Spoiling the Stream; Don't Blame the River - என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதா வது ஊற்றைக் கெடுத்து விட்டு ஆற்றைக் குறை சொல்வது. இதற்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது அமெரிக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமும், அதனையொட்டி உலகம் முழுவதும் வெளிப்பட்டு வரும் எதிர் விளைவுகளும்!

Innocence of Muslims - "முஸ் லிம்களின் அறியாமை' என்ற தலைப்பிட்டு எடுக்கப்பட்டிருக் கும் திரைப்படம், உலகத்திற்கு அருட்கொடையாக வந்த - உலக முஸ்லிம்கள் தங்களின் உயிருக் கும் மேலாக நேசிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவம தித்து - பார்க்கவும், கேட்கவும் கூசும் வகையில் சித்தரித்து இஸ் லாத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

14 நிமிடங்கள் ஓடக் கூடிய இத்திரைப்படத்தின் டிரைலர் காட்சிகûளை கடந்த ஜூன் மாதம் வலைதளத்தில் பதிவேற் றம் செய்திருக்கிறார்கள் இப்ப டத்தை தயாரித்தவர்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன் அமெரிக்கா விலிருந்து பதிவேற்றம் செய்யப் பட்டன இந்த டிரைலர் காட்சி கள். அப்பொழுது பரவலாக எவருடைய கவனத்தையும் இது கவரவில்லை என்பதால் மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அரபியில் டப்பிங் செய்யப்பட்டு யூ டியூப் எனும் வீடியோ வலைதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் உலக முஸ்லிம் கள் கொந்தளிக்கத் துவங்கினர்.

லிபியாவில் உள்ள பெங்காசி நகரில் அமைந்துள்ள அமெரிக் கத் தூதரக அலுவலகத்திற்கு முன் குவிந்த முஸ்லிம்கள் தூதரக அலுவலகத்தை தாக்கியுள்ளனர். லிபியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய போராளி அமைப்பான அன்ஸர் அல் ஷரியாவைச் சேர்ந் தவர்கள் தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய தாக்கு தலில் லிபியாவுக்கான அமெரிக் கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீ வன்ஸ் மற்றும் தூதரக அதிகாரி கள் மூவர் கொல்லப்பட்டுள்ள னர்.

தூதரக அதிகாரிகள் கொல்லப் பட்டதையடுத்து பரபரப்ப டைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்குதலுக்குத் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். லிபியாவிலுள்ள அமெரிக்கர்க ளைப் பாதுகாக்க கடற்படைக் கப்பல்களை அனுப்பியுள்ளார்.

உலக நாடுகளிலுள்ள அமெ ரிக்க தூதரகங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. ஆனால் தூதரக அதிகாரிகளோ எப் போது என்ன நடக்குமோ என்ற பீதியில் நடுங்கிப் போயுள்ளனர்.

உலக முஸ்லிம்களை கொந்த ளிக்க வைத்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலுள்ள வலதுசாரி கிறிஸ்தவ வலைதளங்கள் பதி வேற்றம் செய்திருக்கின்றன.

ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் மதவெறியனான டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரி யார் இந்தத் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பும், ஊக்கமும் தந்தி ருக்கிறார் என அமெரிக்க ஊட கங்களே எழுதியுள்ளன.

இதே பாதிரியார்தான் குர்ஆன் பிரதியை எரித்து உலகம் முழுவதும் வன்முறையை உரு வாக்கியவர் என்பதையும் மறக்கா மல் இந்த ஊடகங்கள் குறிப் பிட்டுள்ளன.

இத்திரைப்படத்தை இயக்கிய வர், தயாரித்தவர் மற்றும் அதில் பணியாற்றிய அத்தனை பேரும் புனைப் பெயரில்தான் இயங்கி யுள்ளனர். இப்படத்தை தயா ரித்து இயக்கியிருக்கும் சாம் பேசில் என்பவன் அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன் ஸின் படுகொலை சம்பவத்திற்கு பின் தலைமறைவாகியிருக்கி றான்.

அவன் தலைமறைவாவதற்கு முன் அவனிடம் தொலைபேசி மூலம் "தி வால் ஸ்ட்ரீட் ஜோர் னல்' என்ற பத்திரிகை பேட்டி கண்டுள்ளது.

