சென்னை மாநகரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் சென்னையை பிறப்பிடமாக கொண்டவர்கள் அல்லர். அவர்களில் பெரும்பான்மை யினர் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களிலிருந்து தொழில் மற்றும் வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்த மாகவும் சென்னையில் வந்து குடியேறியவர்கள்தான். தமிழர்கள் மட்டுமன்றி இந்தியா வின் வேறு மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக கேரளா - ஆந் திரா - ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னையில் வசித்து வருகின்ற னர்.

சென்னையில் திருமணமாகாத வர்களுக்கும், ஏழ்மையில் உள்ளா வர்களுக்கும் அவ்வளவு எளிதில் வீடு கிடைத்து விடுவதில்லை. அதே நேரத்தில் டிப்டாப்பாக கொஞ்சம் பசை' உள்ள பார்ட்டிகள் என்றால் எளிதில் வீடு கிடைத்து விடும். வாடகைக்கு வீடுகளை அமர்த்தி தருவதையே தொழிலாக செய்யும் நபர்களும் உண்டு. ஒரு கடையை வாடகைக்கு விடும்போது எழுதப்படும் ஒப் பந்தம் போன்று வீடு வாடகைக்கு விடும்போது பெரும்பாலும் எழு தப்படுவதில்லை.

வெறுமனே வாடகை இவ்வளவு; அட்வான்ஸ் இவ்வளவு; கரண்டு பில் இவ்வளவு என்பன போன்ற சில கண்டி ஷன்கள் வாய்மொழியாக பேசப்ப டும். அதோடு வாடகைக்கு வருப வரின் உண்மையான முகவரியை உறுதி செய்யும் வகையில் அவரது ரேஷன் கார்டு நகலோ, வாக்காளர் அடையாள அட்டைகளோ பெறும் வீட்டு உரிமையாளர்கள் மிக மிக குறைவே. அட்வான்சும் வடாகையும் ஒழுங்கா வந்தா சரி என்ற ரீதியில் வீட்டு உரிமையா ளர்கள் நடந்து கொள்வதால், வீட்டில் தங்குபவர்கள் ஏதேனும் செய்து விட்டால் வீட்டு உரிமையா ளர்கள் தேவையற்ற இன்னல் களை சந்திக்கும் நிலை ஏற்படுகி றது.

குடியிருந்த வீட்டிலேயே ஒரு கெட்டவன் கை வைத்து விட்டு கம்பி நீட்டி விட்டால் கூட அவனை கண்டுபிடிப்பதற்கு வீட்டு உரிமை யாளர்களிடம் பெரும்பாலும் எந்த தடயமும் இருப்பதில்லை. இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ஒரு அரு மையான திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை நடைமுறைப் படுத்தியுள்ளது. வாடகைக்கு குடி யிருப்பவர்கள் பற்றிய தகவல் களை புள்ளி விவரங்களுடன் வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அது. இது தொடர்பாக போலீஸ் கமி ஷனர் திரிபாதி அதிரடியான உத்தர வுகளையும் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி செயல்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு குறைந்த பட்சம் ஒருமாதம் ஜெயில் தண்டனையும் 200 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதே நேரத்தில் குற்றவாளி ஒருவருக்கு வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டு... அதன் மூலம் பொது மக்க ளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட் டால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமை யாளரை 6 மாதம்வரை சிறையில் அடைத்து 1000 ரூபாய் அபராத மும் விதிக்கலாம். (தங்களது வீட்டில் குடியிருப்ப வர்கள் பற்றி தகவல் தெரிவிக்காத பட்சத்தில் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.) அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இப்பணியை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி விட்டனர். இதற்கான விண்ணப்பங்கள் போலீஸ் நிலையத்தில் கிடைக்கும்.

போலீஸ் நிலையங்களுக்கு சென்று அதற்கான விவரங்களை உரிமையாளர்கள் பெற்றுக் கொள் ளலாம் அதன் விவரம் வருமாறு:-

வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகைதாரர்கள் தகவல் படிவம் என்ற பெயரில் ஒரு விண்ணப்பம் வழங்கப்படும். அதில் முதல் 3 பிரி வுகளில் வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர், தொழில், முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண் டும். அதற்கு கீழே 7 பிரிவுகள் இடம் பெற்றிடும். அதில் வாடகைக்கு குடியிருப்ப வர்களின் பெயர், நிரந்தர முகவரி, செய்யும் தொழில், தற்போதைய முகவரி, வீட்டில் குடியிருக்கும் மற்றவர்களின் விவரங்கள், இதற்கு முன் குடியிருந்த வீட்டின் முகவரி, அந்த வீட்டை காலி செய்த தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்து போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும்.

போட்டோவுடன் கூடிய அடை யாள அட்டை ஒன்றையும் அதனு டன் இணைக்க வேண்டும். பாஸ் போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆயுத உரிமம், ரேஷன்கார்டு, வாக் காளர் அடையாள அட்டை, வரு மான வரி அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். தகவல் படிவத்தின் ஓரத்தில் வாட கைக்கு இருப்பவரின் போட்டோ ஒட்டப்பட வேண்டும். உரிமையாளர்கள், வாடகைதாரர் கள் 2 பேரும் தாங்கள் தெரிவித் துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என கூறி அதில் கையெ ழுத்தும் போட வேண்டும்.

இந்த படிவத்தின் நகல் ஒன்று வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்படும். வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர் வீட்டை காலி செய்தால் அதுபற்றிய விவரங்களை தெரி விக்க வேண்டுமா? என்ற கேள்வி யும் எழும். இதுபோன்ற நேரங்க ளில் வீட்டை காலி செய்து செல் பவர்கள் பற்றி உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. அவருக்கு பதில் புதிதாக வருபவர் களை பற்றிய தகவல்களை போலீஸ் நிலையத்தில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப் பாடுகள் மூலம் குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும். வெளி மாநிலங்க ளில் இருந்தோ, வெளி மாவட்டங் களில் இருந்தோ சென்னைக்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும் குற்றவாளிகளின் எண்ணம் இனி ஈடேறாது.

இதுபோன்ற நிலை ஏற்பட்டு விட்டாலே சென்னையில் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்து விடும் என சென்னை மாநகர காவல் துறை நம்புகிறது. அதே நேரத்தில் சிம் கார்டு தொடங்கி பாஸ்போர்ட் வரை பெருகிவிட்ட போலி முக வரிகள், இதிலும் வந்துவிடாமல் விழிப்புடன் கண்காணிப்பது காவல்துறையின் கையில்தான் உள்ளது.

மேலும், இது சென்னை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ கத்திலும் செம்மையாக அமுல்ப டுத்தப்பட வேண்டும். இல்லை யென்றால், இந்தச் சட்டமும் ஏட் டளவில் முடங்க வாய்ப்புண்டு.

Pin It