valikannan(1920-2006)

-2009

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. மு.சுப்பிரமணியபிள்ளை, மகமாயி அம்மாளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருடைய முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. இதன் பிறகு பல இதழ்களில் கட்டுரைகளும், கதைகளும் எழுதி வந்தார். புதுக்கோட்டையிலிருந்து வந்த திருமகள் பத்திரிகையில் சில காலமும், கோவையிலிருந்து வந்த திருமகள் பத்திரிகையில் சிலகாலமும், கோவையிலிருந்து வந்த சினிமாஉலகம் பத்திரிகையில் சிலகாலமும் சென்னையிலிருந்து வந்த நவசக்தி மாத இதழிலும் சிலகாலம் பணியாற்றினார்.

கிராம ஊழியன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஹனுமான் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1952_ல் முதல் சுதந்திர எழுத்தாளராக வாழ்ந்தார். சி.சு. செல்லப்பாவுடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சென்று எழுத்துப் பிரசுரங்களை விற்பனை செய்தார். துறையூரில் இருந்துகொண்டு சிறு பிரசுரங்களை வெளியிட்டார். மிவாஸ்கி கோரநாதன் என்ற புனைபெயரில் எழுதியவர். சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். புது எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர். எந்த வித ஒளிவட்டமும் இல்லாமல், எளிமையாக வாழ்ந்த எழுத்துலக ஜாம்பாவன். எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மாமனிதனர்.

) கவிதை

1. அமர வேதனை - 1974

) சிறுகதை

1. கல்யாணி முதலிய கதைகள்-1944

2. நாட்டியக்காரி-1946

3. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்)-1946

4. மத்தாப்பு சுந்தரி-1948

5. வல்லிக்கண்ணன் கதைகள்-1954

6. ஆண்சிங்கம்-1964

7. வாழ விரும்பியவன்-1975

8. அருமையான துணை-1991

9. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு)-1991

10. மனிதர்கள்-1991

11. சுதந்திரப் பறவைகள்-1994

12. பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்)-1996

13. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்)-2000

14. தோழி நல்ல தோழி தான்-2000

15. வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்-2002

16. புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள்-2002

17. வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்-2003

) புதினம்

1. குஞ்சாலாடு (நையாண்டி பாரதி)- 1946

2. ராதை சிரித்தாள்-1948

3. ஒய்யாரி-1947

4. அவள் ஒரு எக்ஸ்ட்ரா-1949

5. அத்தை மகள்-1950

6. முத்தம்-1951

7. செவ்வானம் (கோரநாதன்)-1951

8. குமாரி செல்வா-1951

9. சகுந்தலா-1957

10. விடிவெள்ளி-1962

11. அன்னக்கிளி-1962

12. வசந்தம் மலர்ந்தது-1965

13. வீடும் வெளியும்-1967

14. ஒரு வீட்டின் கதை-1979

15. நினைவுச்சரம்-1980

16. அலைமோதும்

கடலோரத்தில்-1980

17. இருட்டு ராஜா-1985

18. மன்னிக்கத் தெரியாதவர்

-1991

19. துணிந்தவன்-2000

) நாடகம்

1. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி)-1948

2. விடியுமா-1948

) கட்டுரைகள்

1. உவமைநயம்-1945

2. கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்)-1946

3. ஈட்டிமுனை (கோரநாதன்)-1946

4. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி)-1947

5. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்-1947)

6. கொடு கல்தா (கோரநாதன்)-1948

7. எப்படி உருப்படும்? (கோரநாதன்)-1948

8. கேட்பாரில்லை (கோரநாதன்)- 1949

9. அறிவின் கேள்வி (கோரநாதன்)- 1949

10. விவாகரத்து தேவைதானா?-1950

11. நல்ல மனைவியை அடைவது எப்படி?-1950

12. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?-1950

13. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? துன்பத்தைக் கெடுப்பதா?-1950

14. முத்துக்குளிப்பு-1965

15. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை-1981

16. சரஸ்வதி காலம்-1986

17. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்-1986

18. புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)-1987

19. வாசகர்கள் விமர்சகர்கள்-1987

20. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்-1987

21. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்-1988

22. தமிழில் சிறு பத்திரிகைகள்-1991

23. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்- 1995

24. தீபம் யுகம்-1999

25. எழுத்து சி.சு. செல்லப்பா-2002

26. தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்-2003

27. தமிழில் சிறுபத்திரிகைகள்-2004

28. வல்லிக்கண்ணன் கட்டுரைகள் -மித்ர-2004

29. எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி - 2005

) திறனாய்வு / ஆராய்ச்சி

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1977

) மொழி பெயர்ப்பு

1. டால்ஸ்டாய்-1956

2. கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்)-1956

3. சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்)-1957

4. கார்க்கி கட்டுரைகள்-1957

5. தாத்தாவும் பேரனும் -1959

6. ராகுல் சாங்கிருத்யாயன்-1986

7. ஆர் மேனியன் சிறுகதைகள் 1991

8. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் 1995

9. நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா 2005

) உரை நூல்கள்

ஐ) பிற

1. நம் நேரு-1954

2. விஜயலஷ்மி (வரலாறு)-1954

3. காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்)-1980

4. வல்லிக்கண்ணன் கடிதங்கள்-1999

5. வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு)-2001

6. நிலைபெற்ற நினைவுகள்-2005

Pin It