நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் டாடா நிறுவனம் அமைப்பதாக இருந்த டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம், மக்கள் கருத்தறிந்த பின்பு செயல்படுத்தப்படும் என்றும் அதுவரை அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்

வழக்கறிஞர் காமராஜ்

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

சமூக விழிப்புணர்வு,
74, 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி எண்: 94434 23638
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மேலும் செயல்படுத்தப்பட இருந்த திட்டத்தினால், வேலை வாய்ப்பு அதிகம் இல்லாத அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் நாட்டின் தொழில் வளம் பெருகும் என்றும் ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களைத் திசைதிருப்பி விட்டு என்றும் எதிர்ப்பு அதிகம் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டன என்றும் கூறியுள்ளார்.

‘நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் கிடைக்கும் இல்மனைட் கனிமத்தை வெட்டி எடுத்து, அதனை சுத்திகரித்து அதன் பின்பு மதிப்பூட்டி டைட்டானியம் டை ஆக்சைடு என்ற வேதிப் பொருளாக மாற்றவது தான் டாடா தொழிற்சாலை. இவ்வாறு அமையும் தொழிற்சாலைக்குத் தேவையான நிலங்களை டாடா நிறுவனத்திற்காக அரசே பொது மக்களிடம் இருந்து கொள்முதல் செய்து, டாடா நிறுவனத்துக்கு வழங்கும். இந்த நிறுவனத்தால் நிலம் இழந்த மக்களுக்குத் தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும். வீடு இழந்த மக்களுக்கு டாடா நிறுவனத்தால் மாற்று வீடுகள் கட்டித் தரப்படும் என்பதே இத்திட்டம்.

முதலில் இத்திட்டம் ஏற்படுத்துவதால் எந்த தொழில்வளமும் பெருகப் போவதில்லை. அங்குள்ள மக்களுக்கு பயன்படப் போவதும் இல்லை. இத்திட்டத்தினால் தமிழகத்தின் தொழில்வளம் அதிகரிக்காது. மாறாக, டாடாவின் வளம் கண்டிப்பாக அதிகரிக்கும். இத்திட்டத்தினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பதெல்லாம் ஏமாற்று. 20,000 பேரை தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தி விட்டு 1,000 பேருக்கு வேலை என்பது கடைந்தெடுத்த மோசடி. உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ள இந்த தொழிற்சாலையில் அப்பகுதி மக்களுக்கு வாட்ச்மேன் வேலை தவிர எந்த வேலையும் கிடைக்கப்போவதில்லை. அதுவும் நேபாள கூர்க்கா போட்டிக்கு வராதவரை மட்டுமே.

நெய்வேலி நிலக்கரித் தொழிற்சாலைக்கு இடம் கொடுத்தவர்களுக்கு இன்னும் உரிய இழப்பீடு கிடைக்காமல் தெருவில் நிற்கையில் டாடா நிறுவனம் மாற்று வீடு அளிக்கும் என்று கூறுவதை யாரும் நம்ப முடியாது. வைகுண்டராஜன் எனும் தனி தாதாவின் சட்டவிரோதமான மணல் திருட்டை நிறுத்துவதற்கு பதிலாகத் தமிழக அரசாங்கம் இந்திய அளவிலான டாடா நிறுவனத்தை இப்பகுதிக்கு அழைத்து வந்து அம்மக்களின் வாழ்வைச் சூறையாட முயற்சி செய்கிறது.

ஆனால், மக்களின் எதிர்ப்பு அதிகரித்தவுடன் தற்போது பின்வாங்கியுள்ளது. அரசாங்கம் பின்வாங்கியதை தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று முன்பு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிர உறுதியுடன் செயல்பட்ட ஜெயலலிதாவில் இருந்து ராமதாஸ், வைகோ, சரத்குமார் வரை பலரும் உரிமை கொண்டாடுகின்றனர்.

இவர்கள் யாரும் இத்திட்டத்தை எதிர்த்தது மக்கள் மேல் கொண்ட உண்மையான அக்கறையினால் அல்ல. ஏனென்றால் இவர்கள் அனைவரும் மக்களுக்கு விரோதமான இதுபோன்ற திட்டங்களை ஆதரிப்பவர்கள்தாம். இவர்களின் போராட்டக் குணம் பற்றி அறிய தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனமே சிறந்த உதாரணம். சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் நிறுவனம் அமையும்போது தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்தன.

நாளடைவில் ஒவ்வொருவரும் தங்களுக்கான 'பலன்'  கிடைத்தவுடன் அமைதியாகி விட்டனர். இறுதியாக ஒருவர் மட்டும் சங்கநாதமாக முழங்கினார். இறுதியில் அவரும் பேரம் படிந்தவுடன் அமைதியாகி விட்டார். தற்பொழுதைய பிரச்னையும் அதையத்ததே. எது எப்படியோ மக்களின் போராட்டத்திற்குத் தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது.

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்தை அடியோடு ரத்து செய்வதே தமிழக அரசு செய்யும் மிகச்சிறந்த காரியம்.
Pin It