ponnelam 360சென்னை பொங்கல் புத்தகக் காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற  புத்தகத் திருவிழாவில் நாவலாசிரியர் அண்ணாச்சி பொன்னீலனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

'தி இந்து’ குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பொற்கோ உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர். 250 புத்தக அரங்குகள், பல லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் என 13-01-2016 அன்று தொடங்கி நடைபெற்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற எழுபத்து ஐந்தை தொட்ட அண்ணாச்சி பொன்னீலன் நம் இதயங்களைத் தொட்டவர். அண்ணாச்சியின் அன்புக்கு என்றும் வயதாவதில்லை. இளமைதோய்ந்த சிரிப்பும் இன்றும் கூட படைப்பாளிகளை தட்டிக் கொடுத்து ஆளாக்கிவிடும் உற்சாகமும் அளவிடமுடியாத பெரும் பரப்பைக் கொண்டவை.

புனைவெழுத்தின் அரசியல்

தென்திருவிதாங்கூர் வரலாற்றையும் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டு கலவரத்தையும் பின்னணியாகக் கொண்டு அடித்தளமக்கள் பார்வையில் எழுதிப்பார்த்த Ôமறுபக்கம்Õ புதினம் தமிழின் படைப்புச் சூழலை வெகுவாகக் கவனங்கொள்ள வைத்தது. உயர் ரசனை அறிவுஜீவி வாசகர்கள் என்கிற முகமூடியைக் கிழித்தெறிந்து தனது படைப்பை எளிய வாசகனுக்கும் கொண்டு சேர்த்தவர் அண்ணாச்சி பொன்னீலன்.

இந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த நெருக்கடி நிலைப் பிரகடனம் சார்ந்து சமகால அரசியல் வரலாற்றை மறுபடைப்பாக்கம் செய்த Ôபுதிய தரிசனங்கள்Õ நாவலுக்கு 1994 இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவர உள்ளது.

கோவில்பட்டி வட்டார விவசாயத் தொழிலாளி களின் நில அரசியலை மையப்படுத்தி எழுதிய Ôகரிசல்Õ நாவல் சோசலிச யதார்த்தவாத நாவல் வகையாய் மதிப்பீடு செய்யப்பட்டது. தோழர் ரகுநாதனின் பஞ்சும் பசியும், செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி எனத் தொடர்ந்த நாவலாசிரியர்கள் தமிழ்ச்சூழலில் தீவிரமாய் செயல்பட்ட காலம் அது. 1976இல் வெளிவந்த Ôகரிசல்Õ சோவியத் உட்பட பல உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

பெருநாவல் வகையினத்தைச் சாராத Ôஊற்றில் மலர்ந்ததுÕ, Ôபுதிய மொட்டுகள்Õ, Ôகொள்ளைக்காரர்கள்Õ, Ôதேடல்Õ குறும் புதினங்களும் கவனத்திற்குரியவை. அண்ணாச்சியின் அம்மாவின் தன்வரலாறு Ôஅழகிய நாயகி அம்மாள் சரித்திரம்Õ, அண்ணாச்சியின் பூர்வீக எழுத்து மரபின் துவக்கத்தைத் தொட்டுக்காட்டுகிறது.

நாவல் உலகத்தினுள் பயணிக்கும் போது உபநதி களாய் சிதறியவை கதைகள். காமம் செப்பாது, நித்தியமானது, அத்தாணி கதைகள், பொட்டல் கதைகள் எனவும் கதை நூல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ்க் கவிதை மரபின் மார்க்ஸிய தாக்கமும், நீள்வசன காவிய மொழியாக்கக் கூறுகளும் இணைந்த பொன்னீலன் கவிதைகள் அதன் பிறகு வந்த புல்லின் இதழ்கள் என ஒரு கவிஞனாகவும்  அண்ணாச்சியின் ஆளுமையைப் புரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாற்று ஆவணங்கள்

மார்க்ஸிய தமிழ்ப் போராளி ஜீவா பற்றிய Ôஜீவா என்றொரு மானுடன்Õ அழியாத ஒரு காவியம். தமிழகத்தின் பண்பாட்டுப் போராளியைப்பற்றி மட்டுமல்ல; சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராளி வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி, யதார்த்தவாத இலக்கியப்போராளி தொ.மு.சி.ரகுநாதன் வாழ்வும் பணியும், ஆன்மீகப்போராளி தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி தோழர் எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட வாழ்க்கையும் வரலாறும் சார்ந்த நூல்களும் முக்கியமானவை.

பயணங்களின் பாதை

தனது கல்விப்புல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட Ôவிடை பெறுகிறேன்Õ, கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இருபத்திரண்டு நாள் சமாதான நடைபயண அனுபங்களைப் பேசிய Ôபுவியெங்கும் சாந்தி நிலவுகÕ, பெருமன்ற வரலாற்றைப் பேசிய Ôஒரு ஜீவநதிÕ, அண்ணாச்சி பொன்னீலனின் மற்றுமொரு பரிணாமம்.

