தங்களது ஆட்சிப் பரப்பில் கதிரவன் மறைவதில்லை என்று கூறும் அளவிற்கு உலகின் பல நாடுகளின் நிலப்பரப்புகளை கைப்பற்றி பேரரசு ஆட்சி செய்த ஏகாதிபத்தியமும், இன்று வரை ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் இருந்து வரும் வல்லரசு நாடாகிய ஒருங்கிணைக்கிணைத்த பேரரசு என்றழைக்கப் படும் பிரித்தானியா பல நூற்றாண்டுகள் அதன் உறுப்பு பகுதியாக இருந்து வரும் ஒரு முக்கியப் பகுதியை இழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அது, ஸ்காட்லாந்து என்றழைக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் ஸ்காட்டிஷ் தேசிய இனத்தின் தாயகமாகும்.

ஐக்கிய இராச்சியம் (United Kingdom) என்பது பெரிய பிரிட்டன் (Great Brittan) மற்றும் வடக்கு அயர்லாந்து (Norther Ireland) என்ற இரண்டு நிலப்பரப்புகளைக் கொண்டதாகும். அதில், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு தேசங்கள் அடங்கியுள்ளன.

இந்த பிரித்தானிய ஒருங்கிணைந்த பேரரசு என்பது 1707ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட தாகும். இங்கிலாந்து அரசு, மற்ற மூன்று தேசிய இனங்களை வெற்றி கொண்டு ஒருங்கிணைந்த பேரரசை உருவாக்கியது.

 ஒருங்கிணைந்த பேரரசுக்கு எதிராகப் பல நூற்றாண்டுகள் போராடிய, ஐரிஸ் தேசிய இனம் தங்களது தேசத்தின் ஒரு பகுதிக்கு (தெற்கு அயர்லாந்து) 1922-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. ஆனால், அதன் மற்றொரு பகுதி (வடக்கு அயர்லாந்து) பிரித்தானியாவின் பகுதியாக தொடர்ந்து இருந்து வருகிறது.

ஐரிஸ் தேசிய இனம் போன்றே, ஸ்காட்டிஸ் தேசிய இனமும் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தது. ஐரிஸ் தேசிய இன மக்களில் ஒரு தொகுதியினர் பழங்காலத்தில் ஸ்காட்டிஸ் நிலப்பரப்பில் குடியேறி, பிறகு ஸ்காட்டிஸ் என்ற தனித் தேசிய இன மக்களாயினர். இவ்வகையில், இரு இனங்களும் உறவுடைய இனங்களாகும்.

ஸ்காட்லாந்து, நல்ல தொழில் வளர்ச்சி யடைந்த பிரதேசமாகும். அதன் தலைநகர் எடின் பர்க் என்ற நகரமாகும். புகழ்பெற்ற கிளாஸ்கோ என்ற தொழில் நகரமும் அங்குதான் உள்ளது.

ஒற்றையாட்சி முறையைக் கொண்ட பிரித்தானியா தனது பகுதிகளான மேற்குறிப் பிட்ட தேசிய இனங்களின் நிலப்பரப்பு களுக்கு கூட்டாட்சி நாட்டின் உரிமைகளைக் கூட வழங்க மறுத்து பல நூற்றாண்டுகள் அவற்றை ஆட்சி செய்தது. அதன் மூலம், அத்தேசிய இன மக்களின் மொழி மற்றும் பிற உரிமைகளையும் மறுத்து வந்தது.

ஆயினும் இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு, ஐரோப்பாவில் பிற தேசிய இனங்கள் பெற்றுள்ள உரிமை களை தனது நாட்டில் உள்ள தேசிய இனங்களுக்கு வழங் காமல் மறுக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட பிரித்தானியா, மேற்குறிப்பிட்ட தேசிய இனப் பகுதிகளுக்கு ஒரளவிற்கு உரிமைகளை வழங்க முன்வந்தது. இறுதியில், 1999இல் ஸ்காட்லாந்து பகுதிக்கு தனி நாடாளுமன்றத்துடன் கூடிய சுயாட்சி உரிமை வழங்கியது.

