கோஷமிடுவதும்
கண்டனம் தெரிவிப்பதும்
மையங்களில் சங்கம் வளர்ப்பதும்
சித்தாந்தத்தின் வேலையாக்கப்பட்டது.

பொதுமைகள் பிரித்தாளப்படுவது
தவறென்றிருந்ததையும்
சித்தாந்தவாதிகளுக்கிடையில்
சரியெனவும் மொழியப்பட்டது.
இனி சித்தாந்தமும்
அதன் பேரிலக்கியங்களும்
தன் கையாலாகத்தனத்தில்
துன்புறுத்தப்பட வேண்டுமென்பது
விதிக்கப்படாதவொன்றாகிவிட்டது.
சித்தாந்தம் மீறலையருவன்
சரிவரச் செய்வதும்
எதிர்ப்புக் குரலாக வேண்டியவன் அம்மீறலை
மறைப்பதுமாயிருக்கும்
நிகழ்வொன்றில் சித்தாந்தத்தின் ஈர்ப்பில்
பேரிலக்கியமொன்றை
புனைந்திருந்தவனோ அப்பேரிலக்கியத்தை
காற்றில் விட்டெறிந்துவிட்டு
வருந்தியிருந்த சித்தாந்தத்தோடு
அப்பெருமாற்றத்தை குடித்துக் தீர்க்க
சென்று கொண்டிருந்தான்.

- அருள்குமார்

Pin It