நான் பார்த்தேன்
ஒரு விசேசமான சமையல்காரனை
வாயினுள் கையை விட்டு
கீழே இறக்கி
ஆட்டின் தொண்டை வழியே
துடிக்குமதன் இதயத்தைத் தொட்டு
முஷ்டியை இறுக மூடி
ஒரே குத்தில் கிழித்து .....
ஆம் ஐயா!
அவன்தான்
ஸ்பெசலிஸ்ட்
கீற்றில் தேட...
புது எழுத்து - ஜனவரி 2007
இதயத்திலிருந்து
- விவரங்கள்
- பினாகினி
- பிரிவு: புது எழுத்து - ஜனவரி 2007
தேத்யூஸ் ரோசேவிச் - தமிழில் பினாகினி