க.முனியய்யா

க.முனியய்யா, ஓர் உழவர். ஒரு ஏக்கர் மானாவாரி நிலம் இவருக்குச் சொந்தம். தஞ்சாவூருக்கு அருகேயுள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தவர். வயது 65. மழையை மட்டுமே நம்ப கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்கிறார். ஆண்டுக்கு ஒரு போகம் மட்டும் நெல் விளைவிக்கிறார். ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் போது, உழவைத் தொடங்குகிறார். விதைப்பதோ புரட்டாசி அல்லது ஐப்பசியில்தான். அரை ஏக்கரை உழுவதற்கே இவருக்கு 15 நாட்கள் ஆகிறது. ஏன் என்கிறீர்களா? ஏர் மாடு இல்லை. கூலி கொடுக்கப் பணம் இல்லை. டிராக்டரை நினைப்பதே கடினம். ஆகவே, மண்வெட்டியாலேயே நிலத்தைக் கொத்தி உழுகிறார்.

ஒரு போகம் விவசாயம் செய்ய இதேபோல், இரண்டு அல்லது மூன்று முறை உழுகிறார், இல்லை கொத்துகிறார். புராதன வேளாண் முறை இது. அதாவது, மனிதகுல வளர்ச்சியில் முனியய்யா ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகள் பன்னே உள்ளார்.ஆனாலும், விவசாயம் செய்வதை இவர் நிறுத்துவதே இல்லை. இவர் தோட்டத்துக்குப் பக்கத்தில் 15 அடி ஆழத்திற்குக் கீழ் மழைநீர் அணை வாய்க்கால் ஓடுகிறது. ‘அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள ஒரு டீசல் மோட்டார் இருந்தால் ஆண்டு தோறும் விவசாயம் செய்வேன். ஆனால் அதற்கு வசதி இல்லை’ என்கிறார் முனி யய்யா. இந்த ஆண்டும் தன் மண்வெட்டியால் கொத்தத் தொடங்கி விட்டார். இவர் மனைவி காதுகேளாத, வாய்பேச இயலாத மூதாட்டி. இவரும் அன்றாடம் நிலத்திற்கு வருகிறார். ஆடுகள் வளர்க்கிறார். த.தே.பொ.கவின் நீண்டகால உறுப்பனர் முனி யய்யா என்பது கூடுதல் சேதி.டிராக்டர், ஆழ்துளைக் கிணறு, சொட்டுநீர் என சகல வசதிகள் உள்ளோர், “இந்தக் காலத்துலல்லாம் விவசாயம் செய்ய முடியாதுங்க’ என்பதைக் கேட்கும்போது இனி உங்களுக்கு முனி யய்யா நினைவுக்கு வருவார்தானே!

வழக்கறிஞர் புகழேந்தி

 நிதியும் அநீதியும் தாண்டவமாடும் இன்றைய நீதித்துறையில், நீதியை நிலைநாட்டத் துடிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய நியாவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுள் ஒருவரே வழக்கறிஞர் புகழேந்தி. சென்னையில் 1984இல் ஒரு கொலையை செய்து விட்டு தலைமறைவான டக்ளஸ் தேவனந்தா, இலங்கை அரசில் அமைச்சரான பன் அண்மையில் இந்தியா வந்த போது அவரை கைது செய்ய நீதிமன்றம் சென்று ஆணை வாங்கியவர் இவரே. இவரது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள சேமனூர் . அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியலும் மின்னணுவியலும் படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், தம் விருப்பத்தின் பேரில் தமிழில் இளங்கலையும் முதுகலையும் படித்தார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனும் த.ஒ.வி.இ. பொதுச் செயலாளருமான தோழர் பொழிலன் அவர்களை திருச்சி சிறையில் 1997ஆம் ஆண்டு சந்தித்த போது, அவர் புகழேந்தியை சட்டம் பயிலக் கூறுகிறார். இதன் பன்னணியில் தாம், அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றதாக புகழேந்தி நினைவு கூறுகிறார்.

 இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வரும் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்த் தேசியர்கள் மீதான அரசின் அவதூறு வழக்குகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை வழக்குகள், முஸ்லிம்கள் மீதான போலி வழக்குகள் எனப் பல்வேறு வழக்குகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு களமாடி வருகிறார். தமிழகக் காவல்துறையின் உளவுப்பரிவு உயர் அதிகாரிகளின் ஆசியுடன், தொலைபேசி ஒட்டுக்கேட்பல் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவனத்தையும், அதில் ஒட்டுக் கேட்கப்பட்டு வந்த தொலைபேசி எண்களின் பட்டியலையும் இவர் வெளியிட்டது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பயது.

தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பல் நடத்தப்பட்டு வரும், “சவுக்கு.நெட்’ என்ற வலைத்தளத்தில் தமிழகக் காவல்துறை அதிகாரிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை உடனக்குடன் வலையேற்றுவதில், வழக்கறிஞர் புகழேந்தி உறுதுணையாக இருந்து வருகிறார். ஈழவிடுதலைப் போரின் பன்னணியில், தாம் தமிழ்த் தேசிய அரசியல் நோக்கி ஈர்க்கப்பட்டதாக இவர் கூறுகிறார். ஒடுக்குமுறைகளை கையாளும் அரசிடமிருந்து போராளிகளைப் பாதுகாக்க தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும், வழக்கறிஞர் புகழேந்தி தமிழ்த் தேசியத்தின் நம்பக்கைக் கீற்றாக ஒளிர்கிறார்.
 
அற்புதம் அம்மாள்

அந்தப் பெயர் வட சொல்லாக இருந்தாலும் அவருக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. “அற்புதம்” இப்பொழுது பேரறிவாளன் அம்மா மட்டுமில்லை, தமிழின உணர்வாளர்கள் அனைவர்க்கும் அம்மாதான்!

வேலூர் மாவட்டம் சோலையார்ப் பேட்டையில் 1967 -ஆம் ஆண்டு செல்வி அற்புதத்திற்கும் செல்வன் ஞானசேகரனுக்கும் (குயில்தாசன்) தி.க. பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடைபெற்றது. அப்போது தாலி அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 1972 இல் திருப்பத்தூரில் தி.க. இயக்கப் பெண்களின் தாலி நீக்கக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது. தாலி நீக்க நிகழ்வுக்குத் தலைமை தாங்க வேண்டிய அம்மையார் வரவில்லை. திராவிடர் கழகக் கூட்டம் எழுச்சியாக நடந்த்து. தாலி நீக்க நிகழ்வு மட்டும் தள்ளி வைக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த குயில்தாசனும் அற்புதமும் ஒரு முடிவு செய்தனர். வீட்டிலேயே தாலியை கழற்றிவிடுவது என்பதே அம்முடிவு. அதன்படி குயில்தாசன் அம்மா கண்ணம்மாள், மனைவி அற்புதம், சித்திகள் அம்மணி அம்மாள், ராஜம் அம்மாள், தம்பி மனைவி சுந்தரி, மற்றும் ஊர்க்கரார்கள் சரோஜா உள்ளிட்டோர் குயில்தாசன் வீட்டில் தாலி கழற்றினர்.

 எம்.ஜி.ஆர். ஆட்சியில் தம்பி பிரபாகரன் மற்றும் புலிகளின் ஆயுதங்களைக் காவல் துறையினர் பறித்த போது அதை எதிர்த்து தி.க. நடத்திய போராட்டத்தில் 13 நாட்கள் சிறை சென்றார் அற்புதம். அதன் பிறகு தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாக தி.க. நடத்திய தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு 13 நாள் சிறையிலிருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் அற்புதம் - குயில்தாசன் மகன் பேரறிவாளன் சிறைப்படுத்தப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்ட பின் அற்புதம் அம்மாள் புதிய புரட்சி வடிவம் எடுத்தார். மார்க்சிம் கார்க்கி “தாய்” புதினத்தில் வரும் தாயை நினைவூட்டும் வகையில் காவல் துறையின் அத்தனை கெடுபிடிகளுக்கும் அஞ்சாமல், அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட அத்தனை பேரையும் சந்திப்பது அவர்கள் வீடுகளுக்குத் தகவல் சொல்வது, உதவிகள் வழங்குவது எனப் புயலாகச் செயல்பட்டார்.

 தமிழின உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும் பங்கு கொள்ளும் அற்புதம் அம்மாள் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். இப்பொழுதும் வாரம் தோறும் வேலூர்ச் சிறைக்குச் சென்று அறிவு மற்றும் தோழர்களின் நலன் விசாரித்து வருகிறார். உதவி வருகிறார். அற்புதம்-குயில்தாசன் இணையர்க்கு மகள் அன்பு மணி (பெரியார் சூட்டிய பெயர்) பேரறிவாளன், மகள் அருட்செல்வி ஆகிய மக்கள் உள்ளனர்.

பெண்ணுரிமைக்கும் பெண்ணின் கற்றலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் அற்புதம் அம்மாள்.

Pin It