நாளைய சூரிய உதயத்தை நிச்சயமாகப் பார்ப்போ மென்ற நம்பிக்கையோடு உறங்கிக் கொண்டிருந்த ஜே.ஜே காலனி, ப்ளூமூன் காலனி, நவாப் காலனி, கரீப் நகர், அன்னு நகர், கைன்சி சோளா போன்ற பகுதிகளிலுள்ள மக்களை ஒரேயடியாக நித்திரையில் ஆழ்த்திவிட்ட போபால் விஷ வாயு சம்பவம், பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தை ஆறாத புண்ணாக இன்றும் எரித்துக் கொண்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவில் நடந்த இந்தக் கொடுமையான சம்பவம், அங்குள்ள மக் களின் மனதில் ஒரு பயங்கர கொடுங்கனவாக இடம்பெற்றிருக்கிறது.

பல்லாண்டுகளுக்கு முன் போபாலிலுள்ள பெர்சியா சாலையில் 67ஏக்கர் நிலப் பரப் பளவில், நான்கு புறங் களிலும் உயர்ந்த சுவர் களை எழுப்பி, யூனியன் கார்பைட் ரசாயனத் தொழிற் சாலையன்று கட்டப்பட்டது. அமெ ரிக்க நிர்வாகத்தில் செயல் பட்டுக் கொண்டிருந்த இந்த தொழிற்சாலையில் விபத்து அன்று 610 என்ற எண்ணைக் கொண்ட தொட்டியிலிருந்து மிதெய்ல் ஐஸோ சய னைட் (METHYL-ISO CYANIDE GAS)   என்ற விஷ வாயு கசியத் தொடங்கியது. காரணம், சுமார் 300 டிகிரி உஷ் ணத்தில் மிதேன்வாயு  நிரப்பப்பட்ட.  அந்தத் தொட்டியில் கவனக் குறைவால் வாயுவோடு தண்ணீரும் கலந்து கொதிக்கத் தொடங்கியது. இக்கொதிப்புச் சக்தியைத் தாங்கமுடியாமல் தொட்டி விரிசல் அடைந்து அதன் வழியாக வெளியேறிய மிதேன் வாயு டெட்ரா க்ளோரைட் (TETRACHLORIDE) விஷப் புகையாக மாறி தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகு விரைவாக பரவத் தொடங்கியது.  உழைத்த களைப்பில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த மக்களின் சுவாசக் குழாயை இந்த விஷவாயு அடைத்துவிட்டது. இந்த ரசாயனத் தொழிற்சாலை தொடங்கிய சமயத்தில், ஜே.ஜே. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள மக்கள் ஒரு வேலை வாய்ப்பு கிடைக்குமென்ற சந்தோஷத்தில் திளைத்தார்கள். ஆனால் இந்த தொழிற்சாலை ஒரு நள்ளிரவில் எமனாக உருவெடுக்கு மென்பதை அப்போது அவர்கள் அறியவில்லை.

மாநில அரசு அறிக்கையின்படி, சம்பவம் நிகழ்ந்து 72 மணி நேரத்திற்குள், 3,785 நபர்கள் உயிரிழந்தார்கள். ஆனால் மாறாக உலக மருத் துவக் கமிஷன் விடுத்த அறிக்கையின்படி 8000  பேர் உயிரிழந் திருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான உயிர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அன்று ஜே.ஜே கால னியும் அதனைச் சுற்றி யுள்ள பிற பகுதிகளும் ஒரு பிணக்கிடங்காக தோற்றம் கொடுத்தன. இந்த மாபெரும் மனித இழப்பிற்கு யாரைக் குற்றம் சாட் டுவது? பாதிக்கப் பட்ட மக்களின் விதி யின் மீது குற்றமா? கவனக்குறைவான நிர்வாகத்தின் மீது குற்றமா? மக்கள் நட மாட்டமுள்ள இடத் தில் ரசாயனத் தொழிற் சாலையை தொடங்க அனுமதி அளித்த அர சின் மீது குற்றமா? இத்தனை கேள்வி க ளுக்கு அரசும், பாதிக் கப்பட்டவர்களும் இன்றும் விடையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இச்சம்பவத்தால் பிழைத்தவர்களின் வாழ்க்கை உயிரிழந்தவர்கனை விட மிகவும் மோசமானதுதான். அவர்களுடைய வாழ்க்கை செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் அவர்கள் வாழ்க்கையோடு இன்றும் நிழலைப் போல தொடந்து கொண்டிருக்கிறது. அன்று தொழிற் சாலையிலிருந்து வெளியேறிய ரசாயனப்புகை,அதாவது விஷப்புகை, அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணில் மிக ஆழமாக பதிந்துள்ளது. இச்சம்பவம் நடந்து முடிந்த பிறகு குடியேறிய மக்களின் உடலையும், இந்த ரசாயனம் கலந்தமண், அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மண்ணில் ரசாயனம் கலந்த தண்ணீர் மட்டும்தான் கிடைக்கிறது. அங்குள்ள வர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினாலும் பெற இயலாது. இதனால் அங்கு வாழும் மக்கள் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுடன் கண் பார்வையிழந்து, அழுகிப் போன அங்கங்களோடு துயரப்பட்டு வதைந்து வருகிறார்கள். மேலும் சிகிச்சைக்கு வருகின்ற நோயாளி களை, அரசு மருத்துவமனைகள் உரிய சிகிச்சை கொடுக் காமல் திருப்பி அனுப்பி விடுகிறது. நவீன கருவிகள் இல்லாமல், போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்தஅரசுமருத்துவ மனை கள்செயல்பட்டுக் கொண் டிருக் கின்றன. திருமண மான இளம்பெண்கள் கருதரிக்க இயலாமல் மீண்டும் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறார்கள்.  கணவ னால் கைவிடப்பட்ட நிறைய பெண்கள் கைத் தொழில் செய்து பிழைத்து வருகிறார்கள்.

“ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்ச னைகள் உள்ளன. ஆனால் எங்களுடைய வாழ்க் கையே பிரச்சனையாக இருக்கிறது” என்று சொல் லுகிற ஆமீனாவின் துணிச் சலும், தைரியமும் அங்குள் ளவர்களுக்கு புதிய தெம்¬ பயும், நம்பிக்கையும் கொடுக்கிறது. சம்பவ தினத்தன்று பிறந்த ஒரு பையனுக்கு “மனூஸ்” (விணீஸீஷீஷீsமீ) அதாவது துர திருஷ்டசாலி என்று பெயர் சூட்டி பெற்றோர்கள் அழைக்கிறார்கள். வளர்ச்சி பெறாத உடலையும் விகா ரமான தோற்றத்தையும் கொண்ட அந்தப் பையன் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தெரியாமல் வளர்ந்திருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் அவனது பிறப்பை ஒரு பாவச்செயலாக எண்ணுகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டு, உடல் நோய்வாய்பட்டு விரக்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்கள், இயற்கையான மரணத்திற்காக காத்திருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறார்கள்.

வாரன் அண்டர்சன் என்ற அமெரிக்க நிர்வாகியின் பொறுப்பில் இந்த ரசாயனத் தொழிற்சாலை செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவருடைய கவனக்குறைவால் போபால் பிணக்கிடங்காக மாறியது. ஆனால் சம்பவம் நிகழ்ந்த இரவே அன்டர்சன் அமெரிக்கா சென்றுவிட்டார், மாபெரும் மனித இழப்பை பரிசாகக் கொடுத்த அன்டர்சனுக்கு அமெரிக்க அரசு எவ்விதத் தண்டனையும் கொடுக்கவில்லை அமெரிக் காவில் செயல்பட்டுக் கொண்டிருந்த இதே தொழிற்சாலை விபத்து உதவித் தொகையாக 120 கோடி உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பியது. மேலும் இலவச மருத்துவ மனைகள் கட்டுவதற்கு 20 கோடி தொகை கொடுத்து உதவியது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்தத் தொழிற்சாலையால் சேதமடைந்த நிலத்தை சுத்தம் செய்வதற்கும் நிதி உதவி அளித்தது. ஆனால் இத்தனை நிதிஉதவிகளுக்குப் பின்னும்   அங்குள்ள  மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. மக்க ளுடைய நலனைக் கருத்தில் வைத்துக் கொண்டு, இந்திய அரசு உதவித் தொகை யாக 470 கோடி கேட்டு அமெரிக்கா விற்கு மனு அனுப்பி வைத்து.

