கௌரி ராம் நாராணன் / தமிழில்: சாந்தி சாதனா

கலைந்த முடியுடனும் கசங்கிய உடையணிந்தவனுமாய் அந்த பதினோரு வயது பையன். கல்கத்தாவில் உள்ள அவனது வீட்டிலிருந்து பத்து நாட்களாக பல்வேறு ரயில்கள் அவனை புதுதில்லிக்கு விட்டுச் சென்றது. கையில் சிதாருடன் கிழிந்த ஆடையணிந்த அச்சிறுவன் வாயில் காப்போன் பதான் அறியாவண்ணம் ரகசியமாய் அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் நுழைந்தான். அங்குதான் நிகழ்ச்சி உதவியாளர் ஜாஃபர் ஹூசைன் அவனைக் கண்டார். களைப்பானது அப்பையனின் குரலில் தொனிக்கும் பெருமையை மறைக்கவில்லை, ‘நான் விலாயத்கான். காலஞ்சென்ற இனாயத் கான் சாஹேபின் மகன்’.

 “மகனே!” என்று ஹூசைன் ஆதூரத்துடன் அவனைக் கட்டி ஆரத் தழுவினார். “நீ உண்மையில் எனது குருவின் மகனா? எது உனை கொணர்ந்திங்கு சேர்த்தது? தனியாக? இந்நகரத்தில்?”

ஆனால் ஹூசைனாகட்டும், பிறகு அகில இந்திய வானொலி இயக்குனர் ஜெனரல் பொகாரியாகட்டும் பள்ளியை விட்டு வெளியேறிய அவனை எதற்கும் அனுமதிக்கத் தயாராயிருந்தனர். “நீங்கள் என்னைத் திரும்ப அனுப்ப முயற்சித்தீர்கள் என்றால் நான் திரும்பவும் ஓடிவிடுவேன்” என்றான் தேம்பல்களுக்கிடையே.

பொகாரி ஒன்றும் அத்தகைய சர்வாதிகாரி அல்ல. அவர் தந்தையற்ற அக்குழந்தையை ஆதரிக்கவும், அவனது சங்கீதத் திறமையை போற்றி வளர்க்கவும் முடிவு செய்தார். அதிலும் இட்டாவா கிரானாவின் தகுதியும் பெருமையும் கொண்ட அக்பர் அவையின் தான்சேன் சந்ததி வழி வந்த இளந்தென்றலல்லவா விலாயத்கான்.
பொகாரி வாகன பழுதுபார்க்கும் இடத்தை பையன் தங்குமிடமாக ஒதுக்கித் தந்தது மட்டுமில்லாமல் அவனை அகில இந்திய வானொலி நிலையத்தின் கலைஞனாக்கி ரூ 10 மாத வருவாய் பெற ஏற்பாடும் செய்தார். கீழ்கண்ட கேள்விக்கு பதிலிறுத்த பின்னர் இது நிகழ்ந்தது.

“நீ ஏந்தியுள்ள சிதாரை உனக்கு வாசிக்கத் தெரியுமா?” என்றவுடன் உடனடிப் பிரவாகமாய் பொங்கியது பைரவி. அதை ரசிக்க நிலையத்தார் ஒன்று கூடினர். ஜெய்பூர் கிரனாவின் மூத்த சிதார் இசைக் கலைஞரான ஹைதர் ஹூசைன்கான் அதிசயித்தார், ‘ஆஹா! இனாயத்கான் இன்னும் உயிரோடிருக்கிறார்! இங்கே, இந்த பையனுள்ளே!’

மேலும் நிலைய இயக்குனர் விலாயத்தின் சிற்றப்பாவான வாஹித்கான் (ஹைதராபாத் - சிதார் இசைக்கலைஞர்) மற்றும் தாய்வழி பாட்டனாரான பந்தே ஹூசைன்கான் (வாய்ப்பாட்டுக்காரர் - நஹான்) ஆகியோருக்கு மாதம் இரு வானொலி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து டெல்லிக்கு வரவழைத்து அவர்களது தொடர் வருகையின் மூலம் பையனுக்கு பயிற்சியளிக்கச் செய்தார். இப்படியாக இளைஞன் காதற்ரசமிக்க ‘கயால்’ முறையில் பாடவும், பாரம்பரியமிக்க இசை வடிவமான ‘த்ருபதங்’-ஐ சிதார் மற்றும் சுர்பஹாரில் வாசிக்கவும் ஒருங்கே பயிற்சி பெற்றான். அவனால் சுயமாக வாய்ப்பாட்டு மற்றும் சிதார் இசை நிகழ்ச்சி இரண்டிலும் சமபங்களிப் புடன் மகிழ்ச்சியாக பரிமளிக்க முடிந்தது.

“நீங்கள் பார்த்தீர்களானால் இயற்கையாகவே ‘கயால்’ என்னுள் நுழைந்து எனது சிதார் வாசிப்பையும் ஆக்ரமித்தது. மேலும் நான் பாரம்பரிய மெல்லிசை வடிவங்களான தும்ரி, தாப்பா, தரானா, சைத்தி, பர்ஸôதி போன்றவற்றில் பூரணத்துவத்தோடு மகிழ்ச்சியாக பரிணமரிக்க முடிந்தது.” என்பார் அவர்.
தந்தை இனாயத்கான் உடன் விலாயத் (பிறப்பு 1928) இணைந்து மேடையில் இசைத்து இசை நுணுக்கங்களைக் கற்கும் முன்பாகவே இறந்து போனார். ஆனால் தந்தை விட்டுச் சென்ற இசைப் பொறியை கணன்ற வண்ணம் செய்தார் தாயார் பஷ÷சென்பேகம். அவர் சஹரான்பூர் மற்றும் நஹானின் புகழ்பெற்ற வாய்ப்பாட்டுகாரரின் மகள்.

