழல் அமைச்சகம் வன  நிலங்களை கையகப்படுத்துவது நிபந்தனைக்குட்பட்டது. ஆகையால் வனத்தில் வாழும் வரலாற்று ரீதியான பழங்குடி உரிமைகள் காக்கப்படும் போதுதான் அனுமதி வழங்கப்படும் என அறிவித்தது. மார்ச் 2010ல் ஒரிசா அரசு போஸ்கோ நிறுவனம்  அமையும் பகுதியில்  காட்டில் வழி வாழ்ந்து வரும்  பழங்குடி மக்கள் யாருமில்லை என அறிவித்தது.

ஏப்ரல் 2010 இல் காட்டுப் பகுதியில்வழி வழியாக வாழ்கிற மக்கள் இருக்கிறார்களா என ஆய்வு செய்ய என்.சி.சக்சேனா குழு அமைக்கப்பட்டது.

சூலை 2010 இல் முன்னால் சுற்றுச் சூழல் செயலர் மீன்  குப்தா தலைமையில் நால்வர் குழு காட்டு நிலங்களை கையகப்படுதுதுவதில் ஏற்படும் சிக்கலை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2010இல் போஸ்கோ  திட்டத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது. அக்டோபர் 2010 இல் நால்வர் குழுவில் உள்ளவர்களுக்கு ஒருமித்த கருத்து நிலவவில்லை. ஆனாலும் அறிக்கை அரசுக்கு அளித்தனர்.

இறுதியாக சனவரி 2011இல் நடுவண் அரசு போஸ்கோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. போஸ்கோ திட்டம்  நிறைவேற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும். ஒரிசா மாநிலத்திற்கு அதிகம் வருமானம் கிடைக்கும் என பொய்  பரப்பல் செய்யப்படுகின்றன.   இவர்கள் சொல்படி வைத்துக் கொள்வோம்.

தன்மதிப்புடன் வாழும் பழங்குடி மக்களுக்கு இவ்வேலை வாய்ப்புகள் எப்படி உதவியாக இருக்கும் என்பது கேள்விக்குறியே?

புதிய பொருளாதார கொள்கையின் வெளிப்பாடு என்பது மிகவும் பின்தங்கிய சமூக நிலை உள்ளவர்கள் மேலும் பின் தங்கப்படுவதும் பணம் கொழுப்பேறிய வர்க்கம் மேலும் கொழுப்பேற வசதி செய்யப்படுகிறது. தவிர வேறு எந்த சனநாயக செயல்பட்டு எந்த வழிவகையும் செய்யப்படவில்லை.

 இத்திட்டத்தால் சுற்றுச் சூழல் முழுவதாக பாதிக்கப்படும் 2,80,000 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டி இருக்கும். ஒரிசாவின் நீர்  வளம் இதனால் பாதிக்கப்படும். 1,30,000 லட்சம் விலங்குகள் பாதிக்கப்படும்.  சுருக்கமாக  சொல்வது என்றால் இயற்கை சமன் நிலை அழிக்கப்பட வேண்டி இருக்கும்.  காட்டில் வாழும் 60 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்.

 மொத்தம் கையகப்படுத்த வேண்டிய நிலத்தில் 438 ஏக்கர் நிலம்தான் தனியாருக்கு சொந்தம் என குறைத்து சொல்லப்படுகிறது. ஆனால் நிலமற்ற  எண்ணற்ற பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு இக்காட்டை நம்பித்தான் இருக்க வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை காடுகளிலிருந்து வெளியேற்ற முதல் கட்டமாக போஸ்கோ நிறுவனத்தின் அடியாட்களும் ரவுடிகளும் முயற்சி செய்தனர். ஆனால் மக்களின் ஒற்றுமையாலும் சனநாயக வழிப் போராட்டங்களில் நிலங்கள் கைப்பற்ற முடியாமல் போனதால் அடுத்தக் கட்டமாக   இந்திய அரசின்  துணை இராணுவம் (போஸ்கோ படை)  கிராமங்களை சுற்றி வளைத்து மிரட்டுகிறது. மறுபுறம் சனநாயகம் வேடமணிந்து குழு அமைப்பது போன்ற இரண்டாக செயலை செய்து வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தால் கொடுக்கப்பட்ட பழங்குடிகள் மக்கள் பாதுகாப்புச்  சட்டம், காடுகள் ஒழுங்கமைச் சட்டம் எதையும் ஒரிசா அரசும் இந்திய அரசும் மதிப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் ஆளும்  கும்பலால் பேசப்படுவது  மறு வாழ்வு. "யாருக்கு வேண்டும் மறுவாழ்வு' கடந்த 60 ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள்  போஸ்கோ  நிறுவனம் நிலத்தை ஆக்கிரமித்தபின் என்ன செய்து விடப் போகிறார்கள்.

இன்று பொதுவாக மக்களின் மன நிலை என்பது, தங்களுடைய   நிலம், வீடு, வளங்கள் எதையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க  தயாராகவில்லை. தொடர்ந்து போராடவே அனியமாகவேயுள்ளனர். போஸ்கோ பரதிரோத், சங்காரம், சமதி என்ற கூட்டு இயக்கத்தின்  கீழ்  அனைத்துவிதமான சனநாயக அமைப்புகளும் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராடி வருகிறார்கள். வருகின்ற மார்ச் 13ம் தேதி மத்திய சுற்றுச் சூழல்  அமைச்சகம், போஸ்கோவிற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளது. மக்கள் இதுவரை அமைதியான வழியில்  போராடி வருகிறார்கள். வருங்காலங்களில் துணை இராணுவம் அவர்கள் கையில் ஆயுதம் திணிப்பது நடைமுறையாக மாற உள்ளது. தமிழக மக்களே     கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  சொந்த மண்ணுக்காக  நம் அரசியல்   உரிமைக்காக போராடாமல் அன்னிய தேசங்களின் போராட்ட முகவர்களுக்காக செயல்பட்டு வருகின்றன இங்குள்ள சக்திகள். கூட்டம் சிறிதாக இருந்தாலும் நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலங்களில்  உறுதி மிக்க கூட்டம் வந்து இணைய வாய்ப்பாக அமையும்.

கூட்டம் பெரிதாக இருந்தாலும் நோக்கம் சரியானதாக இல்லை என்றால் அக் கூட்டம் விழாக் காலங்களில் வெடிக்கும் வாண வெடியாகவே அமைந்து  விடும். ஆகவே வடகிழக்கு தேசங்கள், ஜார்கண்ட், சத்திஸ்கர் போன்ற பகுதியில் நடக்கும் போராட்டம் வழி நம் தமிழகத்தை காக்க வேண்டாமா?

தமிழகம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வளர்த்து  கொடுத்து தமிழகத்தை பாலைநிலமாக மாற்றும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டாமா?

தமிழகத்தில் ஈழ விடுதலைக்கும், ஜார்கண்ட், சத்திஸ்கர், பழங்குடி மக்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்கும் அனைத்து சக்திகளும் தமிழக விடுதலைக்கு தமிழர் உரிமைக்கும் போராட முன்வர வேண்டாமா? என்ற  கேள்வியோடு தமிழகத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அணி திரள்வோம்.

Pin It