பெருமுதலாளிய பெட்ரோலிய நிறுவனங் களுக்கு, இந்திய அரசின் பெட்ரோலியத் துறையின் கமுக்க ஆவணங்களை விற்க முயன்ற இரண்டு அரசு அதிகாரிகள், முன்னணி பெட்ரோலிய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், இரண்டு இடைத்தரகர்கள் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்டவர்கள், புதுதில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி உள்ளே நுழைதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டு களின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள், முகேஷ் அம்பானி யின் ரிலையன்சு தொழிற்சாலைகள் நிறுவனம் (RIL), ஜூப்ளியன்ட் எனர்ஜி ((Jubliant Energy), அனில் அம்பானியின் ரிலையன்சு (Reliance ADAG),), எஸ்ஸார் ((Essar), கெய்ன் இந்தியா (Cairn India ) ஆகிய ஐந்து நிறுவனங்களின் அதிகாரிகளும் அடங்குவர்.

விற்கப்பட்ட அந்த ஆவணங்களில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கொள்கை, விலை விதிப்பு முறை உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்திய அரசின் வரவு- செலவுக் கணக்கு அறிக்கையின் சில ஆவணங்கள் ஆகியவை இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்குள், அரசு ஆவணங்களைத் திருட முயற்சித்ததாக கிடைத்த தகவலையடுத்தே, தாங்கள் இக்கைது நடவடிக்கையில் இறங்கியதாக தில்லி காவல்துறை தலைவர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார்.

"இந்த கமுக்க ஆவணங்கள் சில தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிபுணர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலரை நாங்கள் விசாரித்து வருகின்றோம். நாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை ஆராய்ந்து வருகிறோம். அதற்குப் பிறகு, அரசு கமுக்கக் காப்புச் சட்டத்தை இதில் பயன்படுத்த வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும். மேலும் பலர் இதில் கைது செய்யப் படலாம்" என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த இந்தியாவையே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கானப் பணிகளை மோடி அரசு மேற்கொண்டு வரும்போது, ஒரு சில ஆவணங்கள் திருடு போவதை மட்டும் ‘கவலை யளிப்பது’, வியப்பான செய்திதான்!

திருடு போன இந்த ஆவணங் களில் கணிசமானவை, எண்ணெய் விலை நிர்ணயிப்பது தொடர்பா னவை என, அது குறித்து அறிந்த வர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

petrol 600இந்தியாவைப் பொறுத்தவரை, அதிகரித்துவரும் தனது எரிசக்தித் தேவைக்கு பெரிதும் இறக்குமதி யையே இந்திய அரசு சார்ந்திருக் கிறது. இந்தியாவில் பயன்படுத்தப் படும் பெட்ரோலியத்தில் 80 விழுக்காடு இறக்குமதி செய்யப்படு கிறது. எரிவாயுவில் 40 விழுக்காடு அளவிற்கு இறக்குமதி செய்யப்படு கிறது.

இந்தியாவின் பெட்ரோலியத் துறையைப் பொறுத்தவரை பெரும் பாலும் பொதுத் துறை நிறுவனங் களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே, அதனை முறியடிக்கவும், தாங்கள் இலாபம் கொழுக்கவும் ரிலையன்சு போன்ற பல சக்தி வாய்ந்த தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள், சதிச் செயல்களிலும், ஆவணத் திருட்டுகளிலும் ஈடுபடு வது, அதிர்ச்சியானதல்ல.

இதுபோன்ற திருட்டுகளும் புதிய நிகழ்வுகள் அல்ல. 1998ஆம் ஆண்டு, இதே ரிலையன்சு நிறுவ னம் இதுபோன்ற திருட்டு ஒன்றில் சிக்கியது. அந்த வழக்கு, இன்றைக் கும் புதுதில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது.

2013ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று, தற்போது ஆவணங்கள் திருடப்பட்ட இதே சாஸ்திரி பவன் வளாகத்தில் செயல்படும் இந்திய அரசின் நிறுவனங்கள் விவகாரத் துறை (Corporate affairs) அலுவலகத் தில், ஒரு ஆவணத் திருட்டு நடைபெற்றது. ஆவணங்களைத் திருடியதாகக் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களோடு, ரீபாக் பெரு நிறுவனத்தின் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர் கள் அனைவரும் பிணையில் வெளி வந்துவிட்டனர். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்ப தால் அது குறித்து பேச முடியாது என்கிறது, டெல்லி காவல்துறை.