அப்போது அவருக்கு 68 வயது. விலாயத்கானின் வளர்ச்சிக்கு வித்திட்ட, ஆகர்ஷித்த, புதுமையை உருவாக்கின நிதர்சனமான அவரின் கடந்த கால நினைவுகளில் ஈடுபட மகிழ்ச்சியாக விழைந்தார்.

“அதீதமான பாரம்பரியம் எதையும் புதிதாக உருவாக்க இயலாதவர்களுக் காகத்தான். அத்தகைய வளர்ச்சியில் நான் எனது தனித்துவத்தை இழக்க விரும்பவில்லை” என்று சிரித்தவாறே, அவரது வாத்திய நரம்புகள் மானுடக் குரலின் அழுத்தமான அதிசயத்தக்க பல்வித பரிமானத்துடனான தொடர்ச்சியைப் பிரதிபலிக்கும்படி கடந்து போன வருடங்களில் அவரது பாணி மற்றும் வாத்தியத்தில் செய்த மாற்றங்களைப் பற்றி விளக்குகிறார்.
அவர் தனது மூதாதையரின் வாத்திய இசை முறையில் (தந்த்ரகாரிஞிகட்காரி) திருப்தி அடையாததால் தான் வாத்திய இசைக்கான ஒரு புதிய பாதையை ஏற்படுத்தினாரா? ‘இல்லை... இல்லை’ என்று விரைவாக குறுக்கிடுகிறார் கான்சாஹப். ‘லயத்ரி (லயம்) மற்றும் சுரிலபன் (இனிமை) இல் என் தந்தைக்கு சமமானவர் அப்துல் கரீம்கான் மட்டும் தான்.

இன்றுவரை அவர் இசைத்தது போன்று முழுமையாக என்னால் வாசிக்க இயலவில்லை. ஆகையால் தான் எனக்கென தனி பாணியை உருவாக்கினேன்.

நண்பர்களும் உறவினர்களும் எள்ளி நகையாடியபோது, “எனக்கு நானே சபத மேற்றுக்கொண்டேன். என் தந்தைக்கு ஏற்ற மகன் என எனது திறமையை நிரூபிக்காமல் திரும்ப மாட்டேன்” என்று. தனது தந்தையின் மரணதத்ôல் விளைந்த வலியை நினைவு கூர்ந்தவாறே அவரது கரங்கள் கண்களைத் தழுவுகின்றன. அந்நிகழ்வு அவரை அவரது கடினமான பாதையில் தனியாக முன்னேற நிர்ப்பந்தித்தது. அத்துடன் ஒரு குளிர்கால காலைப் பொழுதில் ‘சுர்பஹாரின்’ (இன்னிசை மாலை) புல்வெளியில் டெஹ்ராடூனின் இல்லத்து விருந்தினராய் அவர். “மகனே! இதோ பார் உனது தேனீர் குளிர்ந்துவிட்டது.” ஒரு பறவையின் அழைப்பு அவரது காதைக் கவர்ந்தது. “எவ்வளவு சிறிய பறவை, எவ்வளவு அற்புதமான குரல்” “நீ எங்கிருக்கிறாய்?” என்று அது வினவுகிறது. அவர் அதன் குரலை இசைக் குறிப்பாக காய்ந்த சருகுகளின் ஒலியினூடே பதிவு செய்தார். இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு பிறகு வருடத்தில் நான்கு மாதங்கள் இந்த ரம்மியமான அமைதியை அனுபவிக்க அதிர்ஷ்டம் செய்தவன் நான். ஆனால் எவ்வளவு காலம் இப்படியே அழிக்கப்படாமல் இருக்கும்?

ஏற்கனவே நாம், சுற்றுலா பயணிகள், லாரிகள் போன்றவற்றால் மிகுந்த சீர்கேடு அடைந்துள்ளோம். காடுகள் அழிந்துவிட்டன. ‘சுர்பஹாரில்’ - ஜீவ களை ததும்பி நிறைந்துகொண்டிருக்கிறது. மாணாக்கர்களோடு அவரது இளைய மகள் ஹிதாயத், மகள்களான யாமன், ஷில்லா மற்றும் பேரன் டாட்லர் போன்றோர் டூன் சமவெளியில் விடுமுறையைக் கொண்டாட வந்திருக் கிறார்கள். நாய்க்குட்டிகள், பூனைக் குட்டிகள், கோழிக்குஞ்சுகள், சின்னஞ் சிறு வாத்துகள் மற்றும் வேலையாட்கள் சிறுவர்கள் என உள்ளே வெளியே என்று திரிந்த வண்ணமாய் இருக்க, அமைதியாக எல்லாம் அவரது இரண்டாம் மனைவியான சுபேதா பேகமால் பராமரிக்கப்படுகிறது. அப்பண்ணை வீடானது தானியம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியுடன் பால் பண்ணை, கோழிப்பண்ணை, பழத்தோட்டம், காய்கறி மற்றும் ரோஜாத் தோட்டங்கள் நிறைந்தது.

விலாயத்கானின் முகத்தில் உள்ள அவரது சந்தோஷ சிரிப்பானது, திடீரென மாறும் சுபாவம், படைப்பாளியின் கர்வம், பிரவகிக்கும் படைப்புத்திறன், விரிப்புகள், போர்வைகள், முகலாய சிறு ஓவியங்கள் என அதிசயத்தக்க மற்றும் ஆச்சரியமான சேகரிப்பு ஆர்வங்களை தன்னகத்தே மறைத்துள்ளது. அவரது துப்பாக்கி சேகரிப்பு, சைனா, ஜப்பான், இங்கிலாந்திலிருந்து பைப்புகள், ஜார் மற்றும் கெய்சர் மேசையிலிருந்து சீனத் தட்டுக்கள், கிண்ணங்கள், பாத்திரங்கள், துருக்கி, பொஹ்மியா மற்றும் வெனிஸின் பல வண்ணமயமான கண்ணாடி வில்லைகள், பல்வேறு கிளை விளக்கு கள் கொண்ட தொங்கும் சரவிளக்கு போன்றவை மிகக் கவனமாக உஸ்தாத் தால் சேகரிக்கப்பட் டுள்ளதைக் காணும் பார்வையாளர்கள் ஸ்தம் பித்துப் போவார்கள். அவரது இளம் பருவத் தில் பில்லியர்ட்ஸ், குதிரையேற்றம், நீச்சல் மற்றும் பால்ரூம் நடனம் போன்றவற்றில் எல்லாம் அசாத்திய திறமை உடை யவராய் இருந்தார்.

