மழைக்காள மௌனத்தில்
மழைக்கான அறிகுறியோடும்
மழையோடும் அந்த சிறுமி
பிரசவிக்கிறாள் என்னிலிருந்து
தனித்துவமான சோகத்தைச் சுமந்து
தனியாய் என்னை அடைகாக்கிறாள்
மழையின் இழைகளில் முகாரி
பாடுகிறாள் ஆத்மாவின் ராகமாய்
எனக்கான அந்த நேர சங்கீதம்
அவளிமிருந்து கடன் வாங்கப்பட்டவை
மழைபட்டவுடன் மறைந்து விடும்
வானவில்லைப் போல
மழை விட்டவுடன் என்னை விட்டு
அவள் கடந்து போக நேரிடுகிறது

என்னைக் கடந்து போக
மறுக்கிறதந்த மேகம்
பேதமற்று நீளும் என் கைகளால்
தொட்டு விட முயல்கிறேன்.
கடந்து போக மறந்து
இடைவெளி சுருங்கி
திரண்டு மதர்த்த மேகம்
தெருவாசியின் பாடல் போல
இருப்பை விரயம் செய்ய
நீராகி போய்விட்டேன் நான்
வெளியாகி போயிருக்குமோ
அந்த மேகம்
Pin It