தோழர் மீ.த.பாண்டியன் (செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ்நாடு மாநிலக் கமிட்டி) தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
தோழர் பாண்டியன் உழைக்கும் மக்களின் உரிமைக்கும் விடுதலைக்கு மான போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பல்வேறு சவால் களைச் சந்தித்த வண்ணம் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றிவரும் முக்கிய தலைவர்.
தமிழக மக்கள் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நிறுவி பண்பாட்டுத் தளத்தில் அயராது உழைத்து வருபவர்.
மக்கள் விடுதலைக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள தோழார் பாண்டியன் அவர்களின் உயிர்காக்கும் மருத்துவச் செலவிற்கான இன்றைய உடனடித் தேவை ரூ.2,00,000 (ரூபாய் இரண்டு லட்சம்) ஆகிறது.
ஜனநாயக உணர்வும் மக்களின் விடுதலை வேட்கையும், புதிய விடியலை நோக்கி தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட அன்பு நெஞ்சங்கள் தாராளமாக நிதி உதவி செய்து தோழர்.பாண்டியன் தன் வரலாற்றுப் பயணத்தை அடுத்த கட்டம் மேற்கொள்ள உறுதுணையாக நிற்க வேண்டுகிறோம்.
நிதி உதவியை நேரில் அளிப்பவர்கள் தவிர பணவிடை, காசோலை, வரைவோலையாக அனுப்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு / முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.
மு.திருமாவளவன்
(A/c, No, 28739, I,O,B, Santhome Branch,Chennai-4)
61, வெங்கடேசுவரா நகர், 14ஆவது தெரு,
கொட்டிவாக்கம், சென்னை 600 041.
தோழமையுள்ள
• முனைவர் மு.இராமசாமி (நிஜ நாடக இயக்கம்)
• முனைவர் தொ.பரமசிவம் (நெல்லை)
• பேரா. ப.கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்)
• பேரா. சரசுவதி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)
• திரு. மு.இரா.முருகன் (வழக்குரைஞர்)
• கவிஞர் இன்குலாப் (மக்கள் கவிஞர்)
• முனைவர் ப.சிவகுமார் (சென்னை)
• பேரா. அ.மார்க்ஸ் (சமூக சிந்தனையாளர்)
• பேரா. சே.கோச்சடை (காரைக்குடி)
• பேரா. மு.திருமாவளவன் (கல்வி மேம்பாட்டு இயக்கம்)
கீற்றில் தேட...
கவிதாசரண் - ஆகஸ்டு 2008
தோழமை நெஞ்சங்களுக்கு வேண்டுகோள்!
- விவரங்கள்
- மு.திருமாவளவன்
- பிரிவு: கவிதாசரண் - ஆகஸ்டு 2008