2007

gulam_kadir_navalarஇவர் நாகூரில் 1833 ஆம் ஆண்டு பிறந்தவர். நாகூர் பண்டிதர் நாராயண சுவாமி என்பவரிடம் தமிழ்கற்றார். இவர் துவக்க காலத்தில் தனிக்கவிதைகளையும். கீர்த்தனைகளையும் பாடினார். இதன் பின்னர் 108 செய்யுட்களடங்கிய பிரபந்தத் திரட்டு ஒன்றை எழுதினார். அதைப் பிரபந்தத் திருட்டு, பிரபந்தக் குருட்டு, பிரபந்த இருட்டு என்று இழித்துரைத்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமால் தொடர்ந்து கவிபுனைந்தார். யாழ்ப்பாணத்தில் புராண சொற்பொழிவு நடந்த போது மற்ற புலவர்கள் இவரிடம் மிகுந்த சர்ச்சை செய்தனர். அதன் பிறகு நாவலர் பட்டம்வழங்கப்பட்டது. ஆங்கில நாவலாசிரியர் ரைனாலட்ஸ் என்பவர் எழுதிய உமறு என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து உமறு பாஷாவின் யுத்த சரித்திரம் என்ற பெயருடன் நான்கு பாகங்களில் வெளியிடப்பட்டது. சீறாப்புராண வசன காவியமும், ஆரிபு நாயக வசனமும் எழுதினார். பொருத்த விளக்க இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவரின் மாணவர்தான் மறைமலை அடிகள். இவர் தம்முடைய ஆர்வத்தால் கவிபுனைந்து புலவர்களின் மத்தியில் சர்ச்சையாகி நிறைய எதிரிகளைச் சம்பாதித்தவர் என்று கூறலாம்.

1. நாகூர்ப் புராணம்

2. குவாலீர்க் கலம்பகம்

3. நாகூர்க் கலம்பகம்

4. முகாஷபாமாலை

5. கன்ஜுல் கறாமாத்து

6. திருமக்காத் திரிபந்தாதி

7. சமுத்திர மாலை

8. பிரபந்தத் திரட்டு

9. மும்மணிக் கோவை

10. மதுரைக் கோவை

11. சித்திரக்கவித்திரட்டு

12. ஆரிபு நாயகப் புராணம்

13. சீறா வசன காவியம்

14. திருமணிமாலை வசனம்

15. உமறு பாஷா யுத்த சரிதை (நான்கு பாகங்கள்)

16. நன்னூல் விளக்கம்

17. பொருத்த விளக்கம்

18. பிக்ஹ§ மாலை உரை

19. தரீக்குல் ஜன்னா உரை

20. நபிகள் பிரான் நிர்யாணமான்மிய உரை

21. ஆரிபு நாயக வசனம்

22. பதாயிகுக் கலம்பகம்

23. அறபுத்தமிழ் அகராதி

Pin It