52 வயதான பேசில், நான் ஒரு இஸ்ரேலிய அமெரிக்கன்; கலி போர்னியாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன்; இந்த திரைப்படத்தை எடுப்பதற் காக 100 இஸ்ரேலியர்களிடமி ருந்து சுமார் 5 மில்லியன் டாலர் களை நன்கொடையாகப் பெற் றேன்...” என்று தெரிவித்திருக்கி றான்.

அதோடு, “இஸ்லாம் ஒரு வெறுக்கத்தக்க மார்க்கம் என்கிற எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இது அரசியல் ரீதியான படம். மத ரீதியான பட மல்ல...” என்றும் தான் செய்த கீழ்த்தரமான செயலை நியாயப் படுத்தியிருக்கிறான்.

2 மணி நேரம் ஓடக் கூடிய இந் தப் படம் 3 மாத காலத்தில் எடுக் கப்பட்டுள்ளது. இதில் 60 நடிகர்க ளும், 45 துணை நடிகர்களும் பங்கு பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் அத்தனை பேரும் “சாம் பேசில், இஸ்லாத்தையும், இறைத் தூதர் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு படம் எடுக்கிறார் என்பது எங்க ளுக்குத் தெரியாது; இது பாலை வன போராளிகள் குறித்த படம் என்று சொல்லப்பட்டது...” என தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பணியாற்றிய 80 பேர் சி.என்.என். தொலைக் காட்சி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாங்கள் அனைவ ருமே மிகவும் வருத்தத்தில் இருக் கிறோம். நாங்கள் தயாரிப்பாள ரால் தவறாக பயன்படுத்தப்பட்டி ருக்கிறோம். நாங்கள் 100 சதவீதம் இப்படத்திற்குப் பின்னால் இயங் கவில்லை. (அதாவது இப்படத் தின் பின்னணி குறித்து எதுவும் தெரியாது.) ஆனால் அதன் உள் நோக்கத்திற்கு நாங்கள் ஒட்டு மொத்தமாக தவறான முறையில் உட்படுத்தப்பட்டிருக்கிறோம்.

நாங்கள் அனைவரும் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று கூறப்படுவதை அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச் சிக்கு ஆளாகி இருக்கிறோம். நடந்து விட்ட சோக நிகழ்வுக ளுக்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்...” என அவர்கள் கூறியுள்ளனர்.

இப்படத்தில் நடித்த நடிகை சின்டி கார்சி யாவோ, “தயாரிப்பாளர் எங்கûளை ஏமாற்றி விட்டார். எங்களுக்கு இதெல்லாம் சொல்லப் படவில்லை...” என்கிறார்.

2 மணி நேரம் ஓடக் கூடிய ஒரு திரைப்ப டத்தில் அதுவும் மூன்று மாத காலமாக தொடர்ந்து படப் பிடிப்பு நடத்தி முடிக்கப் பட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் பின் னணி பற்றியும், தயாரிப்பாளர், இயக்குன ரின் நோக்கத்தை பற்றியும் நாங்கள் அறிந்தி ருக்கவில்லை என்று சொல்வதை சாதாரண அறிவு படைத்த எவரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால் இவர்களின் இந்த அறிக்கை உயி ருக்குப் பயந்து வேறு வழியில்லாமல் வெளி யிடப்பட்டுள்ளது என்பதை பளிச்சென புரிந்து கொள்ள முடிகிறது.

நபிகள் நாயகத்தின் பெருமைகளை குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக் கும் இத்திரைப்படத்தை இயக்கியவர்களுக் கும், அமெரிக்காவிற்கு எதிராகவும் உலக முஸ்லிம்கள் கொந்தளித்துள்ள நிலையில், லிபியா, எகிப்து, ஏமன், லெபனான், பாலஸ் தீன், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மிகப் பெரிய அளவில் போராட் டங்கள் நடந்துள்ளன.

லிபிய மக்களால் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது போலவே, ஏமன் தலைநகர் சனாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகத்தில் போடப்பட்டிருந்த தடுப்பு களை உடைத்துக் கொண்டு தூதரக கட்டிடத் திற்கு மேல் ஏறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கட் டிடத்தின் மேல் பகுதியை தீயிட்டுக் கொளுத் தியுள்ளனர். அமெரிக்கக் கொடியை எரித்த அவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைகளைச் சொல்லும் வாசகங்களைத் தாங்கிய கொடியை ஏற்றியுள்ளனர்.

