கீற்றில் தேட...

இணக்கமான சூழலொன்றில்
உருவாகிவிட்டது உன்சிருஷ்டி
இருளறையில் கருமைக்கோளமாய்த்
திரண்டிருக்கிறாய்
மிகமென்மையாகத் தான் உணரவேண்டும் உன்னை
ஆனால்
என் உடலைச் சிறுகடுகெனப் புரட்டி எறிகிறாய்.
திடுமெனப்
பூரணத்துவம் பெற்று
புகைப்படலமாகிறாய் எங்களுள்
வரையறுக்கப்பட்ட ஆண்டுக்கணக்கில்
மறைபொருளாகிறாய்
வழியற்று ரத்தமும் சதையுமாக உன்னை வெளியேற்ற
எழுந்த படபடப்பு என்னுள் அடங்க
எவ்வித எதிர்ப்பு மற்றுக்
கரையும்
உன் மெளனத்துடன்
என் சம்மதமும்