திருப்பூர் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது.  இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று கனடா வாழ் அ.முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”.  தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்க மற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.  முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது.  எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவை யும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றிவிடும் அவர் நவீன தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார்.

அவ்வகையில் அவரின் சமீப நூல்களான, “அமெரிக்க உளவாளி”, “உண்மை கலந்த நாட் குறிப்புகள்”, “ஒன்றுக்கும் உதவாதவன்”, “அமெரிக்கக்காரி” ஆகிய நூல்களில் ஏதாவது ஒன்றைப் பற்றிய ஆய்வு, ரசனை சார்ந்த சிறந்த எட்டுக் கட்டுரைகளுக்கு ரூ.4000 பகிர்ந்தளிக்கப்படும்.  மேற்குறிப்பிட்ட எந்த நூலைப் பற்றியும் இருக்கலாம்.  பக்கக் கட்டுப்பாடு இல்லை.  தபாலில் அனுப்புதல் சிறந்தது.  மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.  30-4-2012க்குள் அனுப்பலாம்.

முகவரி : சுப்ரபாரதிமணியன்
‘கனவு’ காலாண்டிதழ்
8/2635 பாண்டியன் நகர்,
திருப்பூர் - 641602
இமெயில் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It