காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

தி.மு.க. என்­கிற மாபெ­ரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்­க­ளி­டம் வரும் கட்சியல்ல. மக்­க­ளின் உரிமைகளுக்காக எப்போதும் களத்­தில் நிற்­கும் கட்சி. எங்­க­ளுக்­குத் தெரி­யும்! தமிழ்நாட்­டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்­பாட்டின், உண்மை­யான எதிரி யார்? என்று எங்க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்­கும் தெம்­பும், திரா­ணியும் கொண்ட ஒரே இயக்­கம் தி.மு.க என்­பது மக்­க­ளுக்­கும் நன்றாகத் தெரி­யும்!mk stalin in trichy meetingஅ.தி.மு.க. என்­கிற முக­மூ­டியை போட்­டுக் கொண்டு வந்தால், எங்­க­ளு­டைய தமிழ்நாட்டு மக்­க­ளுக்கு உங்களை அடையாளம் தெரி­யாமல் போய்­வி­டுமா? உங்­க­ளின் முகத்திரை­யைக் கிழித்து, தமிழ்­நாட்டு மக்க­ளி­டம் நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்து­வோம். தமிழ்நாட்டை எப்ப­டி­யா­வது நம்மிடம் இருந்து, விழுங்கிட­லாம் என்று நினைக்­கி­றது காவிக் கூட்டம். எங்­கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்­கி­ற­வரை அது நடக்­கவே நடக்­காது. உங்­கள் அப்பனே வந்தா­லும் நடக்­காது. நடக்க விட­மாட்­டோம். இது அவர்­க­ளுக்­கும் நன்­றா­கத் தெரி­யும்.

அத­னால்­தான், அ.தி.மு.க. என்ற கட்­சி­யைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்­கு­கி­றார்­கள். அர­சி­ய­லில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்­டர்­கள் மீது நான் உண்மையாகவே பரி­தாபப்படுகிறேன். அவர்­க­ளு­டைய உணர்­வுக்கு மாறாக கட்சி­யைக் கொண்டு போய் டெல்­லி­யில் அட­மா­னம் வைத்­து­ விட்டார் பழ­னி­சாமி. தன் சொந்த நல­னுக்­காக, சுய­ லாபத்துக்காக, எப்படியா­வது முத­ல­மைச்­ச­ராக ஆக வேண்­டும் என்ற நப்பாசையில், பழனி­சாமி அடி­மை­யா­கக் கிடக் கி­றார். அவரை வைத்து, ஒட்­டு­மொத்த அ.தி.மு.க.வையும் அழிக்­கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்­டி­ருக்­கி­றது.

இப்­போது கூட பீகா­ரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கி­றதே! பீகார் மாநிலத்­தில் இது­வரை பா.ஜ.க. முத­ல­மைச்சர் இருந்ததே கிடை­யாது. நிதிஷ்­கு­மார் அவர்களை முன்­னிறுத்தி தேர்­த­லில் ஜெயித்­து­விட்டு, இப்­போது காரி­யம் ஆன­தும் அவரை ஓரங்­கட்­டி­விட்டு, பா.ஜ.க. முத­ல­மைச்­சரை உள்ளே கொண்டு வரப் போகி­றார்­கள். இதை­யே­தான் தமிழ்­நாட்­டி­லும் செய்­யலாம் என்று முயற்சி செய்­கி­றார்­கள்.

நான் அடித்­துச் சொல்­வேன்! சேலஞ்ச் செய்து சொல்­வேன்! இந்த முத்­து­வேல் கருணா­நிதி ஸ்டாலி­னும், எங்­கள் தி.மு.க.வும் இருக்­கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ் நாட்டை ஆள முடி­யவே முடியாது! நீங்­கள் அந்­தர் பல்டி அடித்­தாலும், என்ன முக­மூடி போட்­டுக் கொண்டு வந்­தா­லும், புதிது புதி­தாக யாரை அழைத்­துக் கொண்டு வந்­தா­லும், எத்­தனை ஏவல் அமைப்­பு களை வைத்து மிரட்­டிப் பார்த்­தா­லும், தமிழ்­நாடு எப்­போ­துமே உங்க­ளுக்கு Out Of Control–தான்!

நாங்­கள் பார்க்­காத படை­யெ­டுப்பா? தி.மு.க. பார்க்­காத மிரட்­டலா? நீங்­கள் இந்­தியா மேப்­பில் இருக்­கும் எந்த மாநி­லத்­தின் மீது வேண்­டு மா­னா­லும், காவி அடித்­தி­ருக்­க­லாம்! ஆனால், தமிழ்­நாட்­டில் உங்­கள் பாச்சா பலிக்­கவே பலிக்­காது! இங்கே எப்­போ­துமே நாங்­கள்­தான்! எங்­கள் மண்­ணில், நாங்­கள்­தான் ஜெயிப்­போம்! நாங்­கள் மட்­டும்தான் ஜெயிப்­போம்!