விலாயத் ஒரு புதுமை யான வடிவமுள்ள வாசனை திரவிய பாட் டிலை எடுத்து ஆழ்ந்து முகர்கிறார். கண்களைத் திறக்கிறார். கண்களில் கண்ணீர். “இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எகிப்து ராணிக்கு சொந்தமானது. இங்கே இதை முகருங்கள் நீங்கள் ஒரு வித்யாசமான உலகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா?”

கான்சாஹேபால் 1951ல் பிரிட்டன் இந்திய விழா வில் என்ன வாசித்தார் என்பதை நினைவு கூற இயலவில்லை. ஆயினும் அந்த பயணம் முடிந்து திரும்ப வரும்போது கொணர்ந்த ஜாகர் XK 150 I ஐ இன்னமும் வருத்தமுடன் நினைவு கூர்கிறார். அவருக்கென முன்னெப்போதும் சொந்தமாக கார் இல்லாததையும்கூட. “நான் இளமையாய் இருந்தபோது வேகமாக ஓட்டுவதில் வெறித்தனமாக இருந்தேன். மரணத்திற்கருகே சென்ற விபத்துக்களும் நிகழ்ந்திருக்கின்றன. நான் அதை இப்போது நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. பகட்டான உடைகள், ஆரவாரப் பேச்சு, புகழுக்கான ஆர்வமிகுதி, வேகமாக வாகனம் ஓட்டுதல் ஆகியவை ஒரு மோசமான விருப்பத்தின் ஆழமற்ற குறியீடுகள்.

இந்த சுய மதிப்பீடு அவரது இசை வளர்ச்சியின் ஒரு பகுதி. அவரது பழைய கருத்துக்கள் பகட்டான வாழ்க்கையை அனுபவித்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. ‘அவர் அதை உணர்ச்சி பூர்வமாய் உணர்கிறார். ஆனால் பகிரங்கமாக விவாதிக்கிறார்” என்று ஒருவர் கூறினார். ஆனால் அழகாக நவீன உடையணிபவரான அவர் வருந்துகிறார், ‘மோசமானவற்றை சுத்தப்படுத்தவே முயல்கிறேன். தூயவனாக, நல்லவனாக.” அவர் முதிர்ந்த பன்முக விவரிக்க இயலாத மகிழ்ச்சியான அற்புத நிலையை அடைந்திருந் தார். அவர் தனக்கு எது தேவையென்று சரியாக வெளிப்படுத்தும் போதெல் லாம் எல்லையற்ற மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தை கண்டவர் போன்று இருப்பார்” என்று விமர்சகர் ஒருவர் பின்பு குறிப்பிட்டார். ‘இதயத்திலிருந்து இசைக்கின்றார், சிதாரின் மூலமாக பாடுகின்றார்’ என்று குறிப்பிட்டார்.

நண்பரும் 50 வருடங்களாக இவரைப் பின்பற்றுபவருமான சிதார் இசைக் கலைஞர் அர்விந்த் பரீக் விலாயத்கான் தனது சொந்த பாணியை உருவாக்க மேற்கொண்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் நினைவு கூர்கிறார். திரைப்படப் பிரிவின் குறும்படம் ஒன்று உறுதியற்ற அம்மைத் தழும்பு களால் உருவான பள்ளங்களுடனான முகம் கொண்ட இளைஞனைக் காண்பித்தது. ஆனால் அவரது இசையைப் பற்றி வெறுப்புடன் கூற ஒன்றும் இல்லை. அது மிகவும் முற்போக்கானது. அவரது இடது கையால் உண்டாக் கும் ஒலியானது வழக்கத்திற்கு மாறானது. மெல்லிசைக்கான நவீனத்துவ கண்டுபிடிப்பையும் அதீத மேதமைக்கான ஆர்வத்தையும் தவறாக புரிந்து கொண்ட மக்கள் அவரை ஒரு தும்ரி இசைக்கலைஞர் என மதிப்பிட்டனர். அவரை அவமானப்படுத்தியவர்களிடம் விலயாத்கான் ஆக்ரோஷத்தோடு நடந்து கொண்டார். ஒரு முறை இசை நிகழ்ச்சியின்போது மூத்த விமர்சகர் ஒருவரை பெயரிட்டு அழைத்துக் கூறினார் “இப்பொழுது நாம் பார்ப்போம் எது மிகவும் வலிமையானது உமது பேனாவா அல்லது என்னுடைய வாத்திய நரம்புகளா” என்று.

அப்படிப்பட்ட தவறாக புரிந்து கொள்ளபட்ட கட்டுரைகள் தான் இந்தியப் பாரம்பரிய இசைக்கு விலாயத்கானின் தனிப்பெரும் பங்களிப்பின் ஆரம்பம். அந்த வகை சிதார் வாசிப்பு பாணியானது இன்று ‘விலாயத்கானி பாஜ்’ என்றழைக்கப்படுகிறது. இதுதான் ‘காயகி அங்’ (பாடகரின் பகுதி) அல்லது முழுவதும் வாய்ப்பாட்டைச் சார்ந்த பாணி. அவரால் உருவாக்கப் பட்டு, முழுமையாக்கப்பட்டு, மாணாக்க பரம்பரைக்கும் இட்டுச் செல்லப் பட்டது. அடிப்படை நாதம், கம்பிகளுக்கிடையேயான அமைப்பு முறை, அதன் இணைப்பு, சிதாரின் கம்பிகள் என திருத்தி அமைத்ததன் மூலம் இசையின் பன்முகத்தன்மை மற்றும் இசையால் ஏற்படும் தாக்கத்தில் அவர் முழுமையான மாற்றத்தைக் கொணர்ந்தார். அதனால் தான் வலது கைப்புற கம்பிகளின் வியத்தகு சக்தியை மற்றும் நீண்ட விஸ்தாரமாக முன்னும் பின்னும் வாசிப்புக்கேற்றவாறு கையாள முடிந்தது. பாட்டின் ப்ரவாகத்தன்மை தும்ரி மற்றும் க்யால்-இன் முர்கிகளுக்கு ஏற்ற வாறு சரியான குரல் அவற்றை உருவாக்கியது. மிகக் குறுகிய காலத்தில் ஹிந்துஸ் தானி இசைக்கு ஒரு புதிய பாதையை அளித்தார் அவர்.

