இரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலைச் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாட்டு சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்தி ருக்கின்றன. உலகம் கைகட்டி வேடிக்கைப் பார்த் திருக்கிறது.

            இது அண்மையில் நமக்கு அருகில் நிகழ்ந்ததாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சம்பவம் ஒன்றுதான்.

            ‘ருவாண்டா படுகொலைகள்’ என்று அழைக்கப்படும் அந்த அவலம் ருவாண்டாவில் நடந்தது 1994 ஆம் ஆண்டு. அடித்துக்கொண்ட இரண்டு இனம் ‘துட்ஸி’மற்றும் ‘உத்து’.

            ருவாண்டா ஆப்பிரிக்காவில் மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு நாடு. அதைச் சுற்றி இருக்கும் நாடுகள் ‘உகாண்டா’, ‘புருண்டி’,காங்கோ மற்றும் ‘தான்சான்யா’. எல்லா நாடுகளைப்போலத்தான் பல இனங்கள் இருந்தாலும் ‘துட்ஸி’ மற்றும் ‘உத்து’ இனங்கள் பெரும்பான்மைப் பெற்றவை.

            பதினைந்தாம் நூற்றாண்டில் ’துட்ஸி’ இனம் அதிகாரத்திலிருந்திருக்கிறது. 1886-இல் ஜெர்மா னியர்களால் பிடிக்கப்பட்டு பின்பு 1919-இல் ‘வார்சைலஸ்’ ஒப்பந்தத்திற்குப் பிறகு பெல்ஜிய ஆட்சியின் கீழ் வந்தது. அவர்களின் ஆட்சியின் கீழ் ‘துட்ஸி’ இனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படிப்பு,அரசியல் மற்றும் வணிகத்தில் மேன்மையடைந்தார்கள். இரண்டு இனத்திற்குமான பகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது எங்கேயும் காலனி அரசுகளால் கைகொள்ளப்படும் முறைதான்.

            1959-களில் ’உத்து’ இனத்தலைவர்களால் சமூக எழுச்சிப்போராட்டங்கள் நடத்த இயக்கங்கள் துவங்கப் பட்டு போராடத்துவங்கினர். இது முதல் ‘ருவாண்டா உள்நாட்டு யுத்தமாக’ மாறி 20,000 ‘துட்ஸி’ மக்கள் கொல்லப்பட்டனர், 2,00,000 ‘துட்ஸி’ மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக எல்லைகடந்துப் போனார்கள். ருவாண்டா 1961-இல் பெல்ஜி யத்திடமிருந்து விடுதலைப்பெற்றது. அதிகாரத்தில் ’உத்து’ இனம்.

            அகதிகளாக வெளியேறிய ’துட்ஸி’ மக்களைக் கொண்டு ருவான்டா தேசப்பற்று Rwandan Patriotic Front - RPF என்ற அரசியல் அமைப்பும் ருவான்டா தேசப்பற்றுப் படை Rwandan Patriotic Army - RPA என்ற இராணுவ அமைப்பும் ஏற்படுத்தப்பட்டன. அதிலிருந்து இரண்டு இனத்திற்கும் தொடர்ந்து சண்டைகள் நடந்துக்கொண்டிருந்தன.

            1993-இல் போராளிகளுக்கும்(RPF) ருவாண்டன் அரசாங்கத்திற்கும் இடையே தான்சானியாவிலிருக்கும் ’அருஷா’ நகரில் ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. அப்போது ருவாண்டாவின் அதிபராக இருந்த ஜீவனல் ஹபரியுமனாவும் அதிகாரத்தை ’RPF’-யுடன் பகிர்ந்துக் கொள்ள முதலில் மறுத்தார். பின்பு அவர் சம்மதித்தப் போது ’RPF’ கையெழுத்திட மறுத்தது. மொத்தத்தில் ’அமைதி ஒப்பந்தம்’ நிறைவேறாமல் அப்படியே இருந்தது.

            இந்த நிலைமையில் ஏப்ரல் 6,1994. ’புருண்டே’ அதிபரும் ருவாண்டா அதிபர் ஜீவனல் ஹபரியுமனாவும் வந்த விமானம் ருவாண்டா தலைநகர் ’கிகாளி’ விமானத் தளத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருவரும் இறக்க, மீண்டும் கலவரம் அதிகரித்தது.

