நம் தலைமுறையின் புகழ்பெற்ற மார்க்ஸிய வரலாற்றாளரான எரிக் ஹாப்ஸ்பாவ்ம் எழுதி ஒரு கட்டுரையோ, நூலோ வெளிவந்தால், அது எப்போதும் உலகின் கவனத்தை ஒருங்கே குவிக்கும் என்பதில் அய்யமில்லை. ஆக்கத்தில் சுயசிந்தனை, கருத்துகளில் கிளர்ச்சியூட்டுதல் என அவரது ஆய்வுகளெல்லாம் புதிய பாதை வகுத்துக் கொடுப் பதோடு மட்டுமின்றி, புலமையிலும், அரசியலிலும் நீடித்து வரும் மரபொழுங்கையும் சச்சரவுக் குள்ளாக்குவது வழக்கம். அந்த வகையில் பின் - சோவியத் ஒன்றியக் காலத்தில் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘கார்ல் மார்க்சின் கொள்கையின் வளர்ச்சியும் அவரது காலத்துக்குப் பின் ஏற்படுத்திய தாக்கமும்’ பற்றி ஹாப்ஸ்பாவ்ம் அண்மையில் வெளிவந்துள்ள அவரது நூலில் ஆழ, அகலத்துடன் விவாதித்துள்ளார்.

மார்க்சியம் நடைமுறையில் தோல்வியைத் தழுவிய கோட்பாடு என்று கூறி, அது அடியோடு முடிவடைந்துவிட்டதாக அறிவுஜீவிகள் சிலர் கொண்டாட்டம் போடுகிற வேளையில் ஹாப்ஸ் பாவ்ம் மார்க்சியத்தின் அரசியல் நல்வாய்ப்பு களையும், கூர்மையான புலமைக் கூறுகளையும் சுட்டிக்காட்டி “21-ஆம் நூற்றாண்டின் சிக்கல் களுக்கான தீர்வை, பொருளாதார அல்லது அர சியல் விடுதலை தனித்தோ, இரண்டும் இணைந்தோ கொடுக்க முடியாது” என்பதால் “மார்க்ஸை ஆழ்ந்து கவனத்தில் கொள்ள வேண் டிய தருணம் மீண்டும் ஒருமுறை வந்துள்ளது” என்று இவரது சிந்தனையைத் தட்டியெழுப்பும் மார்க்ஸியப் பாடங்களையும் தீரத்துடன் மீண்டும் தொகுத்துக் கொண்டு வந்து சேர்க்கிறார்.

இன்றைய உலகில் நிலவும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான விளக்கக் குறிப்பு மார்க் ஸில்தான் உள்ளடங்கியுள்ளது என்பது அவர் பெற்ற புகழால் அல்ல - பி.பி.சி. நடத்திய வாக் கெடுப்பில் மெய்யியலாளர்களுள் தலைசிறந்தவர் என்று மெய்ப்பிக்கப்பட்டார் - மாறாக, மனிதச் சிந்தனையை அவனது இருப்பில் மட்டும் பார்த்த அவரது முன்னோடிகளைப் போல அல்லாமல், மார்க்ஸ், “அரசியல், பொருளாதாரம், அறிவியல், மெய்யியல் என்று அனைத்திலும் உறவு கொண்ட ஒரு முழுமையானதாகவே” உலகத்தைப் புரிந்து கொண்டமையினால்தான். உண்மையில், இப்படி யொரு கருத்துருவாக்கம்தான் மார்க்ஸின் கோட் பாட்டிலும் நடைமுறையிலும் உறுதியாக வேரூன்றியுள்ள ஹாப்ஸ்பாவ்மின் அரசியல் நோக்குக்கு அடிப்படையாகும்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வரலாற்றைப் பற்றிய அறிவார்ந்த, அரசியல் உள்ளடக்கத்தையும் முதலாளித்துவம் தன்னைத் தானே ஆதிக்க அமைப்பாக உருவாக்கிக் கொண் டுள்ள ஓர் உலகத்தில் மார்க்சிய மெய்யியலின் வெற்றிகரமான பங்களிப்பையும் பற்றிய அவரது ஆழமான புரிதலையும் எடுத்துரைக்கின்றன.

நூலின் முதல் பாகத்தில், மார்க்ஸியப் பகுப் பாய்வுக்கு அடித்தளமான கருத்தியல் ரீதியான கோட்பாட்டு அளவிலான சிக்கல்களை அழுத்த மாக வலியுறுத்தும் முக்கியமான மார்க்ஸிய மூல பாடங்கள் விவாதிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மார்க்ஸின் பொருளாதார, மெய்யியல் சார்ந்த கையெழுத்துப்படி (ழுசரனேசளைளந), எங்கெல்ஸ் எழுதிய ‘இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை’ ஆகிய நூல்களை மறு வாசிப்புக்கு உட்படுத்துவது அரசு, ஜன நாயகம், தேசியவாதம் போன்ற கருத்துநிலை களைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை மீண்டும் நினை வுக்குக் கொண்டு வருகிறது.

