சைவ சித்தாந்தவாதிகளின் பிடியில் சிக்குண்டு கிட்டத்தட்ட 64 ஆம் நாயனாராகவே சித்தரிக்கப்பட்டு பிரசித்தி பெற்ற பல கோவில்களின் பிரகாரங்களில் சிறு சிலை வடிவில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும் திருவருட் பிரகாச சோதி ராமலிங்க வள்ளலாரைப் பற்றிய கட்டுரையல்ல. இது.

சென்னை மாநகர வீதியில் நடையாய் நடந்து, பற்பல கோவில்களுக்குச் சென்று தொழுவதையே தொழிலாகக் கொண்ட அப்பனையும் அவன் மகன் சுப்பனையும் மற்றும் அவர் தம் குடும்பத்தினரையும் துதித்து பல தோத்திரப் பாடல்கள் பாடி முடித்த திருவருட்பிரகாச சோதி ராமலிங்கர் என்ற மனிதரைப் பற்றிய நேர்ப்பார்வை.

பொதுவாகச் சிந்தனையாளர்கள் சீர்திருத்தவாதிகள் போன்றோர் பொது வாழ்வில் இறங்கக் காரணம், தன் சக மனித குலம் படும் தீராத துயரத்தைக் கண்டு மனம் கசிந்து தான் என்பது உண்மை. நோய், மரணம் போன்ற பல இன்னல்களுக்கு விடை காணத் துடிக்கும் அறிஞர்கள்.

இவற்றுக்கான மூல காரணத்தையும் அதற்கான நிவாரணியையும் தேடுகின்றார்கள். பலப்பல தோத்திரங்கள் விதவிதமான மொழிகளில் இவை குறித்தே இயற்றப்பட்டுள்ளன. காலம் காலமாய் நமது சமுதாய அமைப்பு அவ்வாறே கட்டமைக்கப்பட்டுள்ளது.

காண்போர் மயங்கும் வண்ணங்களைத் தன் மேனியில் சுமந்து திரியும் வண்ணத்துப் பூச்சி முதல் படி நிலை லார்வா எனப்படும் சிறு புழு நிலை வரை தான் தன்னைச் சுற்றி வலை அமைத்து குறிப்பிட்ட காலத்திற்குப் புழுவாக இருந்த பின் தான் அது முழு வளர்ச்சி அடைந்த வண்ணத்துப் பூச்சியாக பரிணமிக்கிறது. அதைப் போன்றதொரு நிலையில் தான் அன்று இருந்தார் வள்ளலார்.

கடவுள் பால் மனதை செலுத்துவதே பக்தி என்று சமயவாதிகள். சாதிக்கத் ஒரு உயிர். உயிருக்கு நேரும் துன்பம் கண்டு மனம் கசிந்தது. அத்துன்பத்தை நீக்க எடுக்கும் முயற்சி வழிபாடு எனும். இத்தகைய வழிபாட்டிற்கு. அர்ச்சணை ஆரத்தி, அபிஷேகம் மணியடி தேவையற்றது எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.

அறியாமை இருளில் கண்மூடித்தனமான பழமையில் மக்களை மூழ்கடித்துக் கொண்ட சமயவாதிகள் துடிதுடித்தனர். சமயப்பிடிப்பு தளர்ந்து போகுமென்று அதிர்ந்தனர். ஆனால், வள்ளலார் அஞ்சவில்லை.

அவரைச் சுற்றியிருந்த மக்களின் அறியாமை, பிணி, வறுமை, அவரை உருவாக்கியது. அவரு ‘பிள்ளை பெரு விண்ணப்பம்’ முழுவதும் பிற உயிர்களுக்காக அவர் வருந்தியதையே ஆரூயிர்க் கட்கெல்லாம் நான் அன்பு செய்யவும்’ என்பதே அவர் இறைவனிடம் கருணையால் நிரம்பி வழிந்த ஒரு கவிஞனின் வெற்று வார்த்தை விளையாட்டு அல்லது வாழ்க்கை லட்சியம் சொல்லும், செயலும் வேறு வேறாக இல்லாத ஒரு மாமனிதனின் முழக்கம் அது.

கண்ணில்பட்ட கடவுளர்களையெல்லாம் வணங்கி தோத்திரப் பாடல்களை இயற்றி வந்த வள்ளலாரின் புரட்சிகரமான பரிணாம வளர்ச்சி சமயவாதிகளை திகைக்க வைத்தது விழிப்பிற்கு ஆதிகர்த்தா’ என பின் வந்த பாரதி வள்ளலாரைப் போற்றினார்.