சமூகமும் ஆன்மீகமும்

பேராசிரியர் நா.வானமாமலை ஆராய்ச்சிக் குழுமத்தில் பேரா.தோதாத்ரி, பேரா.ஆ.சிவசுப்ரமணியன் போன்ற முன்னோடிகளோடு செயல்பட்ட அன்ணாச்சியின் ஆய்வியல் நோக்கு வைகுண்ட சுவாமியின் தோள் சீலைப் போராட்டம் கட்டுரையில் துவங்கியது. சமூகப் பண்பாட்டு நூலான Ôதெற்கிலிருந்துÕ நூல் நாராயணகுரு, ஐயங்காளி என தெற்கின் பண்பாட்டு வரலாற்று ஆளுமைகளை எழுதிச் செல்கிறது.

எதிரெதிராகக் கருதப்பட்ட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் ஏதேனும் ஒரு இணைப்புள்ளியில் அதனதன் இருப்பில் வைத்து வாசிக்கும் ஒரு நெடிய வரலாற்று ஆன்மீகப்பார்வையைப் பேசிய சமய சீர்திருத்தவாதிகளின் புலன்களை முன்னிறுத்திய இந்த வரிசையில் தலித் எழுச்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும், ஆன்மீகம் ஒரு உரையாடல், இந்துத்துவத்தின் பண் பாட்டு ஊடுருவல் நூல்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ் இலக்கியமும் திராவிட இலக்கிய சித்தாந்தமும், முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ஆகிய நூல்கள்

நமது பண்பாட்டு இயங்களின் திசைவழியையும், கோட்பாட்டுப் புரிதல்களையும் விமர்சன நோக்கோடு முன்வைக்கின்றன.

மொழிபெயர்ப்பு

ஆவ்னர்சிஸ் படைப்பு மார்க்ஸிய அழகியலின் அடிப்படைகள் மொழிபெயர்ப்பு நூல் படைப்பின் அழகியல் கோட்பாடுகளை விரிவாக விளக்கும் ஒரு சொல்லத்தக்க புத்தகம். சோவியத் இலக்கியத்தில்

மனித மதிப்புகள் மொழிபெயர்ப்பும், மகரங்கோவின் வாழ்க்கைப் பாதையும் இந்த வகையில் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆர்.எஸ். சர்மாவின் வகுப்புவாதமும் இராமரின் அயோத்தியும் நம் பண்பாட்டு அபாயங்களை அடையாளம் காட்டும் நூல்.

பரிசும் பாராட்டும்

மனோன்மணியம், மதுரை காமராசர், கேரள பல்கலைக்கழக ஆய்வுமாணவர்கள் ஏழுபேர் பொன்னீலனின் படைப்புகள் குறித்து வெவ்வேறு பொருட்கூறுகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். முல்க்ராஜ் ஆனந்த் படைப்புகளோடு பொன்னீலனின் எழுத்துக்களை ஒப்பியல் ஆய்வு செய்த ஆங்கில முனைவர் பட்ட ஆய்வும் இதில் உள்ளடங்கும். பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாகவும் பொன்னீலனின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

'ponnelam prize 600ஜீவா என்றொரு மானுடன்Õ, Ôமார்க்ஸிய அழகியலின் அடிப்படைகள்Õ போன்ற நூல்களுக்கு தமிழக அரசின் விருதும், Ôபுதிய தரிசனங்கள்Õ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருதும், திருப்பூர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பலப்பல அமைப்புகளின் விருதுகளையும் பொன்னீலன் பெற்றுள்ளார். ஊடக இதழ்களில் பொன்னீலனின் நேர்முகங்களும் முக்கியமானவை. சோவியத் யூனியன், டென்மார்க், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் இலக்கிய, பண்பாட்டு நோக்கிலான பயணங்கள் செய்துள்ளார்.தேசிய புத்தக நிறுவனம், மத்திய திரைப்பட சான்றிதழ் தணிக்கைப்பிரிவு போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

வாசகனை ஈர்க்கவைக்கும் அற்புதத்தருணங்கள்

அண்ணாச்சி பொன்னீலனின் துவக்ககால Ôஊற்றில் மலர்ந்ததுÕ குறுநாவல் உதிரிப்பூக்கள் மகேந்திரனின் இயக்கத்தில் Ôபூட்டாத பூட்டுக்கள்Õ என்ற திரைக் காவியமாய் வெளிவந்தது.

இந்திய அளவில் இயங்கும் முற்போக்குப் படைப் பாளிகளின் இயக்கமான அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசிய தலைவராக இருக்கும் அண்ணாச்சி பொன்னீலன் தமிழகத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அமைப்பை ஒரு விரிவான பண்பாட்டு இயக்கமாக உருவாக்கினார். இப்போதும் அதன் சிறப்புத் தலைவர்களில் ஒருவராக இருந்து தமிழகம் முழுவதும் உள்ள இளைய படைப் பாளிகளோடு தனது உரையாடலை நிகழ்த்துகிறார்.

அண்ணாச்சியின் மேடைப் பேச்சும் மிக உணர்ச்சி கரமாக இன்றும் வாசகனை ஈர்க்கவைக்கும் அற்புதத் தருணங்களைக் கொண்டிருக்கிறது

இளைய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி தமிழுக்கு அடையாளம் காட்டுவதில்  எந்தக் கூச்சமும் அவர் கொள்வதில்லை. எனவேதான் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியான பொன்னீலன் நமக்கெல்லாம்  அன்பு அண்ணாச்சியுமாக இருக்கிறார். தமிழகமெங்கும் பொன்னீலனின் பெயரை உச்சரிக்கும் இலக்கிய வாரிசுகளும் ஏராளம் ஏராளம்.

Pin It