செஞ்சேனையின் கட்சி ஸ்தாபனத்தில் பல்வேறு தனிநபர்வாதப் போக்குகள் பின்வருமாறு வெளிப்படுகின்றன:

1. பழிவாங்கும் சுபாவம்: சில தோழர்கள் கட்சிக்குள் படைவீரத் தோழர் ஒருவரால் விமர்சனம் செய்யப்பட்டபின், கட்சிக்கு வெளியில் பழிவாங்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட தோழரை அடிப்பது அல்லது தூற்றுவது இதில் ஒரு வழியாகும். “நீ இந்தக் கூட்டத்தில் விமர்சனம் செய்தாய். எனவே இதைத் திருப்பித் தர அடுத்த கூட்டத்தில் ஒரு வழி பார்த்துக் கொள்வேன்.” இத்தகைய பழிவாங்கும் சுபாவம் முற்றாக தனிநபர் கண்ணோட்டத்திலிருந்து, வர்க்கத்தின் நலனையும் முழுக் கட்சியின் நலன்களையும் புறக்கணிப்பதனால் ஏற்படுகின்றது. அதன் இலக்கு எதிரி வர்க்கம் அல்ல. நமது சொந்த அணிகளிலுள்ள தனி நபர்களே ஆவர். இது ஸ்தாபனத்தையும் அதன் பேராற்றலையும் பலவீனப் படுத்தும் நச்சுத் திரவமாகும்.

2.             சிறுகும்பல்வாதம்: சில தோழர்கள் தமது சிறு கும்பலின் நலன்களை மாத்திரமே கவனித்து, பொது நலன்களைப் புறக்கணித்து விடுகின்றனர். மேலோட்டத்தில் அது தனிநபர் நலன்களுக்கானது என்று தோன்றாவிட்டாலும், அது யதார்த்தத்தில் மிகக் குறுகிய தனிநபர்வாதத்தைப் பிரதிபலிக்கின்றது. இதற்குப் பலமான அரிக்கின்ற, விரிமைய விளைவு உண்டு. இந்தச் சிறுகும்பல்வாதம் செஞ்சேனையில் வழக்கமாக நிறைந்திருந்தது. விமர்சனத்தின் மூலம் இப்பொழுது ஓரளவு திருத்தம் ஏற்பட்ட போதிலும், அதன் மிச்ச சொச்சங்கள் இன்னும் நிலவுகின்றன. இதைச் சமாளிப்பதற்கு மேலும் முயற்சி தேவைப்படுகின்றது.

- மாவோ

(கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது எப்படி?)

Pin It