Bookவண்ணப்படங்கள் நிறைந்ததாய்
நினைத்து வாங்கிய புத்தகம்
கனக்கத் தொடங்கியது
கைகளில்...

சுவாரசியத்தின் நச்சரிப்பு தாளாமல்
பிரிக்கத் தொடங்கினாள்

பக்கங்கள் நீல நிறமாயும்
சில ரத்த நிறத்திலுமாய்
எழுதப்பட்டிருந்தன
வேறு சில வெற்றுத்தாள்களாகவும்..

சலிப்பின் இறுதியில்
கிழித்தெறியத் தொடங்கினாள்
அந்தப் புத்தகத்தையும்
அவளையும்.

- சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.