thiruvalluvar statue 700திருவள்ளுவருக்கு இவ்வளவு பெரிய சிலையா? அதற்கு இத்தனை கொண்டாட்டங்களா என்று சிலர் கேட்கின்றார்கள்.

குஜராத்தில் படேலுக்குச் சிலை வைத்த போது - ஏன் - இதே கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டிய போது இந்தக் கேள்விகளை யாரும் கேட்கவில்லை!

அங்கே வைத்திருப்பது வெறும் சிலை அன்று! அது ஒரு வரலாற்றுச் சின்னம்! தமிழ் இனத்தின் பெருமைக்கான அடையாளம்!

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்குகிறது என்றால், அது திருவள்ளுவரிடமிருந்து தொடங்குவது தானே சாலப்பொருத்தம் ! அதனை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் கலைஞர் அந்தக் கடல் நடுவே சிலை வைத்திருக்கிறார்!

வள்ளுவருக்கு இருக்கிற முதன்மையையும், உலகப் பொதுமையையும் புரிந்திருக்கிற காரணத்தால் தான், இடையில் வந்தவர்கள் அவருக்குக் காவி உடை உடுத்திக் களியாட்டம் போடுகின்றனர்.

ஆனாலும், விவேகானந்தர் மண்டபத்தைச் சிறியதாக்கி, வள்ளுவர் சிலையைக் கலைஞர் பெரியதாக்கிவிட்டாரே என்கிற கவலையும் சிலருக்கு இருக்கிறது!

அவர்கள் எதற்கு வேண்டுமானாலும் கவலைப்பட்டுக் கொள்ளட்டும்! நாம் குறளையும் தமிழையும் கொண்டாடுவோம்!

- சுப.வீரபாண்டியன்