Vilayat Khan கான்சாஹேப் பார்ப்பதற்கு மிகப்பெரும் மகிழ்ச்சிப் பெருக்கோடு உற்சாக மாய் இருந்தார். அவர் அதை எங்கனம் சாதித்தார் என்பதை சாதாரண வார்த்தைகளால் விவரிக்க இயலாது ஆனால் பொங்கும் மகிழ்ச்சியோடு பாடியவாறே (சந்தன் ஃபூல் பங்கே தரூன் கர்வா ...”) நம்மை அழைத்து ‘கேளுங்கள்’ (சுனோ) மற்றும் ‘புரிந்ததா?’ (சம்ஜே?) என்றார்.

தாத்தா பந்தே ஹீசைன் கானின் வார்த்தைகள் தெளிவாக கவரும் வகையில் மென்மையாக ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கும். அவரது தானங்கள் (ற்ஹஹய்ள்) மிகவும் அதீத வேகத்தோடு சிக்கலான அமைப்போடு ஒவ்வொரு சுரமும் சிறிய ஏற்ற இறக்கத்துடன் வார்த்தை இணைப்புடன் சேர்க்கப் பட்டிருக்கும். பழைய நுணுக்கங்கள் மூலம் வாய்ப்பாட்டில் உயர்ந்த மிகச்சரியான நிலையை அடைய இயலாது. அதனால்தான் விலாயத்கான் அதற்கான மாற்றை வடிவமைத்தார்.

அந்நிலையில் அவ்வகையில் இல்லாத பாரம்பரிய இசைக்கலைஞரான கான்சாஹப் எல்லாவற்றையும் உணர்ந்து இசையின் தரத்தை இனிமையை மேம்படுத்தினார். முந்தைய நாள் அவர் பார்த்த ஹாலிவுட் படத்தின் (Bathing Beauty) சாக்ஸஃபோன் இசையின் ஒரு சிறிய பகுதியை தன்னுடைய பைரவியில் மலரச் செய்து காட்டினார். நாட்டுப்புறப் பாடல் முதல் பெங்காலின் மனதைக் கவரக் கூடிய ‘பால் பாடல்கள்’ (Baul Songs) என எதையும் எளிதாக கொணர்ந்து விடுகிறார்.

விலாயத்கான் மீண்டும் தனது பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறார். கல்கத்தாவில் உள்ள அவரது தந்தையாரின் கிராமத்திற்கு மாபெரும் இசைக் கலைஞர்கள் வந்திருந்தார்கள். பாட்டியாலாவிலிருந்து வந்த அப்துல் ஆஷிஷ்கான் வீணை வாசிக்க, அதையே மைசூரில் இருந்து வந்த வெங்கட்டகிரியப்பாவும் வாசித்தார். அல்லாதியாகான் மற்றும் ஃபயஸ்கான் இருவரும் பாட, ஷோம்பு மஹராஜ் அபிநயம் பிடிக்க, தாயார் ஜெயம்மாளின் பாடலுக்கு பாலசரஸ்வதி நாட்டியமாடினார். “ஆஹா, அவர்களைப் பாருங்கள். எத்தகைய தெய்வீகமான காட்சி!” எல்லோரும் இசையை அனுபவித்தார்கள், உணவு உண்டார்கள். மற்றும் சிலர் ‘பங்க்’ என்ற பானம் அருந்தினர். எல்லோரும் ஆனந்த நிலையில் ஒன்றாக கூடி இருந்தனர். ஒருவரேனும் தங்களுடைய இசை மேதமையை பற்றி கர்வப்படவில்லை. மாறாக ஒவ்வொருவரும் மிகவும் பணிவுடன் காணப் பட்டார்கள். நான் அவர்களது இசையை காப்பியடித்தபோது எனது காதைப் பிடித்து செல்லமாக திருகி என்னை ஆசிர்வதித்தார்கள் ...”

“இசையை பற்றிய அவரது முதல் ஞாபகம்?” நான் 1932-க்கு பின்னோக்கிச் செல்ல வேண்டும். கல்கத்தாவில் உள்ள ஆல்பர்ட் அரங்கம். எனது தந்தையார் நுழைகிறார், ஒவ்வொருவரும் எழுந்து கைகளை கொட்டி ஆராவரம் செய்கிறார்கள். மேதகு பிரிட்டிஷ் கவர்னர் மற்றும் அவரது பெருமைமிகு ஆலோசனை பிரபுக்கள், அவர்களது துணைவியர் என அனைவரும் அவருக்கு முன்பாக அங்கு பாடிய அப்துல் கரீம் கானின் இசையை ஈடுகட்ட வேண்டிய சவாலான சந்தர்ப்பம். ஆனால் எனது தந்தையார் புதியதொரு முறையில் வாசிக்க ஆரம்பித்தார். நான் நித்திரையில் ஆழ்ந்தேன். கண்களைத் திறந்தபோது எங்கும் மஞ்சள் நிறம். ‘முட்டாள் பையா!; அது தான் பஸந்த் ராகத்தின் வண்ணம் என்று அடுத்த நாள் காலையில் எனது தந்தையார் கூறினார்.

