55 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட நாடு கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. எனினும் இது பழைய பிரிவினைக் கோரிக்கையன்று. இந்தியப் பெருங்கூட்டாட்சிக்குள் அடங்கும் திராவிடக் கூட்டாட்சி (A Federation within the Constitution of Indian Confederation) என்று கொள்ளலாம். அதற்கான தேவை இன்று எழுந்துள்ளது.

இயல்பாகவே, வடஇந்தியாவும், தென்இந்தியாவும் நிலத்தின் தன்மை, பண்பாடு, மொழிக்குடும்பம் ஆகியனவற்றால் பிரிந்தே இருக்கிறது. தென்இந்திய மக்களுக்கிடையில் ஒரு கலாச்சார ஒருங்கிணைவு இருப்பதையும் காணலாம். எனவே இந்தக் கோரிக்கை வலுப்பெற வாய்ப்பிருக்கிறது.

காவிரி நதிநீர்ச் சிக்கல், முல்லைப்பெரியாறு, கிருஷ்ணாநீர்ப் பங்கீடு ஆகியனவற்றில் தென்இந்திய மாநிலங்களுக்குள், தீர்க்க இயலாத நெடுநாள் சிக்கல் இருந்துவருவதும், தமிழகம் வஞ்சிக்கப்படுவதும் உண்மைதான். அது தீர்க்கப் பட வேண்டியது. ஒரே தமிழ்ச் சமூகத்திற்குள் கூட, சாதி அடிப்படையிலான சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம். எல்லாம் தீர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காகச் சேர்ந்து செயல்பட வேண்டிய நேரங்களில் நாம் விட்டுக்கொடுத்துவிட வேண்டியது இல்லை.

திராவிட நாட்டுக் கூட்டணி வலிமை பெற்றால், வடஇந்திய ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் பல உண்டு.        

Pin It