 

‘சட்டத்தைப் பற்றிய ஹெகலின் மெய்யியல் மீதான விமர்சனம்’ (1843) என்னும் நூலுடன் தொடங்கும் அரசைப்பற்றிய மார்க்ஸியச் சிந்தனையின் பரிணாமத்தைப் பற்றிய சுருக்கமான, செறிவான ஒரு விளக்கத்தில், ஹாப்ஸ்பாவ்ம் “அரசைப் பற்றிய முழு வளர்ச்சியுற்ற மார்க்ஸியக் கோட்பாடு ‘அரசு = கட்டாய அதிகாரம் = வர்க்க ஆட்சி’ என்ற சாதாரணமான சமன்பாட்டைக் காட்டிலும் அதிக சிக்கலானதாக இருந்தது” எப்படி என்று விவரிக்கிறார். அரசுருவாக்கங்கள் சமூக உள்ளமைப்புக்கு அடுத்த நிலையிலேயே இருந்தன என்ற மார்க்ஸின் கொள்கை முடி வையும், மக்கள் பிரதிகளால் ஆன அரசாங்கம் - அதாவது, அரசாங்கத்தை அதன் உட்செறிந்த, அடிப்படை நிலையில் கருத்திற்கொள்ளாமல் அரசின் ஒரு சம்பிரதாயமாக ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தும் முறையை மார்க்ஸ் விமர்சனத் துக்குள்ளாக்கியதையும் நம்முன் விரித்துரைக் கிறார் ஹாம்ஸ்பாவ்ம்.

மார்க்ஸ் தனது வழித்தோன்றல்களிடம் விட்டுச் சென்ற அரசியல் பற்றிய பொதுவான கருத்துகள் இன்றைய நிலைக்கும் பொருந்தக் கூடியனவாகவே உள்ளன. அரசியலானது வர லாற்றுக்குக் கீழ்நிலையில் உள்ளது; பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் சாரம் என்ற வகையில் வரலாற்று இயக்கத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் சிறப்பாக, அரசியல் அரசுகளுக்குள்ளே வர்க்கப் போராட்டங்களுக் கிடையேதான் உறைந்துள்ளது; அரசுவர்க்கங் களுக்கு மேலிடத்தில் ஒருபோதும் இருக்கவில்லை; அதேபோன்று ஒட்டுமொத்த சமூகத்தின் பொது வான நலனையும் முன்னெடுத்துச் செல்லவும் இல்லை; வர்க்கங்களுக்கிடையே நடுநிலையுடனும் நடந்துகொள்ளவில்லை.

இந்தத் தெளிவுறுத்தல்கள் ஒருபுறமிருக்க, “மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்கள் அரசியல் சிந்தனையில் நிரப்பப்பட வேண்டிய அல்லது ஐயுற்றுத் தெளிவடையவேண்டிய இடங்களையும் ஏராளமான அளவில் விட்டுச் சென்றுள்ளனர்” என்கிறார் ஹாப்ஸ்பாவ்ம். பொதுவாக, பழைய அரசியல் இலக்கியங்களிலிருந்து அரசியல் தந்திரம், செயல்திட்டம் தொடர்பான நெறி முறைக் கையேடு போன்று எதையும் அப்படியே வாக்கியம் வாக்கியமாகத் தரவு செய்து கொள்வது என்பது இயலாத ஒரு காரியம் என்று அழுத்த மாகக் கூறுகிறார். மார்க்ஸிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே அடிப்படைக் கூறு பகுத்தாயும் நெறிமுறையும், அதனையொட்டிய நடவடிக்கையும்தான்; தயார் நிலையிலுள்ள ready made திட்டங்களை அப்படியே தருவித்துக் கொள்வது அல்ல.