மூன்றாம் வகுப்பில் மூன்று முறை தோற்ற பின்னர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு சிதார் வாசிக்க முடிவு செய்தான் சிறுவன் விலாயத். அவனது தந்தை சிவந்த விழிகளுடன் கர்ஜித்தார். “சிதார் ஒரு தேள் உனக்குத் தெரியுமா?” என்று.

ஆனால் பையனுக்கு அவனது பாதை கிடைத்துவிட்டது. இங்கே கான் சாஹப் மகிழ்ச்சியில் ஆங்கிலத்தில் கூறுகிறார். “அதன் பின் நான் திட்டு என்பது வாங்கவே இல்லை. சிதாருக்காக எப்போதும் யாரும் என்னை பேசவில்லை!” அவரது இயல்பான திறமைகள் குடும்ப பாராம்பர்ய மிக்கவர்களால் பட்டை தீட்டப்படும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மனநிலை மதிய உணவிற்கு பிறகு மாறியது. இசையின் தரத்தை குறைத்து சமாதானம் செய்து கொள்பவர்களுக்கு எதிராக காட்டமான நீண்ட விமர்சனத்தை முன் வைத்தார். பார்வையாளர்களை சோர்வுறச் செய்யும் நாடகத்தனமான செயல்களை அகற்றினார். இசை நிகழ்ச்சியின் நடுவே இந்திய ஜனாதிபதி உரை நிகழ்த்துவதை அனுமதிக்க மறுத்தார்.

“அவர் ஆரம்பத்தில் அல்லது முடிவில் நிகழ்த்தட்டும். இசை என்பது அவ்வளவு ஒன்றும் மலிவானதல்ல. எனது இசையை ஏற்க இயலாதவர் களுக்காக நான் வாசிக்கவில்லை. மின்னுகின்ற நிலவொளியில் நான் வாசிக்க விரும்பவில்லை. அல்லது ‘நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் சில திரைப்பட பாடல்கள்” என்று உஸ்தாத் அறிவார், இளம் இசைக் கலைஞர்களின் விருப்பம் அதன் தரத்தில் மிகவும் தாழ்ந்து விடுவதை. ஆனால் அரங்கத்தில் அங்கனம் வாசிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. “நாம் திரைப்பட இசைக்கு செல்வோம். கர் நாடக இசையைக் காட்டி லும் அங்கே நிறைய பணம் சம்பாதிப்போம்” என முணு முணுக்கின்றனர். (சத்யஜித் ரேயின் ‘ஜல்சாகர்’ மற்றும் மெர்ச்சன்ட் ஐவரியின் ‘குரு’ ஆகியவற்றிற்கான இவரது சொந்த இசைக் கோர்வை யானது கண்டிப்பான கர் நாடக இசை) பிறகு அவர் தன்னை பெருமையாக கூறிக் கொள்கிறார். ‘இந் நாட்டின் உயர்ந்த மதிப்பிற்குரிய இசைக் கலைஞன் நான்’ என்று. அவரது இந்த குழந்தைத்தனம் வளரும் காலங்களின் பயமாகவும் பாதுகாப்பற்ற தன்மையுமாகிறது.

அமெரிக்க கலப்பு இசை, இந்திய ஆர்கெஸ்ட்ராவுடன் ராக் இசை விழாக் களில் பங்கெடுத்தல் என நீ ஆர்வம்கொள்வாயின் உனது ஆன்மா உன்னைத் தூற்றும். புதிய ராகக் கண்டுபிடிப்பு என்பது மக்களை அறிவிலியாக்குதல் அல்லது இரண்டு வயலினை ஒரு வில்லைக் கொண்டு வாசிப்பது போன்றது என்கிறார். மகிழ்ச்சிக்காக செய்வது எனில் ஜ÷கல்பந்திகள் எல்லாம் சரி. ரவிசங்கர் மற்றும் அலி அக்பர் கானுடனான இவரது அனுபவம் கசப்பானது போட்டியுடன் பழிவாங்கும் தன்மையுடையது. “நான் அவர்களை நினைக்கவே பயப்படுகிறேன்.”

அதே காரணத்திற்காக நிகழ்ச்சியின் டிரம் இசையை குற்றஞ்சாட்டுகிறார். இவை எல்லாம் ‘சவால்-ஜவாப் ரஸ்மதால்” என்று ரவிசங்கரால் அறிமுகப் படுத்தப்பட்டது. (கேள்வியும் பதிலுமான இசையனுபவம்) இதில் சிதார் இசைக் கலைஞரும் வாசிக்கிறார். பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். அல்லா ரக்காஜி மற்றும் ஜாஹிர் ஹூசைன் என்னுடன் இவ்வாறு இசை நிகழ்ச்சி செய்ய தைரியமற்று இருந்தனர். யாராவது தந்திரமாக முயன்றார் களெனில் நான் அவர்களை பிழிந்தெடுத்துவிடுவேன். எனக்கு தபலா வாசிப்பதென்பது மரணத்தை போன்றது என்று ஒரு முறை குமார் போஸ் கூறினார். நான் மூன்று தாளத்தில் வாசித்த ஒரு சாதாரண கட் (gat) பிரயோகத்திற்கு அவரால் சாதாரணமான தாளத்துடன் ஈடுகொடுக்க இயலவில்லை!

அடுத்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் குற்றஞ்சாட்டியது. ‘அவர்கள் பாம்பாட்டிகள் மற்றும் கரடி வித்தை காட்டுபவர்களுடன் சேர்ந்து பொழுது போக்கட்டும். எதிர்காலத்தை கிரிக்கெட்டில் செலவழிக் கட்டும் இசைக்கலைஞர்களுக்கு பிச்சையிடுங்கள்” என்று அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு கொள்கையை எதிர்த்து வெளிநடப்பு செய்தார். அவர் இந்திய அரசாங்கத்திடமிருந்து வந்த எந்த ஒரு விருதையும் ஏற்க மறுத்தார். திறமையைக் காட்டிலும், நியாயமாக தேர்ந்தெடுக்கப் படாமல் மற்றவர்களின் விருப்பங்களுக்கேற்ப சங்கீத நாடக அகாடமியின் தேர்வு இருந்ததால் தனது 37 ஆவது வயதில் கிடைத்த அதன் விருதையும் ஏற்க மறுத்தார்.