            நாடுமுழுவதும் 'Intera hamwe' மற்றும் Impuza mugambi ஆகிய இரண்டு ’உத்து’ படைகளால் துண்டாடப்பட்டது. கலவரங்கள், படுகொலைகள் துவங்கப்பட்டன. இதற்கு ஆளும் ’உத்து’ அரசாங்கமே உதவிச் செய்தது.

            அப்போது அங்கே முகா மிட்டிருந்த ஐக்கியநாட்டுப் படைத் தளபதிக்கும் ‘ருவாண்ட விமானப் படை’ பிரிவினர்க்கும் வாக்குவாதம் முற்றியதால், நிலைமை தங்கள் கைமீறிப் போவ தால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரத்தை அப்போதைய ருவாண்டா பிரதமர் ’ Agathe Uwilingiyimana’-விடம் ஒப்படைத்து விட்டு அவருக்கு பாது காப்பாக பத்து வீரர்களை கொடுக்கப் பட்டது. பிரதமர் வானொலியில் அமைதிக் கான வேண்டுகோள் கொடுக்க நினைத்தார். ஆனால் வானொலி நிலையம் கைப்பற்றப் பட்டிருந்தது. அதனால் அவர் தன் பேச்சை ரத்துசெய்ய வேண்டி யிதாற்று. பின்பு பிற்பகலில் அவர் படுகொலைச் செய்யப்பட்டார். பாதுகாப்புப் படையும் படுகொலைச் செய்யப் பட்டது.

            நாடு முழுவது இருந்த ’துட்ஸி’ மக்கள் கொல்லப்பட்டனர். முற்போக்கு ’உத்து’ இனத்தவரும் கொல்லப்பட்டனர். மக்கள் அவர் களின் பக்கத்து வீட்டினர் களாலையே கொல்லப் பட்டனர். அரசாங்கம் கொடுத்த துப்பாக்கியும், வெடிகுண்டு களையும் வைத்துக் கொன்றனர். மாதாக்கோவில்களில் அடைக்கலம் அடைந்தவர்கள் கோவிலோடு சேர்த்து எறித்தனர். சாலைகள் முழுவதும் தடைகள் ஏற்படுத்தப் பட்டது. மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப் பட்டனர்.

            அதுநாள்வரை அண்டை வீட்டுக்காரராக இருந்தவர்களையே கொன்று குவித்தனர். இராணுவம் ஊர் ஊராகச் சென்று வானொலியில் தன் பக்கத்து வீட்டுக்காரரை கொல்லும்படி ‘உத்து’ மக்களிடம் கட்டளை இட்டார்கள், மறுத்து வர்கள் தாங்களே தங்களைக் கொல்ல தூண்டப்பட்டனர். இரண்டு மாதங்கள் இந்த படுகொலைகள் நிகழ்ந்தது. பல நாடுகள் தங்கள் தூதரகங்கள் இழுத்து மூடிவிட்டு ஓடிவிட்டன.

            கிகாளியில் ‘துட்ஸி’ மக்கள் பதுங்கியிருந்த பள்ளிக் கூடத்திற்கு வந்து இராணுவம், அங்கே காவலுக் கிருந்த மெல்ஜியம் அமைதிப் படையை வெளியேறச் சொல்லியது. கொல்ல வந்தவர்கள் வெளியே காத்திருக்க, ஏப்ரல் 11,1994-இல் அப்பாவி மக்களை அம்போவென்று விட்டு விட்டு பெல்ஜியம் படை வெளியேர, ‘உத்து’ இராணுவம் பள்ளிக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. அன்று அவர்கள் 500க்கும் மேற்பட்ட சிறுவர்களோடு சேர்ந்து இரண்டாயிரம் மக்களைக் கொன் றனர். ஜூலையில் ’துட்ஸி’ புரட்சிப் படை(RPF) ஆட்சியைக் கைப்பற்றிய போதுதான், அந்த வெறியாட்டம் அடங்கியது.

            ஏப்ரல் 6-லிருந்து ஜூலை மத்தி வரைக்கும் கணக்கு வழக் கில்லாமல் மக்கள் கொல்லப் பட்டனர். நாஜிக்கள் படுகொலைகள் மற்றும் கம்போடியா போல்பாட் படுகொலைகள் நிகழ்ந்த போது அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்தார்கள். ஆனால் இங்கே கணக்கே இல்லை. சிலர் 5,00,000 முதல் 10,00,000 வரை இருக்கும் என குத்துமதிப்பாகச் சொன்னார்கள். ஐக்கிய நாட்டு சபை 8,00,000 என்றது.

