பேராசிரியர் அருணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பாஜக வெற்றி பெற்றால் நேரடியாக மனுவாதிகளின் ஆட்சிதான் நடைபெறும். மனுவாதிகள் என்பவர்கள் வர்ணாசிரம தர்மத்தை, ஆண் ஆதிக்கத்தை நிலைநாட்டக் கூடியவர்கள். தமிழ் நாட்டையும் உத்தரப்பிரதேசம் போல் ஆக்கிவிடுவார்கள். இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்கிறார்கள்.
அதேபோல் சமூகநீதி, தமிழர் நலன், மாநில உரிமைகள் எல்லாம் பறிக்கப்படும். மாநில அரசுகளே தேவையில்லை என்று கருதுபவர்கள்தான் இவர்கள். ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு தீர்மானமாகவே வைத்திருக்கிறது. மத்தியில் ஒரு நாடாளுமன்றமும் மற்றவையெல்லாம் பஞ்சாயத்துகளாகவும், நகராட்சிகளாகவும் இருந்தால் போதும். அதனால்தான் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது. டெல்லியின் அதிகாரம் என்பதை துணைநிலை ஆளுநருக்கு மாற்றப்பட்டது.
****
தோழர் ஓவியா, புதிய குரல்
வேறு எந்தத் தேர்தலையும் விட இந்த தேர்தலில் அபாயமான காலகட்டத்தை எதிர்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெளிப்படையாகவே திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று எதிரிகள் பேசுவதைக் கேட்கிறோம். எனவே இதனை முக்கியமானத் தேர்தலாகப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாநிலத்திற்கானத் தேர்தலாக இருந்தாலும்கூட இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பதற்கு மட்டுமன்று. இந்தியாவினுடைய ஒட்டுமொத்த அரசியல் போக்கில் வந்துகொண்டிருக்கும் பேராபத்திற்கு ஒரு தடுப்பணை போடுவது மாதிரியான தேர்தல். இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நமக்கானத் தடுப்பணையாக நாம் பார்க்கிறோம். திமுகவை நாம் வெற்றிபெற வைக்கவில்லை என்றால் வரக்கூடிய அழிவு என்பது பேரழிவாக இருக்கும்.
****
சாரதாதேவி
தி.மு.க கூட்டணியின் ஒவ்வொரு வெற்றியும் மாநிலங்களவையில் நம்முடைய வலிமையைக் கூட்டப்போகிறது. இந்திய அரசியலில் நம் பங்கு என்பது அதிகார போதையின் உச்சத்தில் இருந்து கொண்டு, இந்த நாட்டின் எளியோர் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பாசிசங்களின் கைகளிலிருந்து ஆட்சியை மீட்க பேருதவியாக இருக்கும்.
உழைப்போம்! கடுமையாக உழைப்போம்! பாசிசம் அகற்ற ஜனநாயகம் காக்க அறிவாயுதம் ஏந்தி விழிப்புடன் களம் காண்போம்! வெற்றி நமதே!
****
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது என்றால், ஏலக் கம்பெனிகளில் ஏலம் விடுவாங்களே தெரியுமா?
அது போல, ஒரு பொருள் 1000 ன்னு சொன்னா இன்னொருத்தன் 1001 ன்னு சொல்லுவான்..
அந்த மாதிரி தான் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கைகளை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்து, +1 ன்னு சேர்த்தி விட்டிருக்காங்க, புரிஞ்சுதா! அவ்வளவுதான் அவிங்க சாமாச்சாரம்.
கோவை கூட்டத்தில் பொள்ளாச்சி உமாபதி பேச்சு.
- கருஞ்சட்டைத் தமிழர்