வீட்டு முற்றத்தில்
தேங்கிய மழை நீரில்
விளையாட
கத்திக் கப்பல் செய்த தாவென
நச்சரிக்கிறாள் மது
பழசின் அதிர்வுகள் உறுத்த
வேண்டுமட்டும் செய்து தருகிறேன்
தெறித்த மழையின்துளிக்கு
மூழ்கிய கப்பலின் சோகம் அழுத்த
வீறிட்டு அழுகிறாள்
தேற்ற வழியின்றி தவிக்குமென் நினைவுகளில்
உடைகிறது ஒரு
சிறுகுமிழி
- சகாரா தென்றல்