எகிப்தில் சலபி அறிஞர்களின் பேச்சை சேனல்களில் கேட்டும், இஸ்லாமிய பேஸ் புக் குரூப் என்ற வலைதளத்தில் வெளியான செய்தியைப் பார்த்தும் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மக்கள் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

கெய்ரோ பேரணியின்போது இளைஞர் கள் வன்முறையில் ஈடுபடாதவாறு பேரணிக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் கட்டுப்படுத் தினர். இருந்த போதிலும் மாலை மங்கத் தொடங்கியதும் தூதரகத்தில் எதிர்ப்பு வாச கங்களை பெயிண்டுகளால் எழுதி இளை ஞர்கள் பலர் தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

துனிசியாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே எதிர்ப்பு ஆர்ப்பாட் டம் நடத்திய துனிசிய மக்கள் அமெரிக்கக் கொடியை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

அமெரிக்காவிற்கு வெளியே ஏமன் நாட்டில் இருக்கும் அமெரிக்கர்கள் பெரிய அளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அமைதியான ஆர்ப்பாட்டங்களாக இருந்தபோதும் அவை வன்முறையாக மாற வாய்ப்புள்ளது என்பதால் உள்ளூர் செய்தி களைப் பார்த்து அதற்கேற்றவாறு தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் அமெரிக்கா என கேட்டுக் கொண் டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத் தில்தான் மிக எழுச்சியாக போராட்டங்கள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. தமிழக இஸ் லாமிய அமைப்புகள் தங்களது கண்டனங் களை மிக வலிமையாகவே பதிவு செய்துள் ளன.

சாம் பேசில் என்ற யூதனால் இன்று மீண் டும் ஒருமுறை உலக மக்களின் எதிர்ப்புக ளுக்கும், வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறது அமெரிக்கா. இதில் பேசில் மட்டும் குற்றவா ளியல்ல... இவனை பின்னால் இருந்து இயக் கிய ஃப்ளோரிடா மதவெறி பாதிரியான டெர்ரி ஜோன்ஸýம், அமெரிக்காவில் இயங்கி வருகின்ற பழமைவாத கிறிஸ்தவ அமைப் பான அமெரிக்க தேசிய காப்டிக் குழுவும் குற்றவாளிகள்தான்; அவர்கள் மீதும் அமெ ரிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். எந்த ஒரு மதத்தையும் அவமதிக்க எவருக்கும் உரிமையோ, அனும தியோ இல்லை.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிற சமயத்தை அவமதிக்கும் செயலை அமெ ரிக்கா அங்கீகரித்ததன் எதிர்வினையாக அதன் லிபிய தூதர் உட்பட நான்கு பேரின் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியுள்ளன.

"வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதற்கேற்ப அமெரிக்காவில் வினை விதைத்து லிபியாவில் வினை அறுக்கப்பட் டுள்ளது.

லிபியாவில் அமெரிக்க உயிர்கள் பலியாகி யிருப்பதும், உலகெங்கிலும் பல நாடுகளின் தூதரகங்கள் தாக்கப்படுவதும் கண்டிக்கத் தக்கதுதான். வன்முறையை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாது. ஆனால் அமெரிக்கா இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பூமிப் பந்தில் வெகு வேகமாக பரவி வரும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது. அதனால் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திட சியோனிச யூத சக்திகளும், ஐரோப் பிய பழமைவாத கிறிஸ்தவ அமைப்புகளும் இதுபோன்று இஸ்லாம் மற்றும் அதன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்த அவதூறுகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இவையாவும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கே உரமாக அமைகின்றன என்பது யதார்த்த உண்மையாகும்.

இஸ்லாம் வெறுப்புக்குரிய மார்க்கமா? முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்களா? அவர்கள் பயங்கரவாதிகளா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து - பொதுவான மக்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள அவர்களை இஸ்லாத்தின் பக்கம் உந்தித் தள் ளவே இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் பயன்பட்டு வருகின்றன.

திருக்குர்ஆனின் ஒட்டுமொத்த வசனங்க ளுமே அறிவுடைய மக்களைப் பார்த்தே பேசுகிறது; கேள்வி எழுப்புகிறது; சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறது.

