காடுகளின் பேரழகிற்குக் காரணமான மரங்கள் இயற்கையின் நரம்பு மண்டலங்கள். காற்றைத் தூய்மை யாக்கி நமக்கு சுவாசம் அளிப்பவை. மேகத்தை சூல் கொள்ளச் செய்து உலக உயிர்களின் உயிராதாரமான நீரை மழையென நமக்குப் பொழிபவை. தங்கள் வேர்களில் நீரைச் சேமித்து வரும் தலைமுறைக்கு வாரி வழங்குபவை.

இவையெல்லாம் இயற்கையோடு இயைந்த இனங்களின் உணர்வு. ஆனால் உலகிலுள்ள ஒவ்வொன்றை யும் சந்தைப் பொருளாக, பணமாகப் பார்க்கும் முதலாளியம் காடுகளையும் கரன்சிகளாகவேப் பார்க்கிறது. தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம், போக்குவரத்து விரிவாக்கம், மின் திட்டங்கள் இவற்றின் பெயரால் வரைமுறை யற்றச் சூறையாடலை முதலாளியம் தொடர்கிறது. அதன் இணைப்புக் கண்ணியாய் இந்திய அரசு திகழ்கிறது. அதன் ஒரு பகுதிதான் குடகு மலையைக் குறிவைத்து மின்பாதை அமைக்கும் பெயரால் இந்திய அரசு மேற் கொண்டுள்ள மைசூர் -- கோழிக்கோடு இரட்டை மின்பாதைத் திட்டம். இந்திய அரசின் இந்திய மின் தொகுப்புக் கழகம் இதனைச் செயல்படுத்துகிறது.

கர்நாடகத்தின் கைக்கா மின் நிலையத்திலிருந்து 740 கி.மீ. தொலைவிலுள்ள கேரளத்தின் கோழிக்கோடு பகுதிக்கு 400 கிலோவாட் மின்சாரம் கொண்டு செல்வ தற்காக மைசூர் - கோழிக்கோடு மின்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குடகு மலைப் பகுதியிலுள்ள தோதா கார்வே வனப்பகுதி, துபாரே வனப்பகுதி, தேவமாச்சி வனப்பகுதி மற்றும் காப்பித் தோட்டங்கள், நெல் வயல்கள் இவற் றின் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டமிது. இத்திட்டத்திற்காக 1 இலட்சத் திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை சீரழிக்கப்படும் அபாயமுள்ளது.

வன உயிரினங்கள் மட்டுமின்றி பல்லுயிர்ச் சூழலும் மிகுந்த கேட்டினைச் சந்திக்கும். காவிரியின் தாய்மடியான குடகு, காவிரி உற்பத்தியாகும் இடம் மட்டு மல்ல, காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியு மாகும்.

குடகு மலையின் காடுகள், வளர்ச்சித் திட்டங்கள் பெயரால் அழிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் கொஞ்ச நஞ்சம் ஓடும் காவிரி யும் கானல் நீராகிவிடும்.

இச்சூழலில்தான் குடகுப் பகுதி யைச் சார்ந்த இயற்கை ஆர்வலர் கள், உழவர்கள், சமூகச் செயல் பாட்டாளர்கள் இத்திட்டத்தை எதிர்த்து வீதிக்கு வந்தனர்.

முனைவர் நஞ்சப்பா தலைமை யில் கர்நாடகத்தில் போராட்டக் குழு அமைக்கப் பட்டுள்ளது. “காவிரி காக்கும் போராட்டம்” எனும் முழக்கத்தோடு ஆயிரக் கணக்கான உழவர்களைத் திரட்டி 24.02.2014 அன்று குடகு மாவட் டத்திலுள்ள மடிக்கரைப் பேருந்து நிலையத்திலிருந்து பெரும் பேரணி யாகச் சென்று காவல்துறை ஆணை யர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இப்போராட்டத்தில் கர்நாட கத்தின் மாண்டியா உள்ளிட்டப் பகுதிகளிலிருந்தும், கேரளாவில் இருந்தும் பலர் பங்கேற்றனர். தமிழ் நாட்டிலிருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் கோ. மாரி முத்து தலைமையில் தோழர்கள் பங்கேற்றனர். இப்போராட்டத் திற்குப் பின்னரும்கூட இந்திய, கர்நாடக அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. அதன் பின்னர் மின்பாதைத் திட்டத்திற்காக மரங் கள் வெட்டப்படும் வனப்பகுதிக் கேச் சென்று போராட்டக்காரர் கள் தடுத்தனர். வீரமிக்க இப் போராட்டத்தின் விளைவாக மரம் வெட்டும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.

