வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஒரு சமூக செயல்பாட்டாளர்.
அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு வழக்குகளில் வாதாடி வருகிறார்.
சமூக பிரச்சனைகள், கூடங்குளம் அணுஉலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் என்று பொதுநல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் வாதாடி வருகிறார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் 3வது எதிர்மனுதாரரின் வழக்கறிஞரான வாஞ்சிநாதனை அழைத்த நீதிபதி அவர்மீது நீதிமன்ற அவமதிப்பாக, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் மீது ஒருபக்கச் சார்பு நிலைத் தீர்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளார் வாஞ்சிநாதன். அதைத்தான் 'கண்டம்ட் அஃப் கோர்ட்' என்று அவரே விசாரிக்கத் தொடங்கி உள்ளார்.
இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் விசாரிக்கக் கூடாது, அவரே அவ்வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் நீதிபதி அரிபந்தாமன் சொல்கிறார்.
முன்னாள் நீதிபதிகள் உள்பட வழக்கறிஞர்கள் மத்தியில் இது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக நாமும் நிற்போம்.
- கருஞ்சட்டைத் தமிழர்