ஆனால் கேட்ட தொகையில் கால்பங்கு தொகை மட்டும்தான் அமெரிக்காவிடமிருந்து கிடைத்தது. பரந்து கிடக்கும் 67 ஏக்கர் நிலமும், பாதிக் கப் பட்ட மக்களிடம் சென்றடைய வேண்டு மென்ற எண்ணத்தை 25 ஆண்டுகள் கழித்து மாநில அரசு தெரிவித் தது. இன்று துருப்பிடித்த கருவிகளும், உடைந்து போன சுவர் களும், ரசாயனம் கலந்த மண்ணும்,  சுற்றுப்புறங்களில் காட் டுச் செடிகளும், புதர்களும் வளர்ந்து ஒரு பாழடைந்த கட்டி டமாக அத்தொழிற்சாலை காட்சி கொடுக்கிறது. பரந்து கிடக்கும் நிலத்தில் அரசு வேறொரு தொழிற்சாலை அமைத்து வேலையைக் கொடுத்து உதவினால் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைவிட மேன்மையான வாழ்க்கையை வாழலாமென  அங்குள்ள மக்கள், கருது கிறார்கள். காய்ந்துபோன கண்கள், வரண்டுபோன தொண்டை, புண்பட்ட இதயத்திலிருந்து பிறக்கும் உணர்வு களுக்கு என்றைக்காவது ஒருநாள் வடிகால் கிடைக்குமா, நோயில்லாத வாழ்க்கைக்காக ஏங்கும் உள்ளத்திலிருந்து ஜனிக்கும் யதார்த்தமான எதிர்பார்ப்புகள் என்றைக்காவது ஒருநாள் ஈடேறுமா என்று அம்மக்கள் ஏங்கிக் கொண்டி ருக்கிறார்கள். நம்பிக்கையென்ற தேரில் பூட்டிய கனவுக் கடலில் மிகுந்து கொண்டிருக்கும் இந்த மக்களின் வாழ்க்கை  கரை சேருவதெப்போ

 

போபால் விபத்தும் வழக்கும்

 26 ஆண்டுகளுக்கு முன் 1984 திசம்பர் 2 ஆம் நாள் நள்ளிரவில் போபால் யூனியன் கார்பைடுக்குச் சொந்தமான, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் விஷவாயுக் கசிவு  ஏற்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் பலியானதுடன் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக் குள்ளானார்கள். அந்தத்தலை முறையினர்க்குப் பிறக்கும் குழந்தைகள் இன்றும் பல்வேறு ஊனங்களுடனும் உடல் குறைபாடு களுடனும் பிறக்கின்றன. யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்டு நிறுவனத்தைச் சார்ந்த 8 பேர் மீது குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு போபால் பெருநகரத் தலைமை நிதிபதி முன் வழக்கு நடைபெற்றது. 25 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பை கடந்த 03. 06 2010 அன்று நீதிபதி மோகன் திவாரி வழங்கினார்.

பல்லாயிரக் கணக்கில் மனித உயிர்களைப் பலி  கொண்ட இச்சம்பவத்தில், 26 ஆண்டுகள் கழித்து வந்த தீர்ப்பு 7 பேருக்குத் தலா இரண்டாண்டு சிறைத்  தண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதித் துள்ளது, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனே பிணை மனு தாக்கல் செய்ய  25,000 ரொக்கத் தொகையில் சொந்த  ஜாமினில் அவர்களைப் பினையில் விடவும் நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந் நடவடிக்கைகள், பொது மக்களிடையே ஆவேசத்தையும் கோபத்தையும் தூண்ட, நீதிமன்றத் தீர்ப்புக்கும், நடவடிக்கைக்கும் எதிராகக் கடும்  கிளர்ச்சிகள் எழுந்தன.

இதையடுத்து, இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு நிகர் என்று ஒரு கூற்று உண்டு. ஆனால் இந்த போபால் விஷ வாயு விபத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு 26   ஆண்டுகள் கழித்து வந்ததோடு மட்டுமல்ல, தாமதமான இத் தீர்ப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியையும் உரிய நிவாரணத்தையும் வழங்க வில்லை என்பதுதான் கொடுமை.


போபால் அன்று முதல் இன்று வரை

 

1984, டிசம்பர் 3, அதாவது 2ம் தேதி நள்ளிரவு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டது. 30 ஆயிரம் பேர் பலியாயினர். கண்கள் பறிபோயும் உடல் உறுப்புகளை இழந்தும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டது.

1984, டிசம்பர் 4: யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் தலைவர் வாரன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின் ஆவார் அமெரிககாவுக்குத் தப்பியோடி விட்டார்.

1984, டிசம்பர் 6: வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

1985: அமெரிக்க நீதிமன்றத்தில் அப்போதை அமெரிக்க டாலர் மதிப்பில் 3.3 பில்லியன் டாலர் தொகை நஷ்ட ஈடாக கேட்டு இந்தியா வழக்கு தொடர்ந்தது.

1987, டிசம்பர் 6: சி.பி.ஐ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

1989: நீதிமன்றத்துக்கு வெளியே மத்திய அரசுக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட சமரசத்தைத்தொடர்ந்து, யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலரை நஷ்ட ஈடாக வழங்கியது.

1992: யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் டாலரின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் ஆன்டர்சன் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

1996: செப்டம்பர் 13: குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீதான வழக்குகளின் பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

2004: யூனியன் கார்பைடு நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கிய 470 மில்லியன் டாலரில் மீதித் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது.

