MCMLIVVII

 

‘‘ஏய் என்ன இது?’’

நல்லா பாரு?’’

ஓண்ணும் புரியலையே!!’’

“இது என்னுடைய பிறந்த வருடம். ரோமன் எண் முறையில் இப்படித்தான் எழுதனும்.”

“உன்னுடைய பிறந்த வருடம் என்ன?”

“1997”

“அதை ஏன் இவ்வளவு நீளமா எழுதனும்?”

“ஏன்னா? நாம பூஜ்ஜியத்தின் பயன்களைத் தெரிஞ்சுகிட்டதால்தான் இப்படி சுலபமா எழுதுகிறோம். பூஜ்ஜியம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் ரோமானிய எண்கள் இப்படித்தான் இருந்தன. இப்படி எழுதித்தான் ரோமானியர்கள் செத்துக்கொண்டிருந்தார்கள்.”

‘‘பூஜ்ஜியத்த கண்டுபிடிச்சுது நம்ம இந்தியர்கள் தான்”.

“ஆச்சரியமா இருக்கே! உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? வழக்கமா மேத்ஸ் கிளாசில தூங்கித்தானவழிவ” இதெல்லாம் எனக்கு நம்பர் பூதம்தான் சொல்லிக் கொடுத்தது”.

“நம்பர் பூதமா என்ன புதுசா புருடா விடுற. ஏதாவது கனவு கண்டியா?”

“ஆமா ராபர்ட் கனவு கண்டதால வந்ததுதான் இந்த நம்பர் பூதம். ‘நம்பர் பூதம்’ என்பது நான் இப்ப படிச்சுகிட்டு இருக்கிற புத்தகம். ஹான்ஸ் மாக்னல்

அந்தச் சிறுவனுக்குக் கனவு காணும் பழக்கம் உண்டு. அவன் கனவில் பெரியமீன், இருசக்கரவாகனம், கம்ப்யூட்டர், கேம்ஸ் எல்லாம் வரும். அப்படி ஒரு முறை கனவில் வந்ததுதான் நம்பர் பூதம்.

என்சென்ஸ்பெர்கர் என்பவர் எழுதிய புத்தகம். இவர் இதுவரை 250 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நம்பர் பூதம் சிறுவர்களுக்காக எழுதிய முதல் புத்தகம். நம்பர்பூதம் கணிதவியல் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு பூதத்திற்கும் ஒரு சிறுவனுக்கும் இடையே நடக்கிற வாக்குவாதம்தான் இந்தப் புத்தகம். அந்தச் சிறுவனுக்குக் கனவு காணும் பழக்கம் உண்டு. அவன் கனவில் பெரியமீன், இருசக்கரவாகனம், கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாம் வரும். அப்படி ஒரு முறை கனவில் வந்தது தான் நம்பர் பூதம். அதோடு அவன் கனவில் உரையாடுகிறான். அது அவனுக்கு கணிதம் என்றால் என்ன என்பது பற்றியும் கணக்கின் முக்கியத்துவம் பற்றியும் கணக்கின் எளிமை பற்றியும் கூறியுள்ளது. அது சிவப்பாகவும் கையில் ஒரு மந்திரக்குச்சியும் சிகரெட் பைப்பும் வைத்திருக்கும் ஒவ்வொரு கனவின் பொழுதும் அது அவனை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. உதாரணமாக பாலைவனம், கடற்கரை, குகை, காடு போன்ற இடங்களுக்குச் செல்கிறார்கள்.

பூஜ்ஜியத்தை இந்தியர்கள் கண்டு பிடிக்கவில்லை என்றால் இன்று கணிதவியல் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியாது. கம்ப்யூட்டர், ராக்கெட் போன்ற அறிவியல் வளர்ச்சி இருந்திருக்காது.

நமக்கு கணக்கில் கஷ்டமே இந்த நம்பர்கள் தானே! அந்த எண்களே நமக்கு ஈஸியாகிட்டா? அது ரெம்ப ஈஸின்னு நம்பர் பூதம் சொல்லுது. இப்போ 10 + 10 + 10 + 10 என்று எழுதுவதை 410 என்று எழுதினால் 40 என்று எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த எளிய முறையைப் பின்பற்றினால் 44010 என்று எழுதினால் 4400 என்று சொல்லிவிடலாம் இல்லையா? என்ன நண்பா! எல்லா கணக்கு ஆசிரியர்களும் நம்பர் பூதம் போல் மாறிவிட்டால் எப்படி இருக்கும்?

Pin It