            கலவரம் துவங்கியபோதே ஐக்கியநாட்டுப்படை கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆட்களை வெளியேற்றியது. பெல்ஜியம் அமைதிப்படை மட்டும் அங்கே இருந்தது, அதுவும் பிரதமரைக் காக்க இருந்தப் பாதுகாப்புப் படை கொல்லப்பட்டபோது தன் அமைதி முயற்சியை பின்வாங்கி கொண்டது. அந்தப் பள்ளி சம்பவத்திற்குப் பிறகு முழுமையாக தன் படையை விலக் கிக்கொண்டது.

            குறைவான ஐக்கியநாட்டுப் படையைக் கொண்டு அதன் தளபதி டல்லேர் மட்டும் அங்கே இருந்து மற்ற வெளிநாட்டினரை பத்திரமாக வெளியேற்றினார். சிலபகுதிகளை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ’பாதுகாப்புப் பகுதியாக’ அறிவித்து 20,000 ’துட்ஸி’ மக்களைக் காப்பாற்றினார்.

            அமெரிக்கா ருவாண்டாவின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்றுச் சொல்லி விட்டது. படுகொலைகளுக்குப் பிறகும் அது தன் அமைதிப் படையை அனுப்ப மறுத்துவிட்டது. பின்னாலில் அதிபர் பில் கிளிங்டன் ஃபிரண்ட்லைன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போதுச் சொன்னார் ‘நாங்கள் 5000 யு.எஸ் துருப்புகளை அனுப்பியிருந்தால் 5,00,000 உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் என நினைக்கிறேன்’.

           மே 17,1994-இல் ஐ.நா ருவாண்டாவில் படுகொலைகள் நடப்பதை உறுதிச்செய்தபோது, 5,00,000 மக்கள் கொல்லப் பட்டிருத்தார்கள் என செஞ்சிலுவை பதிவு செய்திருக்கிறது. ஐ.நா 5,500 துருப்புகளை ருவாண்டாவிற்கு அனுப்பியது. அதில் பெரும் பான்மையோர்கள் ஆப்பிரிக்க நாட்டைச்சார்ந்தவர்கள்.

            இந்த எண்ணிகைதான் படுகொலைகள் துவங்குவதிற்கு முன்பாக பாதுகாப்பிற்காக ஐ.நா படைத்தளபதி கேட்ட படையின் எண்ணிக்கை. அப்போது தர மறுத்துவிட்டார்கள். அமெரிக்கா விடம் 50 பாதுகாப்பு வாகனங்களை ஐ.நா கேட்டபோது அந்த வாகனங்களை கொண்டுவந்துச் சேர்ப்பதற்கு போக்குவரத்துச் செலவு மட்டுமே 6.5 மில்லியம் கேட்டார் களாம். அந்த பேச்சு வார்த்தை இழுத்துக் கொண்டே போனது. இங்கே பல லட்சம் உயிர்கள் காவு வாங்கப் பட்டது. பிணம்திண்ணிக் கழுகுகள் தன் குணத்தை மாற்றிக் கொள்ளுமா என்ன?

            ஐ.நா படைகள் படுகொலை களைத் தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காததால், ஜூன் 22-ஆவது நாள் பாதுகாப்பு அவை பிரான்ஸின் படைகளை களமிறங்க அனுமதி அளித்தது. பிரான்ஸ் படைகள் பக்கத்து நாடுகளான கோமா (எணிட்ச்) மற்றும் ஜயீர்(ஙூச்டிணூஞு) நாடுகளில் களம் அமைத்து படுகொலைகளைத் தடுக்க முயன்றன. அவர்கள் வந்திறங்கிய போது பெரும் பான்மையான ’துட்ஸி’ மக்கள் கொல்லப் பட்டிருந்தனர் அல்லது வெளியேற்றப்பட்டிருந்தனர். RPF படையைக் கொண்டு அரசப் படையை எதிர்த்து படுகொலைகள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. RPF ஆட்சிக்கு வந்தது.