இன்றைக்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே, தனியரு மனிதனாக அரசாங்கத்தையும் ஆச்சாரியர்களையும், ஆதினங்களையும் கடுமையாக எதிர்த்தவர் அவர். சமயத்தின் போலித்தனமான சடங்காச்சாரங்களை வள்ளலார் அளவுக்கு ஒரு நாத்திகர் கூட அக்காலத்தில் கண்டித்திருக்க மாட்டார். ‘கலை காட்டும் கற்பனையை நிலையே என்று கொண்டாடும் வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்று மனம் வெறுத்துச் சபித்தார். சடங்காச்சாரங்களால் யாருக்கும் உபயோகமில்லை என கண்டித்தார். இது புரோகிதர்களின் அடிமடியில் கைவைத்த கதையாயிற்று.

பெரியார் அவர் பாணியில் கூறுவார் ‘செத்தால் விட்டு விடுவான் வைத்தியன், செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்’ என்று நம் காலத்திற்குப் பின்னும் திதி என்றும் திவசம் என்றும் காரியம் என்றும் தர்ப்பணம் வாரிசுகளின் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை எதிர்த்து சுமார் 200 ஆணடுகள் புரட்சி முழக்கம் செய்த புதுமைத் துறவி அவர்.

இதைப்போன்றே மழைப் பொழிவு. காலரா, அம்மை, சொர்க்கம், நரகம், மோட்சம், மாணவம் எனப் பல விதமான தலைப்புகளில் அவரது புரட்சிக் கருத்துக்களை விவரித்துக் கொண்டே போகலாம்.

அருட்பா, மருட்பா, போர் ஒரு தனி வரலாறு. சிதம்பரத்து தீட்சிதர்களை எதிர்த்துப் போட்டி சித ம்பரத்தையே உருவாக்கியது ஒரு தனி வரலாறு, வேதங்களையும், ஆகமங்களையும் எதிர்த்தது ஒரு தனி வரலாறு.

ஒருவரை வணங்குவது என்று ஆரம்பித்து விட்டால். அதை முதற் கொண்டு அவரது கருத்துக்களைப் பற்றி சில மாட்டார்கள். அவரை வணங்குவதாலேயே தங்கள் பாவம் தீர்ந்து விடும். மோட்சம் கிடைத்து விடும். எனவே தன்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டத்தை வரைய அவர் அனுமதிக்கவேயில்லை. தான் ஒரு வழிபடும் ஆகிவிடக் கூடாது என்று உறுதியோடு தான். தான்னைப் புகைப்படம் எடுக்கவோ சிலை செய்யவோ இறுதி வரை அனமதிக்கவேயில்லை. மகாஞானியும் பகுத்தறிவாளருமான புத்தருக்கு நேர்ந்த கதியே தனக்கும் நெருங்கும் என்று உணர்ந்திருந்தார்.

இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது அழைப்பு மணி ஓசை கேட்டு கதவைத் திறந்தேன். ஒரு கணம் திகைத்தேன்.

ஒரு கரத்தினால் எனக்கு விபூதியை வழங்கிக் கொண்டு மறுகரத்தினால் ஒரு விளம்பரத்தை எனக்கு சுட்டிக் காட்டிக் கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். கீழே வீதியில் சுமார் 20,30 நபர்கள் ஒரு பெரிய வள்ளலார் புகைப்படத்தை தாங்கிப் பிடித்தபடி தாளம் தட்டிக் கொண்டே ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை’ என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். மேலே வந்த இளைஞர் நாங்கள் அனைவரும் வடலூரில் இருந்து வருவதாகவும், வள்ளலாரின் அன்னதான திட்டத்துக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விடாது விளக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தொலைக்காட்சி வேறு ‘அன்னசத்திரம் இருப்பது எதனாலே தின்ன தூங்கிப் பசங்க இருப்பதாலே’ என்று சமய சந்தர்ப்பம் தெரியாது முழங்கியது. கடவுளின் பெயராலோ, சமயத்தின் பெயரோலோ நான் எவருக்கும் நன்கொடை அளிப்பதில்லை. இது என கொள்கை என்று அவரைத் திருப்பினேன். ஏதா முணுமுணுத்துக்கொண்டே சென்றார் அவர்.

கதவைச் சாத்தினேன். மனம் கனத்தது. கண்கள் கசிந்தன.

சுமார் 150 வருடங்களுக்குள்ளாகவே வள்ளலார் வீதிக்கு வந்துவிட்டாரே! அதுவும் அவரது அன்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாலேயே. இதுதான் வள்ளலார் உட்பட சீர்திருத்தவாதிகளுக்கு ஏற்படும் கதியோ?
Pin It