பட்டம் மற்றும் பட்டய இசை வகுப்பு பயிற்சிகள் என நிறுவனத்தின் மூலமாக இசை கற்பிப்பதற்கு எதிராக குரல் எழுப்புவது கான் சாஹேபின் இயற்கை. வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டோமானால் அது வேலைக்கான அடையாளம். அது கலையின் தரம் மற்றும் பார்வையாளனின் ரசனையை குறைத்துவிடுகிறது.

அப்படியானால் கற்பிப்பராக கான்சாஹப்? சிரிக்கிறார். ஃபரீக். திட்டம் மற்றும் முறையை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் விழிப்புணர்வோடு இருப்பார்களானால் அலாவுதீனின் பொக்கிஷத்தை திறக்க முடியும். நிறுத்திவிட்டு கூறினார். நீங்கள் ‘ச’ சுரத்தை அப்படியே நிறுத்தமுடியாது ‘ப’ சுரத்திற்கு போக?

‘நான் அதைப் போல் உணர்கிறேன் என்று சொல்லாதீர்கள்” இசையில் எல்லாம் தவறாது காரணத்தோடு வெளிப்பட வேண்டும். அல்லது அவர் அறிவுறுத்தினார். சுர இணைப்பை உருவாக்க நடுவிரலை உபயோகியுங்கள் மால்கௌஸ்-க்காக ‘ச’ - விலிருந்து ‘ம’ - மவையும், பாகேஸ்வரிக்காக ‘க’ - விலிருந்தும் ...”

மகனும் சிதார் இசைக்கலைஞரான சுஜாத்கான் நன்றியுடனான கசப்பான கோபத்துடன் பதிலளிக்கிறார். 15 முறை ஒரு வார்த்தையை வாசிக்கிறீர்கள். ஒரு முறை தவறாகிவிடு கிறது. நீங்கள் சிதாரை வீசியெறிந்து ஓடும் வரை. உங்கள் உள்ளங்கையின் குறுக்கே அடிப்பார். பலரை இவ்வாறு செய்திருக்கின் றார். அவரது கோபம் கட்டுப்படுத்த இயலாதது.

இசைப் பயிற்சியுடனான ஈடுபாட்டை பற்றிய குடும்பக் கதைகளை அப்பா கூறுவார் - தனது மகள் இறந்த செய்தியை கேட்ட பிறகும் தாத்தா இம்தாத்கான் அவரது ‘பல்தாஸ்’ இசைப் பயிற்சியை முடிக்காமல் எழவில்லை. இத்தகைய கதைகள் மாணவர்களை ஆகர்ஷிப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்று வித்தது!
அவ்வாறு போராடி வென்ற மாணவர்கள் சகோதரர் இம்ராத்கான், மகன்களான சுஜாத் மற்றும் ஹிதாயத், சகோதரரின் மகன்களான நிஷாத், இர்ஷத் மற்றும் ஷாஹித் பர்வேஷ் மேலும் வகுப்புகளுக்கு வந்த அர்விந்த் பரீக், பெஞ்சமின் கோமேஷ், கல்யாணி ராய், நிகில் பானர்ஜி மற்றும் ரைஸ் கான் ஆகியோருடன் புர்வி முகர்ஜி மற்றும் சுப்ரா குஹா இருவரும் இவரது வாய்ப்பாட்டு இசையின் மாணாக்கர்கள்.

தாழ்ந்த மேகங்கள் தழுவிய வண்ணம் உடைய லிசாம் மரங்கள் சூழ்ந்த வாறு நாங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். வேண்டுகோள் களுக்கிணங்க உஸ்தாத்திடமிருந்து கிளம்பியது ராகம் ‘காரா’ இசை உருகிய தங்கமென ப்ரவகித்தது. தொண்டையில் ஏற்படும் அதிசய உணர்ச்சியை கண்டு நீங்கள் அதிசயிக்கலாம். மிகவும் இயல்பாய் கைவரக்கூடிய அவருக்கு வாய்த்த பாடுதலை ஏன் அவர் எப்பொழுதோ விட்டுவிட்டார் என்று, அவர் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பாடலை அதிக நேரம் சுவைக்க மாட்டார்களா, அப்படி சொல்ல இயலாதவாறு பாடல் முடிந்தவுடன் வாத்திய இசை ஆரம்பிக்கும்?

அவர் அதற்கு பதிலளிக்கும் போது நீண்ட நாளைய சோகத்துடன் குரல் நடுங்கிற்று. எனது சிதார் மூலமாய் செய்ய இயலாதது கூட எனது குரலின் மூலம் செய்ய இயலும். அதுதான் என் தாயார் என் மார்பில் குத்திவிட்டார். நான் வாய்ப்பாட்டு பாடுவதை விட வேண்டும் என்று அவர் கூறினார். நான் எதிர் கேள்வி எழுப்பாமல் கீழ்படிந்தேன். பல வருடங்கள் கழித்து அதன் ரகசியத்தை, காரணத்தை வெளிப்படுத்தினார். “நான் வாய்ப்பாட்டு காரர்களின் சந்ததி வழி வந்தவள். நீ ஒரு வேளை பாடகனானால் நான் மணம் செய்து கொண்ட வாத்திய இசைக் கருவி வாசிக்கும் குடும்பத்தின ருக்கு நேர்மையற்றவளாய் தூற்றப்படுவேன். மேல் உலகத்தில் நான் எங்கனம் உனது அப்பா மற்றும் தாத்தாவின் முகத்தை எதிர் கொள்ள முடியும்? அதனால் நீ ...?
அதற்கு முன்னமே அவள் அவர்களுடைய குடும்ப வாத்தியமான ‘சுர்பஹாரை’ அவர் வாசிப்பதை தடை செய்திருந்தாள். அது அவரது இளைய மகன் இம்ராத்துக்காக ஏற்கனவே தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தது. அவர் அச்சலுகையை தனது திறமை மிக்க மூத்த சகோதரனிடமிருந்து பெற வேண்டி இருந்தது.