இந்திய அரசின் நிதி நிலை அறிக்கை என்பது, மிகவும் முக்கிய மான அறிக்கையாகும். அதில் கூறப்படுகின்ற, ஒவ்வொருப் பொருட்களின் விலை மாறுதல் களையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டால், அதில் தேவையானப் பொருட்களை முன்னதாகவே வாங்கிப் பதுக்கி வைத்துக் கொள் ளவும், முன்னதாகவே சிலவற்றை  விற்கவும் அது பயன்படும்.

எனவே, அதனை முன்கூட் டியே தெரிந்து வைத்துக் கொள்ள இதுபோன்ற திருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இது பன்னெடுங் காலமாக நடை பெற்றே வந்துள்ளது.

பா.ச.க. -_ காங்கிரசு என எந்த அரசு வந்தாலும், அந்த அரசாங் கங்கள் பெரு முதலாளிய நிறுவனங் களின் துணையோடு - அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசாங் கங்களாகவே தொடர்ந்து செயல் பட்டு வருகின்றன, என்பது ஊர றிந்த செய்தியாகும்.

இப்பெரு முதலாளிய நிறுவ னங்களுக்கு மக்களால் பாதிப்பு நேர்ந்தால், அவர்களை இராணு வத்தை அனுப்பி பாதுகாப்பதாக இருக்கட்டும், நீதிமன்றத்தில் அந்த நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு கள் வந்தால் அதை வெளியில் பேசி முடிப்பதாக இருக்கட்டும், பெரு முதலாளிய நிறுவனங்களுக்குள் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டால் அதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்துவ தாகட்டும், மக்கள் செலுத்தும்  கோடிக்கணக் கான வரி வருவாயை இப்பெரு முதலாளிய நிறுவனங்களுக்கு ‘சலுகை’ என்ற பெயரில் அள்ளிக் கொடுப்பதாகட்டும், பெரு முதலாளிய நிறுவனங்களில் தொழி லாளர் போராட்டங்களை ஒடுக்கு வதாகட்டும், தொழிலாளர் நலச் சட்டங்களையே கைவிடுவதாக இருக்கட்டும், அரசாங்கங்கள் ஒவ் வொன்றும் பெரு முதலாளிய நலன் களைப் பாதுகாப்பதில் முனைப் போடே செயல்பட்டு வருகின்றன.

ஆனாலும், இவ்வளவு செய்தும் கூட பெரு முதலாளிய சக்திகளுக்கு, தமது கூட்டாளியான அரசியல் கட்சிகளின் மீது முழு நம்பிக்கை வருவதில்லை. அதன் காரணமா கவே, இதுபோன்ற ஆவணத் திருட்டுகள் தொடர்ந்து நடக் கின்றன.

ஏனெனில் ஆட்சியாளர்கள் ஒரு முதலாளியிடமிருந்து மட்டும் கையூட்டுப் பெறுவதில்லை. எனவே போட்டியில் இருக்கும் பெரு முதலாளி நிறுவனங்கள் மற்ற வற்றை முந்திக் கொண்டு அரசு ஆவணங்களைப் பெற முயலு கின்றன. தேவைப்பட்டால் திருடு கின்றன.

தமது இலாபத்தை உத்திர வாதப்படுத்தும் அரசாங்கமே இருந்தாலும், அதிலும் மேலும் இலாபம் கொழுப்பதற்காக சில ‘திருட்டு’ முயற்சிகளை மேற் கொள்ள, இப்பெரு நிறுவனங்கள் தயங்குவதில்லை.

தொடர்ந்து நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறிய அளவிலான அதிகாரிகளைக் கைது செய்து, அவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுத்துவிட்டு, அந் நிறுவனங்களின் மேல்மட்ட அதி காரிகளைத் தப்பிக்க விடுகின்ற போக்கு, முதலாளிகளும், அரசும் ஒன்று கலந்துள்ள ஒட்டுண்ணி முதலாளியக் கூட்டணியையே அம்பலப்படுத்துகிறது.

Pin It