மொத்தப் பரிசுகள் 14                                             

மொத்தத்தொகை ரூ.15லட்சம்

மொழியாக்கப் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தி அத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் நம் இதழின் தலைமைப் புரவலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நிறுவியுள்ள நல்லி - திசைஎட்டும் மொழியாக்க விருதுகளுக்கான போட்டியில் பங்குபெற நூல்களை வரவேற்கிறோம்.

1. தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து

2. பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து

3. ஆங்கிலப் புனைவிலக்கிய நூலின் தமிழாக்கத்திற்கு ஒரு விருது

4. ஆங்கிலம் / பிற அயல்மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள்.  ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.

போட்டியில் கலந்துகொள்ளாத மூத்த மொழிபெயர்ப்பாளர்களில் தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

விருதாளர்களுக்கு 2011 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் ரொக்கப் பரிசுகளும் பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்படும்.

மொழியாக்கப் படைப்பாளிகள் கடந்த ஐந்து வருடங்களில் (2006-2010) வெளியான தங்கள் நூல்களின் மூன்று பிரதிகளை கீழ்க்கண்ட இணைப்புகளுடன் ஆசிரியர், திசை எட்டும், 6, பிள்ளையார் கோயில் தெரு, மீனாட்சிப் பேட்டை, குறிஞ்சிப்பாடி - 607302 போன் : 04142 - 258314 என்ற முகவரிக்கு 2011, மே 31 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இணைப்புகள்:

மூல நூலின் ஒரு பிரதியும் தங்கள் இலக்கியப் பணி உள்ளிட்ட வாழ்க்கைக் குறிப்பும் தங்கள் புகைப்படமும்.

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களைப் பதிப்பித்தவர்களும் மூல நூலாசிரியர்களும் விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்படுவார்கள்.

- ஆசிரியர்குழு

தொடர்புக்கு:

ஆசிரியர் : குறிஞ்சிவேலன்

6, பிள்ளையார் கோயில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி - 607302

தொலைபேசி எண் : 04142 - 258314 / 258012; செல் : 9443043583

Pin It