அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கான மதச் சுதந்திரம் தொடர்ந்து மோசடைந்து வருவதாகக் கூறியிருக்கிறது. இந்திய ஒன்றியம் அதனை மறுத்துள்ளது.27-03-2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரின் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்து, பாஜக நீங்கலாக அதை ஒரு மனதாக நிறைவேற்றி உள்ளார்.
அதில் இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
ஒன்றிய வக்ஃபு திருத்த மசோதாவால் இஸ்லாமியர்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மாநில வக்ஃபு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று திருத்தச் சட்டப் கட்டாயப் படுத்துகிறது.
வக்ஃபு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம், நில அளவை ஆணையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப் பட்டுள்ளது. ஒன்றி அரசின் வக்ஃபு திருத்த மசோதா இஸ்லாமிய மக்களின் மத உரிமைகளைப் பாதிப்பதாகவும், அவர்களின் மத நிர்வாகாகத்தில் தலையிடுவதாகவும், இஸ்லாமியருக்கு எதிரான பிறகூறுகளைக் கொண்டும் இருக்கிறது.
இத்திருத்தச் சட்டம் மத நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கும்-குறிப்பாக இஸ்லாம் மக்களுக்குப் பெரும் ஊறு விளைவிக்கும் முகமாக இருப்பதால் ஒன்றி அரசுசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரின் தனித்தீர்மானம் சொல்கிறது.
இப்போது தொடக்கத்தில் சொல்லியிருக்கும் அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் சொல்லி இருப்பதைப் படியுங்கள்!
சொல்வேறு, செயல்வேறு இருக்கக்கூடாது என்கிறார், எங்கள் திருவள்ளுவர்.
- கருஞ்சட்டைத் தமிழர்