சமூக வழியில் பின்தங்கியுள்ள மக்களுக்கு, கல்வி _ -வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு கொடுப்பதால், திறமை பாதிக்கப்படும் என்று பல காலமாக, ஆதிக்க சக்தியினர் சொல்லி வருகின்றனர். இட ஒதுக்கீட்டால் பலன் அனுபவிக்கும் பின் தங்கிய மக்களில் ஒரு பகுதியினர் கூட, இக்கருத்தை ஏற்றுக் கொண்டு தர்க்கம் புரிகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகளவில் இட ஒதுக்கீடு நீடிக்கும் தமிழகத்தில்தான், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது, நாம் மெய்நடப்பில் உணரக் கூடிய சான்று!

எனினும், சாதி ரீதியான இட ஒதுக்கீடுகளை எதிர்த்து கருத்து வெளியிடுபவர்கள் இவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் சமூக ரீதியான இட ஒதுக்கீடு தேவை என்றும், ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப, கல்வி -_ வேலை வாய்ப்பு களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி வருகிறோம். அதற்கு, மேலும் வலுசேர்ப்பதைப் போல் ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது.

தில்லி பொருளாதாரப் பள்ளியின் அஷ்வின் தேஷ் பாண்டே, மிச்சிகன் பல்கலைக் கழகப் பொருளியல் துறை பேராசிரியர் தாமஸ் விஸ்கோப் ஆகியோர் நடத்திய இந்த ஆய்வு, உலக வளர்ச்சி (World Development Journal) இதழில், கட்டுரையாக வெளி வந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக, அக்குழுவினர் இந்தியாவிலேயே மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனமான, பல்லாயிரக் கணக் கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் இந்தியத் தொடர்வண்டித் துறையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

1980ஆம் ஆண்டு, தொடர்வண்டித் துறையில் பணியிலிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக விகித்தாச்சாரத்தையும், அதன் வேலைத் திறனையும் 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அவர்களின் சமூக விகிதாச் சாரத் தையும், வேலைத் திறனையும் அக்குழுவி னர் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

இந்தியத் தொடர்வண்டித்துறையில் தற்போதுள்ள குரூப் -A , குரூப் - B, குரூப் - C, குரூப் - D எனவுள்ள 1.4 மில்லியன் பணியாளர்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் 15 விழுக்காடும், பழங்குடியின மக்கள் 7.5 விழுக்காடும் பணியாற்றுகின்றனர். இதுதவிர, பிற்படுத்தப்பட்ட மக்களும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இதில் பணியாற்றுகின்றனர்.

இதில், குரூப் - A மற்றும் குரூப் - B பிரிவுகளில் உள்ள பணியாளர்களை மட்டும் கொண்டு, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இப்பிரிவில் பணியாற் றும் ஊழியர்களின் வேலை நேரம், அவர்களின் வேலைத் திறன் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.

இதன் ஒப்பீட்டு முடிவிலேயே, இட ஒதுக்கீடு அடிப் படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஊழியர் களின் காரணமாக, நிறுவனத்தின் ஒட்டுமொத்த வேலைத்திறன் குறையவில்லை. மாறாக, அதிகரித்திருப்பது கண்டறியப் பட்டது.

Pin It