மேலும் மின்பாதைக்கான மாற் றுப் பாதையை ஆராய முனை வர் ஆர்.எஸ். சிவக்குமார ஆரத்யா தலைமையில் பேரா. இராமன் சுகுமார், திரு. அஜய் மிஸ்ரா (இ.வ.ப) ஆகியோர் அடங் கிய மூவர்குழுவை கர்நாடக அரசு அமைத்தது.

இவ்வறிக்கை மாற்றுப் பாதை தேவையில்லை எனவும் ஏற்கெ னவே வெட்டப்பட்ட 2,247 மரங்க ளோடு 12கி.மீ. தூரத்திற்கு மொத்தம் 6,000 மரங்கள் மட்டுமே வெட்டப்படும் எனவும் வளர்ச்சி நோக்கில் இதுவொரு பாதிப்பல்ல எனவும் இக்குழு அறிக்கை அளித் தது.

மைசூர் -- கோழிக்கோடு மின் பாதைத் திட்டத்தால் 1 இலட்சத் திற்கும் மேலான மரங்கள் வெட் டப்படும் என்ற உண்மைக்கு மாறாக மூவர்குழு பொய்யுரைக்கிறது. மேலும் கைக்காவிலிருந்து கடற் கரை வழித்தடத்தில் மிக எளிதாக மின்பாதைத் திட்டம் செயல் படுத்துவதற்குரிய வாய்ப்பிருந்தும் அதனை மறுதலித்து குடகில் மரங் கள் வெட்டப்படுவதற்கே துணை நிற்கிறது மூவர்குழு அறிக்கை.

கடற்கரை ஓரமாக மின்பாதை அமைக்கும் மாற்றுத் திட்டத்திற்கு கூடுதல் செலவாகும் என்பதை தாண்டி வலுவான எந்த மறுப்பை யும் இந்திய மின் தொகுப்புக் கழகம் முன்வைக்காத நிலையில், அவர்கள் கொடுத்த அறிக்கையை மூவர்குழு அப்படியே ஏற்றுக் கொண்டிருப் பது ஒருதலைச் சார்பானது.

தற்போதுள்ள கடக்கோவா- கானியம்பேட்டா 260 கிலோவாட் மின்பாதையை மேம்படுத்தி அந்த கம்பிகள் வழியாகவே இப்போது திட்டமிடப்பட்டுள்ள 400 கிலோ வாட் மின்சாரத்தை எடுத்துச் செல்லலாம் என்று குடகு மக்கள் சார்பில் மாற்று யோசனை முன் வைக்கப்பட்டது. இப்போதுள்ள பாதையில் சில மாதங்களுக்கு மின் வழங்கலை நிறுத்தி, தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து கொண் டால் அதிகம் போனால் ஓராண் டிற்குள் இந்த மின்பாதையை 400 கிலோவாட் மின்வழங்கலுக்கு தகுதிபடுத்திவிட முடியும் என்பதை மூவர் குழுவும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஓராண்டுகாலம் காத்திருப் பது முடியாது என்று பிடிவாதம் செய்கிறது இந்திய அரசு.

நாகரா ஹோலே தேசியப் பூங்காவை ஒட்டி ஓரிரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரும் வகை யில் குடகு மக்கள் குழுவினர் சொன்ன மாற்று யோசனையை நிராகரிப்பதற்கு மூவர்குழு சொல் லும் காரணம் நகைப்பிற்கிட மானது.

