கொலைகார காங்கிரசு நரியே - உன்தன்
குரல்வளையை நாங்கள் நெறிப்பது சரியே!

விடுதலை என்பது மெய்யா - எங்கள்
விலங்குகள் அறுபட வில்லையே பொய்யா?
கெடுதலைக் கென்றேஉன் ஆட்சியா? - உன்னைக்
குழிதோண்டிப் புதைப்பது ஒன்றுதான் மீட்சியா?

ஒற்றை நாடல்ல இந்தியா - இது
ஒவ்வொரு தேசிய இனங்களின் கூடு!
பற்ற வைத்தாயே நெருப்பு - எல்லாப்
பாழுக்கும் நீதானே ஒற்றைப் பொறுப்பு?

ஓடாகத் தேய்ந்ததே மிச்சம் - ஏமை
உறிஞ்சிய கட்சிகள் தனில் நீயே உச்சம்!
தேடக் கிடைக்காத முத்தா? - இந்தத்
தேசமே நேருவின் குடும்பத்துச் சொத்தா?

தலைமுறை தலைமுறையாக - எங்கள்
தமிழீழ மக்கள் வேரற்றுப் போக
நிலையான கொடுவாளை ஏந்தி - என்றும்
நிற்கும் சதிகாரி, நீயரு பச்சோந்தி!

பொறுக்கி மகிந்தா, உன் பின்னால் - அவன்
போர்க்குற்றவாளி இவ்வுலகின் முன்னால்!
தருக்கித் திரிகிறான் முண்டம் - அந்தத்
தறுதலைக்கே நீயும் தருகிறாய்ப் பிண்டம்!

முள்ளிவாய்க் காலின் ஓலம் - ஊழி
முடியுமட்டும் எங்கள் செவிகளில் மோதும்!
கொள்ளிக்கு உதவினை நீயா - எங்கள்
கும்பி வேகுதே! நீரத்தப் பேயா?

புலிகளின் மேல்தடை நீளுமா - உனைப்
பூண்டறுக்க வைத்த தீதான் மாளுமா?
கொலைகளின் கணக்கும் முடியுமா - உனைக்
கூறு போட்டால்தான் தமிழீழம் விடியுமா?

வாக்குக் கேட்கநீ வருவாய் - இங்கே
வட்டியும் முதலுமாய்ச் சேர்த்துப் பெறுவாய்
நாக்கை நீட்டிப்பார் எம்மிடம் - உனை
நடுத்தெருவில் வைத்து ஆக்குவோம் அம்மணம்!

Pin It