            1997-க்குப்பிறகு அந்த படுகொலைகளுக்கு காரணமானவர் களை சட்டத்தின் முன் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு, 2001-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. விசாரணைகள் துவங்கப்பட்டன. ஐ.நா-வும் சர்வதேசக் குற்றவியல் மன்றம் அமைத்து விசாரிக்கத் துவங்கியது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களை ஐ.நா-வும், உள்ளூர் கும்பலின் தலைவர்களை ருவாண்டாவும் விசாரித்தன. மரணத்தண்டனை சார்ந்த தண்டனைகளில் விவாதங்கள் ஏற்பட்டு இன்னும் அந்த வழக்குகள் இழுத்துக்கொண்டுள்ளன.

            பத்து ஆண்டுகள் கடந்து 2004-இல் இந்தப் படுகொலைகள் நடந்த காலத்தை களமாக வைத்து ’ஹோட்டல் ருவாண்டா’என்றப் படம் வெளி வந்தது. ’கச்தடூ கீதண்ஞுண்ச்ஞச்ஞ்டிணச்’ என்ற ’உத்து’ இன மனிதன் தன் சக மனிதர்களை காப்பாற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

            ’பவுல்’ ஒரு வெளிநாட்டு விடுதியை நிர்வாகிக்கும் அதிகாரி. அவன் ’உத்து’ இனத்தவன். ஆனால் அவன் மனைவி ’துட்ஸி’ இனத்தைச் சார்ந்தவள். இந்த கலவரங்கள் துவங்கியபோது அவளையும் அவள் உறவினர் களையும் காப்பாற்ற முயற்சிக் கிறான். மேலும் அந்த விடுதியில் பணிபுரிபவர்களையும், அடைக்கலம் தேடி வந்தவர் களையும் காப்பாற்றுகிறான். அதற்கு அவன் இராணுவ அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தும், தன் சேமிப்பு பணத்தையெல்லாம் கொடுத்தும் ‘துட்ஸி’ இனத்தவர் களையும் காப்பாற்றுகிறான். அப்படி அவன் காப்பாற்றியது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்.

 டெர்ரி ஜார்ஜ் என்ற அயர்லாந்து இயக்குன ரால் இயக்கப்பட்ட இந்தப்படம் சர்வதேச படவிழாக்களில் பல விருதுகள் பரிந்துரைக் கப்பட்டு, விருது களையும் பெற்றது. மிக நுட்பமானப் படம். படுகொலைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். மனதை பதறவைக்கும் காட்சிகள் நிறைய உண்டு. நெகிழ்வான நேரங்களும் உண்டு. மனிதம் சார்ந்த உணர்வுகளை உயிர்ப்பிக்கும் படமிது. படத்தைப் பாருங்கள். நான் சொல்லவந்தது படத்தைப் பற்றி யல்ல.

            காலம் காலமாக மனிதம் கொல்லப்படுகிறது. மனிதர்கள் படுகொலைச்செய்யப்படுகிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் உலகப் பொது பொருளாதாரம். உலகமே ஒரு கிராமம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.ஆனால் எந்த அரசும் மனித உயிர்கள் பறிக்கப் படும் போதெல்லாம் உதவிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்பது மில்லை. தடுப்பதுமில்லை. கைகள் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க் கின்றன. இதை நாம் மிக சமீபத்தில் நமக்கே ஏற்பட்டபோது உணர்ந் தோம்.

            ஆனால் தோழர்களே இது நமக்கு மட்டும் நடப்பதில்லை. வரலாற்றில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

            நாம் சமூகம் என்ற போர் வையில் கூடி வாழ்கிறோம் என்பது பெயரளவில்தான். மனிதன் துன்ப திலிருக்கும் போது எந்த சக மனிதனும் உதவிக்கு வருவதில்லை. உயிர்போகும் போது மட்டுமல்ல. சிறு பிரச்சினைகளுக்குக்கூட நாம் தனித்தனியாகத்தான் போராட வேண்டியதாக இருக்கிறது. மனி தர்கள் தங்களுக்கு வரும்வரை எதையும் பொருட்படுத்துவதில்லை. கேட்டால் வேறு வழியில்லை, அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்பார்கள்.

            அப்புறம் எதற்கு நாம் கூடிவாழ தலைப்பட்டோம் என்பது கேள்விக்குறிதான்.

            நாம்கூடி வாழ்ந்தாலும் நாம் மற்றவர்களுக்கு அந்நியர்கள் தான்.

Pin It