ஸ்காட்லாந்து மக்களும் கூட, பிரித்தானியாவின் அரசியலில் முக்கிய இடம் பிடிக்கத் தொடங்கினர். அந்த நாட்டின் தொழிலாளர் கட்சியினை ஸ்காட்லாந்து நாட்டினர்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முன்னாள் முதன்மை அமைச் சரான டோனி பிளையர், ஒரு ஸ்காட்டிஸ் தேசிய இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, பிரித்தானியாவின் அரசியலையே தீர் மானிக்கும் அளவிற்கு ஸ்காட் லாந்து தேசிய இனம் அரசியல் செல் வாக்கை பெற்றிடும் நிலைக்கு வந்து விட்டாலும், தங்களது தேசிய இனத்தின் தனி அரசு உரிமையை அவர்கள் இழக்க விரும்பவில்லை.

ஸ்காட்டிஸ் தேசியக் கட்சி தான் ஸ்காட்லாந்து நாட்டின் விடுதலைக்கு இயக்கம் நடத் தியது.

அதன் காரணமாகத்தான், ஸ்காட்லாந்து பிரித்தானியாவிலிருந்து(ஒருங்கிணைந்த பேரரசி லிருந்து) பிரிந்து செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்ப தற்கான பொது மக்கள் வாக்கெடுப்பினை 2014ல் நடத்தவிருக்கிறது. பிரித்தானியா அரசு.

அவ்வாறு ஸ்காட்லாந்து பிரிந்து செல்லு மேயானால், பிரித்தானியா தனது எண்ணெய் வளம் உள்ளிட்ட பொருளாதார வளங்களையும், அணு குண்டுகளை ஏந்திச் செல்லும் ராக்கெட்டு ஏவுதளங் களைக் கொண்ட கப்பற் படையையும் இழந்து விடும் என்று தெரிய வருகிறது. அதனால், தற்போது பிரித்தானியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடு ஆகிய அதன் செல்வாக்கிற்கு பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஸ்காட்லாந்து சுயாட்சிப் பகுதியின் முதன்மை அமைச்சர் சால்மண்ட் ஸ்காட்டிட்ஷ் தேசியக் கட்சிக்காரர் அவர், தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் விடுதலை பெறுதல் என்பது இயற்கையானது என்றும் அதனையே தானும் வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாக்கெடுப்பு முடிவு தனி நாட்டரசுக்கு ஆதரவாக இருக்குமேயானால், தங்களது நிலப்பரப்பில் பாது காக்கப்பட்டு வரும் பிரித்தானியாவின் அணு ஆயுதங்கள் உடனே அகற்றப்படும் என்று அறிவித்துள்ளார். தாங்கள், பிரித்தானியாவின் பகுதியாக இருந்து வந்ததால், ஈராக் போர் போன்ற சட்ட விரோத போர்களில் தங்கள் தேசத்தவர்களும் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஸ்காட்லாந்து தனி நாடாவதன் மூலம் அது போன்ற நிலைமை தவிர்க்கப்படும் என்றும் சால்மண்ட கூறுகிறார்.

நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத் தியம் மற்றும் உலகமயம் என்று பல வரலாற்றுக் கட்டங்களை கடந்து வந்துள்ள போதும், பிரித்தானியா தனது நாட்டிற் குள்ளேயே பல நூற்றாண்டுகள் இருந்து வந்த ஒரு தேசிய இனத் தின்அடையாளத்தையும், அதன் தனி அரசு உரிமையை யும் மறுக்க முடியாது என்ற நிலைமை இறுதியில் உருவாகி விட்டது. என்ன தான் பொருளாதார வளர்ச்சியும் மற்ற உரிமைகளும் பெற்ற பொழுதும் தன்னுடைய இன அடையாளத்தையும் தனி அரசு உரிமையையும் ஒரு தேசிய இனம் இழக்க விரும்பாது என்பதையும் ஸ்காட்லாந்து வரலாறு உலகிற்கு தெரிவிக்கிறது. 

Pin It