செயல்திட்டத்துக்கு அடிப்படையாக இருக் கின்ற ஒரு நெறி, கோட்பாடாக உருவெடுக்கும் போது, அந்நெறியைத் தோற்றுவிக்கிறவர்கள் உன்னதமானவர்கள் அல்லது புனிதர்கள் என்கிற உயர்நிலையை அடைவர். இப்படிப்பட்ட தற்செயலான, எதார்த்தமான நிலையில்தான் மார்க்ஸியம் 20-ஆம் நூற்றாண்டில் ஒரு பின்னடைதலை எதிர்கொண்டது. என்றாலும், அவர் மார்க்ஸியத்தைக் கையாளும் முறை என்பது ‘அது கோட்பாடுகளின் தொகுப்பு’ என்று அணுகி, அவர் உண்மையில் என்ன எழுதியிருக் கிறாரோ, அந்த உட்பொருளுக்கு முரண்பட்ட கருத்து தெரிவிப்பதைவிட முக்கியமாக அது ஒரு “முறை” என்று கவனத்திற்கொண்டு அதைத் தொழிற்படுத்துவதே புலமைச் செயல்பாடு ஆகும்.

இருபதாம் நூற்றாண்டு மார்க்ஸிய அறிவுசார் பரப்புக்குள்ளே மூன்று முக்கிய போக்குகளைச் சந்தித்தது: முதலாவது, அறிவுசார், பண்பாட்டுத் தாக்கத்தில் விரைவான முன்னேற்றம்; இரண் டாவது, அரசியல் வாய்ப்புகளில் கடுமையான சரிவு; மூன்றாவது, அதன் கோட்பாட்டை மறு ஆய்வு செய்வதில் தருக்கரீதியான முன்னேற்றம் - குறிப்பாக, கருத்துநிலை, பண்பாடு சார்ந்த கூறு களில் கண்ட முன்னேற்றம். இந்த வளர்ச்சிநிலை களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிற நோக்கத்தில் ஹாப்ஸ்பாவ்ம் மூன்று பரிமாணங் களில் தனது கவனத்தைத் திருப்புகிறார் : 1880-1983 காலத்தில் மார்க்ஸிய அறிவுத் தோற்றவியலின் அபரிமிதமான வளர்ச்சி; மார்க்ஸியக் கோட் பாட்டு மறுஆய்வுகளில் கிராம்ஸ் தலையீட்டி னால் ஏற்பட்ட முக்கியத்துவம்; இறுதியாக, 1983 - 2000-இன் போது ஏற்பட்ட மார்க்ஸியப் பின்ன டைவு. இந்தக் காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் தாக்கம் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளின் முரண்பட்ட மார்க்ஸிய மரபுகளில் செயல்பட்டதன்படி அரசியல் களத்தில் தன்னை விரிவுபடுத்திக் கொண்டது; அத்துடன் மற்ற நாடுகளில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகள் புலமைத் துறையிலும் பண்பாட்டுத் தளத்திலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தவும் பெரும் பங்காற்றியது. மார்க்ஸியப் பகுப்பாய்வு உருவறை யுடன் இணக்கம் கொள்ளாதவர்களும் மார்க்ஸின் ஆய்வு நெறியையும், விவாதங்களையும் பயன் படுத்திப் பயன்பெற முடியும். மற்ற எந்தத் தனி எழுத்தாளரையும்விட மார்க்ஸிடமிருந்தே அதிக மான மேற்கோள்களைப் பயன்படுத்திய ‘மூல தனமும் பருப்பொருள் வாழ்வும்’ எழுதிய மார்க்ஸிய சார்பற்ற பிரெஞ்சு வரலாற்றாளர் ஃபெர் னாண்ட் ப்ரௌடரை இதற்கு எடுத்துக்காட் டாகக் கூறுகிறார் ஹாப்ஸ்பாவ்ம்.

சோஷலிச நாடுகள் தழுவிய தோல்வி ஒருபுற மிருந்தாலும், மார்க்ஸியத்தின் புலமை வீச்சும், தாக்கமும் இன்றும் உலக அளவில் செறிவாகவே உள்ளன. இந்த வளர்ச்சிநிலை “மார்க்ஸியத்தின் மரபார்ந்த மெய்யியலும் கோட்பாடும் அனுபவ பூர்வமான மாற்றம் குறித்த சிந்தனை, திருத்தம், மறுஆய்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட வேண் டும்” என்ற நோக்கத்தின் அடிப்படையிலானது. ஹாப்ஸ்பாவ்ம் எழுதியுள்ள “உலகை மாற்றுவது எப்படி” என்னும் நூல் இந்தச் செல்தடத்தைத் தான் சிறப்பான முறையில் வலியுறுத்துகிறது.

எரிக் ஹாப்ஸ்பாவ்ம் எழுதி உலகெங்கும் ஒரு திடீர்ப் புலமைப் புயலுக்கு வித்திட்ட “How to change the world” என்னும் ஆங்கில நூலுக்குத் தோழர் கே.என்.பணிக்கர் எழுதிய மதிப்புரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம் : சா.ஜெயராஜ்

நன்றி : திஹிண்டு

Pin It