கீற்றில் தேட...

இரத்தச் சேற்றில்
உயிர்கள் சூடி மலரும்
மதவெறித் தாமரைகள்
தலைநீட்டிப் பகைவளர்க்கும்
தருணங்களில்
இந்தியாவின் தேசிய மலர்
இதழ்கள் உதிர்த்து
இறந்து போகிறது

மலர் முகமூடிக்குள்
மறைந்துகொண்டு
மானுடப் பலிகளைத்
தேடியலையும்
இந்தப் பிணந்தின்னிக்
கழுகுகளுக்கு
எப்போதும்
தப்பான கதைகளே
தகராறு செய்யத்
தேவை

அப்போது
இராம ஜென்ம பூமி
இப்போது
இராமர் பாலம்

வெறும்
மணல்திட்டு
எப்படி
மனிதர்கள் போய்வரும்
புனிதமானது

அவதாரத்தின் பெயரில்
அராஜகம்

மதங்களை முன்வைத்த
கொடூரங்ங்களின் அரசியல்
கட்டவிழ்த்து விடப்படும்
காலத்திலெல்லாம்
விஷம் தோய்ந்த
திசூலத்தின்
கூர்முனைகளில் சிக்கித்
துடித்துக்கொண்டிருக்கிறது
தேசம்

இராமராஜ்ஜியத்தில்
வானரங்கள்
ஜனநாயகத்தில்
காவிகள்

தேசியக் கொடியில்
முதலில் இருக்கும் திமிர்
தேசத்தையே துண்டாடப் பார்க்கிறது

சேதுசமுத்திரத் திட்டம்
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைக்க
பாரதி கண்ட கனவு
பாவிகளே

ஏன் அதை உங்கள்
கழிசடை அரசியலுக்குக்
காவுகொடுக்க
நினைக்கிறீர்கள்

சரயு நதியில் விழுந்து
செத்தவனுக்காக
இத்தனை கலவரம்
ஏற்படுத்தும் நீங்கள்
தமிழன் கால்வாய்க்கப்பால்
ஈழத்தில்
தினம்தினம்
செத்துக்கொண்டிருக்கிற
எம் இனத்தின்
படுகொலையைத் தடுக்க
என்ன புடுங்கினீர்கள்

உங்களுக்கு
மறைந்திருந்து கொலைசெய்த
வஞ்சகன் இராமன் என்றால்
எங்களுக்கு
விடுதலைச் சமல்
மரணத்தை முத்தமிடுகிற
மாவீரத் தமிழர்கள்

தமிழினத்தின்
தமிழ்மொழியின்
தமிழ்நாட்டின்
தலையையும் நாவையும்
வெட்டுவோம் என்று சொல்ல
எவ்வளவு கொழுப்பிருக்க வேண்டும்
உங்களுக்கு

கால்நடைகளோடு
கால்நடையாய் வந்த
நால்வருணப் பேடிகளே
எம் காலக்கிழவன்
காலத்திலேயே
மனுதர்மத்தில் நாங்கள்
மழித்துப்போட்ட
மயிரடா அது

எச்சக்கிறோம்
சுட்டெரிக்கும் எம்
தமிழ்ச் சூரியனின்
சுயமயாதைப் பெருநெருப்பில்
பொசுங்கிச் சாம்பலாய்ப்போகும்
மனிதத்துக்கு எதிரான
உங்கள் மதவெறி பாசிசத்தை
எதிர்கொள்ள
கைகள் தேவையில்லை
எங்கள் காலில் கிடக்கும்
செருப்புகளே போதும்