கான் சாஹேப் பகற்கனவில் ஆழ்ந்தார், யார் அறிவார் அவரது மனதில் மேக மிட்டிருந்த எண்ணங்களை அவராலேயே அவரது சகோதரருக்கு பயிற்சியளிக்கப் பட்டு, பத்து வருடங்களாக சிதார் மற்றும் சுர்பஹாரில் அவர்களது இணைந்த வாசிப்பிற்கு பிறகு ஒரு இரும்பு சுவர் ஏற்பட்டு அவர்களிடையே எல்லா தொடர்பையும் அடைத்திருந்தது. தந்தை யுடன் நல்ல நட்புறவைக்கொண்டிருந்த முற்போக்கு மகனான சுஜாத்கான் வருத்தத்துடன் அதைப்பற்றி வெளிப் படுத்துகிறார். அப்பா ஒரு மாபெரும் மேதை. சிங்கத்தின் கர்ஜனையும் கம்பீரமும் அவரிடம் இருக்கும். இது எனது சிற்றப்பாவை கண்டிப்பாக புண்படுத்தியிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அப்பா முழுமையான ஒப்படைப்பை வேண்டுவார். மகிழ்ச்சியாக கல்கத்தா பார்வையாளர்கள் முன் அப்பா, சிற்றப்பா, நான் மற்றும் எனது சகோதரன் நிஷாத் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து வாசித்தத்தை அந்த நல்ல தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் கடந்த பத்து வருடங்களில் சகோதரர் களுக்கிடையேயான நட்புறவு முற்றிலும் மாறிவிட்டது.

கான்சாஹப் குடும்பம் மற்றும் நண்பர்கள் அவருக்கு ஆதரவாக அவரின் கட்டுப்பாட்டில் ஒவ்வொருவரும் இயங்க வேண்டும் என்று விரும்புவார் என்கிறார் சுஜாத். அவர் எவ்வளவு அன்பும் பெருந்தன்மையும் கொண்டவரோ அந்த அளவிற்கு உரிமையையும் கொண்டாடுபவர். அதனால் தான் அவரது முதல் திருமணம் முறிந்து விட்டது. என்னுடைய தாயார் மோனிஷா கல்லூரியில் படித்த ப்ராஹ்மணப் பெண். மிகவும் சுதந்திரமானவள். இம்மாமனிதருக்கு மிகவும் அடிபணித்து இருந்தவள். உண்மையில் அவரது அழகான தோற்றம் மற்றும் நடன அரங்கில் கவரும் பாவனை போன்றவற்றால் அவரை நேசித்தவள். வருட கணக்கில் விவாதம் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு பிறகு அவரை விட்டுப் பிரிந்தாள்.” நேர்மையான கருத்துக்களை பயமற்று புகுத்துவது என்பது விலாயத்கானுக்கு இயற்கையாக அமைந்தது. அவரது சமகாலத்திய போட்டியாளரான ரவி சங்கருக்கு ஏற்பட்ட புகழையும் ஒப்புக் கொண்டார்.

கிரானா இசைக்கலைஞர்களுக்கே உரித்தான மேதமை நுணுக்கங்கள் மற்றும் நிகரில்லா படைக்கும் திறன்கொண்ட விலாயத்கான் இன்றைய வாழும் ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்கும் மேலாக தான் சுயமாக நிலைப்பதில் விழிப்புணர்வோடு இருந்தார்.” என்கிறார் ஃபரீக்.

எப்படி ரவிசங்கருக்கு மிகப்பெரிய தேசீய மற்றும் உலகளாவிய அங்கீ காரம் கிடைத்தது பற்றி வெறுப்படையாமல் இருக்க முடியும்? ஒருவரின் உயர்ந்த நிலை மற்றும் கசப்புணர்வு ஒருவருக்கொருவர் கொண்ட உன்மை யான மரியாதையை கெடுத்துவிட்டது. சுஜாத் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மற்ற காரணங்களைத் தருகிறார். ‘அப்பா அதை அனுமதித்தார். ஆனால் ரவிசங்கருக்காக அவ் உயரிய நிலையை அடைய பயிற்சி அளிக்க கூடியவர் கள் அங்கே யார் இருக்கிறார்கள்? அவர்களது போட்டித்தன்மை நிறைந்த குற்றச்சாட்டுகள் அவரை ஊக்குவித்து உயரிய நிலையை அடைய வைத்தது.

வானத்தை மாலைநேர சாந்தமான மெல்லிய சூரிய கதிர்கள் வண்ண மடித்தது. பறவைகள் தோட்டத்தில் இசையமைக்கத் திரும்பின. அவரது நன்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி டப்பாவில் இருந்து ஒரு பீடியை பற்ற வைத்தார். மிகவும் புகழ்பெற்ற மனிதர் என்ற சுமை மற்றும் பாதுகாப்புத் திரையினின்று விடுபட்டு அந்த சிதார் பேரரசர் ‘பஹாடிதுன்’ (டஹட்ஹக்ண் க்ட்ன்ய்) என்ற பாடலை முணுமுணுக்கிறார். அப் பொழுது நீங்கள் அவரை, ‘வீட்டில் உங்களது மகிழ்ச்சியான தருணங்கள் என்ன’ என்று வினவினால் சிறுபையன் டீ பொருட்களை அகற்றுவதை பார்த்துக்கொண்டே அவர் கூறுகிறார். ‘இரவில் தங்கும் வேலையாட்களின் விடுதிகளில் உள்ள இந்த கார்வாலி குழந்தைகள் எல்லாம் என்னுடைய அறைக்கு வருவார்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து பேசுவோம், சிரிப்போம், பாடுவோம். கிரானாவின் இசைக் கலைஞர்களான நாங்கள் ஒரு ராகத்தை மற்றும் அதன் ரஸத்தை உருவாக்க ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் குழந்தைகள் அரை நொடியில் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். நான் மிகவும் பரவசமடை கிறேன். அப்புறம்.....