1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம்

இங்கு கூடி­யி­ருக்­கும் ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும், மக்­களிடம் போகும் போது சொல்ல வேண்­டி­யது என்ன? நடக்க இருக்­கும் தேர்­தல், தி.மு.க. vs NDA கிடை­யாது! தமிழ்­நாடு வெர்­சஸ் NDA! இன்­னும் எளி­மை­யாக சொல்ல வேண்­டும் என்­றால், வெல்­லப் போ­வது, தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்­ப­துதான் 2026 தேர்­தல்! இதில் நம்­மு­டைய தமிழ்­நாடு அணி வெற்றி பெற வேண்­டும் என்­றால், தி.மு.க. தலைமையி­லான மதச்­சார்பற்ற முற்போக்­குக் கூட்­ட­ணி தான் வெற்றி பெற வேண்­டும்! உங்கள் வாக்­கு­க­ளைத் தி.மு.க.வுக்­கும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கும் போடுங்கள் என்று கேளுங்­கள்! இது­தான் நீங்­கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடை­விடாமல் மக்­க­ளி­டம் பரப்ப வேண்­டிய மெசேஜ்!

இந்த நேரத்­தில், தந்தை பெரி­யார் 1971 தேர்­த­லின்­போது சொன்னதை, நினைத்­துப் பார்க்­கி­றேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்­தால்­தான், தமிழ்ச் ­ச­முதா­யம் எதிர்­பார்க்­கும் முன்னேற்­றம் ஏற்­ப­டும்” என்­றார். இப்­போ­தும் தந்தை பெரியார் சொன்­னதை மன­தில் வைத்து நம்­மு­டைய பயணத்­தைத் தொடர வேண்­டும்!

இங்கே வந்­த­தும் என்­னு­டைய நினை­விற்கு வந்­தது. 2021 தேர்தலுக்கு முன்பு, இதே திருச்­சி­யில், இதே இடத்­தில் ஏழு இலக்­கு­களை உறு­தி­மொ­ழி­க­ளாக நான் அறி­வித்­தேன். அதில் முதல் இலக்கு வள­ரும் வாய்ப்­பு­கள், வளமான தமிழ்நாடு! இரண்­டா­வது இலக்கு மக­சூல் பெருக்­கம், மகி­ழும் விவசாயி! மூன்­றா­வது இலக்கு – குடி­மக்­கள் அனை­வ­ருக்கும் குறை­யாத தண்­ணீர்! நான்­கா­வது இலக்கு – அனை­வ­ருக்­கும் உயர்­த­ரக் கல்வி – உயர்ந்த மருத்துவம்! ஐந்­தா­வது இலக்கு – எழில்மிகு மாந­க­ரங்­க­ளின் மாநி­லம்! ஆறாவது இலக்கு – உயர்­தர ஊர­கக் கட்­ட­மைப்பு, உயர்ந்த வாழ்க்­கைத் தரம்! ஏழா­வது இலக்கு – அனை­வ­ருக்­கும் அனைத்­து­மான தமிழ்­நாடு!

கழக அரசை எதி­ரி­க­ளும் பத்­தி­ரி­கை­க­ளும் பாராட்­டு­கி­றார்­கள்!

நெஞ்சை நிமிர்த்­திச் சொல்­கி­றேன்! இந்த ஏழு இலக்குகளையும் நம்­மு­டைய ஐந்­தாண்டு ஆட்­சி­யின் திட்­டங்­க­ளால் நிறைவேற்­றிக் காட்­டி­யி­ருக்­கி­றோம்! அத­னால்­தான் மக்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்­கள்! இதை­யெல்­லாம், நம்­மு­டைய எதி­ரி­களே, இன்­றைக்கு மன­திற்­குள் ஒப்­புக்­கொள்­வார்­கள். யாரா­லும் மறைக்க முடி­யாத, மறுக்க முடி­யாத உண்மை இது! தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து புறக்­க­ணிக்­கும் ஒன்றிய பா.ஜ.க அர­சு­கூட, “நம்­பர் ஒன் மாநி­லம் – தமிழ்­நாடு’ என்று சொல்­கி­றார்­கள். உலக பத்­தி­ரி­கை­களே, ‘சூப்­பர் ஸ்­டார் ஸ்டேட் தமிழ்­நாடு’ என்று பாராட்­டு­கி­றார்­கள். அந்த அளவிற்கு நாம் கெத்­தாக முன்­னேறி இருக்­கி­றோம்!

- திருச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.