தேசிய வனவிலங்கு வாரியத் திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உச்ச நீதி மன்றத்தின் இசைவைப் பெற வேண்டியிருக்கும் என்பதும் மாற் றுப்பாதைத் திட்டத்தை எவ்வளவு அலட்சியமாக மூவர்குழு மறுக்கி றது என்பதற்குச் சான்றாகும்.

இம்மின்பாதைத் திட்டம் தொடர்பாக கனரக வாகனங்களின் போக்குவரத்து அப்பாதையில் அதிகரிப்பதும் அந்தக் காட்டுப் பகுதியில் வாழும் யானை, புலி போன்ற வனவிலங்குகளை அச் சுறுத்தி அவை மனிதர்களை தாக்கும் ஆபத்து அதிகரிக்கக் கூடும் என்பதையும் இம்மூவர்குழு ஏற்றுக் கொள்கிறது. காட்டு யானைகளின் வரவால் காப்பித் தோட்டங்களும் நெல் வயல்களும் குடியிருப்புகளும் குடகுப் பகுதியில் கூடுதல் அச்சுறுத் தலுக்கு ஆளாகும் என்பதையும் மூவர்குழு அறிக்கை ஏற்றுக் கொள் கிறது.

இவ்வளவு இருந்தும் மைசூர் - -கோழிக்கோடு 400 கிலோவாட் இரட்டை மின்பாதைத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியதில்லை என்று மட்டும் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் காவிரி காக்கும் போராட்டக்குழு உடனடியாகக் கூடி அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்தது. முனைவர் நஞ்சப்பா, கர்னல் முத்தண்ணா உள்ளிட்ட குடகுப் பகுதித் தலை வர்களும் கர்நாடகத்தின் பிற பகுதி களிலுள்ள உழவர் சங்கப் பேராளர் களும், கேரளாவிலிருந்து இயற்கை ஆர்வலர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பங்கேற்ற னர். தமிழ்நாட்டிலிருந்து தமிழ்த் தேசியப் பேரியகத்தின் சார்பாக தோழர்கள் கோ. மாரிமுத்து, நா. இராசாரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய அரசு, மின் பாதைத் திட்டம் மட்டுமல்லாமல் நான்கு வழிச் சாலைத் திட்டம், தொடர் வண்டி இருப்புப் பாதைத் திட்டம் ஆகியவற்றையும் செயல்படுத்த உள்ளது. இப்பொழுதே குடகில் அபே நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் மலைகள் மொட்டை யாக்கப்பட்டு மண் அடித்து சம வெளிகள் உருவாக்கப் படுகின்றன. மைசூரிலிருந்து கேரளாவிற்கு தற்போதுள்ள தொடர்வண்டித் தடத்திற்கு மாற்றாக குடகு மலைப் பகுதி வழியாக புதிய பாதை அமைக் கும் திட்டம் அரசின் ஆய்வில் உள்ளது. இத்திட்டங்க ளெல்லாம் செயல்படுத்தப்பட்டால் குடகு மலை பாதி பாலையாகி விடும், காவிரி நீர் குறைந்து போகும்.

எது அழிந்தால் என்ன, கர்நாட கத்திற்குத் தேவையான நீர் தரும் அளவுக்கு காவிரி இருந்தால் போதும், தமிழ்நாட்டின் பங்கு தானே பாதிக்கப்படும் என்று கருது கிறதா கர்நாடகம்?

அக்காவிரிக்கான நீர்ப்பரப்பு குடகு மலையின் மரங்களில்தான் உள்ளது. எனவே குடகின் வனப் பகுதியைக் காப்பதற்கானப் போராட்டத்தில் தமிழர்களும், தமிழகமும் கை கோக்க வேண்டியது தலையாய கடமை ஆகும்.

தமிழக அரசு உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழியாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்த வேண்டும். மைசூர்- கோழிக்கோடு மின்பாதைத் திட்டத்திற்கு கடலோர வழியை மாற்று வழித் தடமாக வற்புறுத்த வேண்டும்.

Pin It