அதுதான் விலாயத்கான். ஊகிக்க இயலாத திடீரென்று மாறுதல்களை அடைபவர். வருத்தமோ. பச்சாதாபமோ அற்ற எளிமையான மகிழ்ச்சி யுடையனான மேதமை, ஆக்ரோஷத்துடனான கருணை கொண்டவர். முழுவதும் போரடியவர். சகிக்க இயலாது வாழ்நாள் உயர்ந்த புதுமை படைப்பாளர். இசைக்கலைஞர்களின் கலைஞர். அவரது நாட்டின் வாழும் கலாச்சாரத்தில் சமாதானம் செய்து கொள்ள விரும்பாத மேதமையை தேடியவராக, எதிர்காலம் இந்திய நாட்டின் மாபெரும் மகனாகவும் உதாரண புருஷராகவும் அவரை மதிப்பிடும்.

ஓர் உயர்ந்த பாரம்பர்யத்தில் இசைப்பரம்பரை

அக்பர் அவையின் மாபெரும் மேதையான மியான்தான்சேன், விலாயத்கான் சார்ந்த இட்டாவா கிரானாவின் சொத்து வாய்ப்பாட்டு காரர்களான சரோஜன் சிங் மற்றும் அவரது மகன் துரப்சிங் ராஜபுத்திர பரம்பரை வழி வந்தவர்கள் என வாய்வழி வரலாற்று செய்திகள் கூறுகின்றன. பேரன் சாஹேப்தாத்கான் சிதாரைக் காட்டிலும் ஆழ்ந்த நாதம் ஏற்படுத்தக்கூடிய பெரியதான கம்பி வாத்தியமான சுர்பஹாரை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். சிதார் மற்றும் சுர்பஹாரில் ஆழ்ந்த தெளிவான இசை மற்றும் த்வனியை மேம்படுத்த மனதை மயக்க கூடிய இசையை உருவாக்குமாறு ஒரு கம்பியை சேர்த்தார் சாரங்கி வாத்திய இசைக் கலைஞரான அவர் இரண்டுக் குமிடையே மாபெரும் இசைத் தொடர்பை இரண்டிலும் ஏற்படுத்த முடிந்தது. உஸ்தாத் இம்தாத்கான் (1848-1920) தந்தையான சாஹேப்தாத் கானின் அற்புதமான பாரம்பரிய இசைப் பயிற்சியை தொடர்ந்தார். அதன் முறையானது மனதை மயக்கக் கூடிய அந்த இசையின் விஸ்தாரம் மெதுவானதாக இல்லாமல் அதிசயத்தக்க வகையிலான தரமும் வேகமும் உடையதாய் இருந்தது. தபலாவின் இசை அமைப்பை போன்றே ‘கட்’ மற்றும் ‘தான’ங்களுடன் அவர் ‘ஜலா’ (jhala) என்ற அதிவேக முடிவுடைய இசையமைப்பை கண்டுபிடித்தார். சர்பஹாரில் ‘ஜோட்’-ஐ ஏற்றுக் கொண்டார்.

மாமேதையான இனாயத்கான் (1894-1938) மேற்கு வங்காளத்தின் கௌரிபூரின் அரசவை இசைக் கலைஞராக இம்தாத்கானுக்கு அடுத்து வந்தவர். பிறகு அவர் கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்துவிட்டார். 1944-ஐந் சார்ந்த குறிப்பொன்று அவரை பலதலைமுறைகளின் மாபெரும் சிதார் இசைக் கலைஞர் என வர்ணிக்கிறது. எல்லா பள்ளிகளிலும் சிதார் இசைக்கலைஞர்களிடம் அவரது தாக்கமானது மிகப் பெருமளவில் ஏற்பட்ட தால் ‘உள்ளங் கவர் கள்வன்’ எனப்பட்டார். அவரை நிந்தித்தவர்கள் கூட அவர் முறையை காப்பியடித்தால் ரசிகர்களை அவரைப் போல மயக்க வைக்க முடியும் என நம்பினார்கள்.

இணைப்புகளில் கம்பிகளின் அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், புதிய போல்ட்களின் அமைப்புகள், என்று மாற்றங்களை விஸ்தரித்து இனாயத்கான் அதன் தரத்தை மேம்படுத்த முக்கியத்துவம் அளித்தார். கதக் நடனத்திலிருந்து சபாத், பேஷ்காரா மற்றும் திஹாய் பாஜ் போன்ற வற்றை அவரது இசையில் கொணர்ந்தார். இவரது இசை அமைப்பான ‘ஜலா’ அதீத நிலையை மட்டுமல்லாமல் வாசிப்பவருக்கும், கேட்பவருக் கும் ஆனந்தக் கூத்தை ஏற்படுத்தியது. இசையானது ஆழ்ந்த தியானத்தை ஏற்படுத்துவதானது.

இப்படியாக இனாயத்கான் சிதார் இசையின் புகழ் பரப்பினார். அவருக்கு மற்றும் அவரது முன்னோர்களுக்கும் சிதார் ஏறக்குறைய புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. குடும்ப வாத்திய இசைக் கருவியான சுர்பஹார் அவரால் மற்றும் அவரது சகோதரர் வாஹித் கானால் வாசிக்கப்பட்டது. இன்று விலாயத்கானின் இளைய சகோதரர் இம்ராத்கானால் வாசிக்கப்படுகிறது.

Pin It