இந்த திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இருக்கிறதா என தன்னை ஆய்வு செய்து பார் என்று அது முன் வருகிறது.

இக்குர்ஆனிலுள்ள வசனங்களை பொய்ப் பிக்க முடியுமானால் முன்னேறு... என்று அறைகூவல் விடுக்கிறது. இந்த சவாலை ஏற்க திருமறை வைக்கும் அறிவுப்பூர்வமான கேள் விகளுக்கு அவதூறு பரப்புபவர்கள் பதில் சொல்லத் தயாராகட்டும். அதுபோன்ற விமர் சனங்களை முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்கள்.

ஆனால் தனது உயிரினும் மேலாக அவர் கள் மதிக்கும் நபிகள் நாயகத்தின் கண்ணியத்திற்கு ஊறு ஏற்பட்டால் தங்களின் உயி ரையே அவர்கள் துச்சமென நினைப்பார்கள் என்பதைத்தான் உலகெங்கிலுமிருந்து எழும்பும் கண்டனக் குரல்கள் பிரதிபலிக்கின்றன என்பது மிகையல்ல; நிதர்சனம்.

எந்த லிபிய மக்களின் அரபு வசந்தத்திற்காக அமெரிக்கா ஆதரவளித்ததோ அதே லிபிய மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக துப்பாக்கியை திருப்பிப் பிடித்திருக்கிறார்கள். இது ஏன் என்று அமெரிக்கா சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றிய படம் என்று தெரியாது - தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டார்

- நடிகை சின்டி கார்சியா

Innocence of Muslims படத்தில் நடத்திருக்கும் நடிகையான சின்டி லீ கார்சியா, வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில்,

“கடந்த வாரம் கோடை காலத்தின்போது ஒரு சினிமா ஏஜென்சியிலிருந்து இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு எனக்கு வந்தபோது, நான் நபிகள் நாய கத்தை அவமதிக்கும் படத்தில்தான் நடிக்கவிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டார்.

இப்படத்திற்கு Desert Warriors (பாலைவனப் போராளிகள்) என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. இப்படம் 2 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய எகிப்தியர் களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந் தது.

எந்த மதத்தோடும் சம்மந்தப் படும் வகையில் இதில் எதுவும் இருக்கவில்லை. முஹம்மதைப் பற்றியோ, முஸ்லிம்களைப் பற் றியோ ஒன்றுமே சொல்லப்பட வில்லை.

இப்படம் முடிவடைந்த நிலையில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் Innocence of Muslims (முஸ்லிம்களின் அறியாமை) என்ற தலைப்பை பற்றி படத்தின் திரைக்கதையிலும், படப்பிடிப்பின்போதும் எதுவும் சொல்லப்படவில்லை. முஹம்மது என்ற பெயர் கூட இப்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளது.

"மாஸ்டர் ஆஃப் ஜார்ஜ்' என்பதுôன் அந்த கதாபாத்திரத்தின் பெயர். ஆனால் படம் முடிந்த பின்னர்தான் "முஹம்மது' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.

இப்படத்தில் மாஸ்டர் ஆஃப் ஜார்ஜிடம் எனது மகளை நான் அனுப்புவதாக ஒரு காட்சி வரும். இதில் குழந்தையை பலவந்தம் செய்பவரா முஹம்மது? என்று ஒரு வசனம் தற்போதைய டிரைலரில் டப்பிங் செய்து இணைக்கப்பட் டுள்ளது. ஆனால் திரைக்கதையில் இந்த வசனம், “உங்கள் கடவுள் குழந் தையை பலவந்தம் செய்பவரா?' என்றுதான் இருந்தது.

இப்படத்தின் இயக்குனர் சாம் பேசிலை தொடர்பு கொண்டு ஏன் இப்படி செய் தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, “இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் கொல்வதைப் பார்த்து சோர்ந்து போயிருக்கிறேன்...” என்றார் அவர்.

எதுவாக இருந்தாலும் இதில் எனது தவறு எதுவும் இல்லை என்றே உணருகி றேன். ஆனால், இன்று பலர் பலியாகியிருக்கிறார்கள். இதற்கு நான் நடித்திருக்கும் படம் காரணமாகி விட்டதே என்பது என்னை தீவிரமாக பாதித்திருக்கிறது...” எனத் தெரிவித்திருக்கிறார்.

Pin It