தொடர்புடைய படைப்புகள்

* குடியரசுத் தலைவர் திருப்பதி வருகை: 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்.        - செய்தி

                இதுக்கெல்லாம், ‘ஆகம’ விதி அனுமதிச்சுடும் போல.

* சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசிடம் தேவையான நிதி இல்லை.        - நீதிமன்றத்தில் அரசு மனு

                ‘ஆலிவுட்’ படம் போலிருக்கு!

* உலகிலேயே குறுகிய காலத்தில் 11 கோடி உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி பா.ஜ.க.                             - இல. கணேசன்

                உலகத்திலேயே கார் வச்சிருக்கிற ஒரே கரகாட்ட கோஷ்டி நாமதான்.

* குரு பகவான் - கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பிவேசித்தார்.              - செய்தி

                எதுலேங்க பிரவேசிச்சாரு? ‘மெட்ரோ’ இரயிலிலா?

* உலகின் மிக உயரமான பசு - அமெரிக்காவில் இறந்தது.             - செய்தி

                சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புங்க! தேசிய சின்னம் வச்சுடலாம்!

* திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் போலியானது.              - பல்கலை மான்யக் குழு

                இதுல படிச்சிட்டு புரோகிதத் தொழில் செய்யும் போலிகள் மீதும் நடவடிக்கை எடுப்பாங்களா?

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.