2010, ஜூன்7: சம்பவம் நடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது

 

விபத்தும் இழப்பீடும்

 .போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு கிடைக்கவில்லை என்பது இன்றுவரை பெரும் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. மற்ற விபத்துகளில் பலியானவர்கள் அல்லது காயம் அடைந்தவர்களுக்கு கிடைத்த அளவுக்கு போபால் மக்களுக்கு இழப்பீடு கிடைக்கவே இல்லை.

1984ம் ஆண்டில் போபால் விஷவாயு சம்பவம் ஏற்பட்டபோது, அப்போதைய அமெரிக்க டாலரின் மதிப்பில் 350 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்டஈடாக வழங்க யூனியன் கார்பைடு நிறுவனம் முன்வந்தது. இந்த தொகை போதாது என்றும் 3. 3 பில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

1999ல். நீதிமன்றத்துக்கு வெளியே மத்திய அரசுக்கும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் நடந்த உடன்பாட்டில் 470 மில்லியன் டாலரை யூனியன் கார்பைடு நிறுவனம் இறுதி மற்றும் முழுமையான நஷ்டஈடு தொகையாக வழங்கியது. அப்போதைய மதிப்பு 715 கோடி ரூபாய்.விபத்தில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்ட போதும், 18 வயதுக்குட்பட்ட வர்களின் பெயர், விவரம் பதிவு செய்யப்படவே இல்லை.

1985ல் நிவாரண பணிகள் தொடங்கின. பாதிக்கப்பட்டவர்களுக்கு சில மாதங்களுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப்பட்டது. கணவனை பறிகொடுத்த பெண்களுக்கு மாதந்தோறும் நிவாரண உதவியாக ரூ.200 மட்டுமே தரப்பட்டது. பின்னர் அது ரூ. 750 ஆக அதிகரிக்கப்பட்டது.பலியானவர்களின் குடும்பத்துக்கு சராசரியாக ரூ.62 ஆயிரமும், விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் இழப்பீடாக தரப்பட்டது. இது சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தரப்படும் இழப்பீட்டை விட மிகவும் குறைவு

 

தும்பை விட்டு வாலைத் தேடும் தில்லி அரசு

 

.போபால் விஷவாயு விபத்து  நடந்த 1984 ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவராயிருந்தவர் வாரன் ஆண்டர்சன் என்பவர். விபத்து நடந்த கையோடு இவர் அமெரிக்காவுக்குத் தப்பியோட உதவியது தில்லி அரசு. அவ¬ அப்படித் தப்பியோட விட்டதற்கு தற்போது ஆட்சியாளர்கள் சொல்லும் காரணம் அப்படி அவரைத் தப்பியோட அனுமதிக்காது இருந்திருந்தால் போபால் மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள் என்பதுதான். ஆக பல்லாயிரம் பேர் பலியானதைப் பற்றிக் கவலைப்படாத இந்திய அரசு வாரன் ஆண்டர்சன் உயிரைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறது.

அப்போது கையில் கிடைத்த  தும்பை விட்டு இப்போது வாலைத் தேடிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.  இது ஒருபுறம் இருக்க இந்தத் தீர்ப்பைப்பற்றி  கருத்து சொன்ன உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். அகமதி ‘ஒருவர் செய்த தவறுக்காக மற்றொருவரைத் தண்டிப்பதை நம்முடைய கிரிமினல் சட்டம் அனுமதிக்காது’ என்று சொல்லி தீர்ப்பை வரவேற் றிருக்கிறார். நியாயம்.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எனப்  பழிவாங்கும் நோக்கில் தண்டனை இருக்கக் கூடாது என்பது நியாயம் தான். இந்த அடிப்படையிலேயே தான் மரண தண்டனை கூடாது என கூறப்படுவதும். அதாவது, குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை அளிப்பதாலோ, பதிலுக்கு அவர்களை வதைப்பதாலோ, போபாலில் மாண்டவர்கள் யாரும் மீண்டும் வந்து விடப்போவதில்லை பாதிப்புக்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்டும் விடப் போவதில்லை என்பதும் சரிதான்..

ஆனால், உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் வைத்து அவ்வப் பகுதி மக்களின் உயிரோடு விளையாடி கோடி கோடியாய்ச்  சம்பாதித்து வரும் அமெரிக்க. யூனியன் கார்பைடு நிறுவனம், உயிரிழந்த குடும்பங்களுக்கும், உரிய நிவாரனத்தைத் தர வேண்டுமல்லவா. அதுவும்மில்லை.இந்திய அரசு கோரிய தொகை ஒன்று. நிறுவனம் வழங்கிய தொகை ஒன்று. அதுவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாய்ப் போய்ச் சேரவில்லை. இந்நிலையில் தான் மக்கள் கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியிலேயே இத் தீர்ப்பை எதிர்த்து போபால்  உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு கிடைக்க இன்னும் மக்கள் எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமோ.

Pin It