பூங்குடி கிராமத்தில் மணி, கண்மணி இணைய ருக்கு பெயர் பொருத்தம் மட்டுமின்றி உள்ளம் இயைந்த வாழ்க்கையும் வாய்த்திருந்தது. மகிழ்வின் அடையாள மாய் 4 வயதில் இனியனும் 1 வயதில் மகிழினியும்.

இவர்தம் இனிய இல்லறம், படகில் பயணம் செல்லும் போது நடுக்கடலில் திடீரென சூறாவளிக் காற்றுடன் கடுமையானப் புயல் தாக்கி படகைப் புரட்டிப் போட்டது போல மணியை நோய் பறித்துச் சென்றது. ஈடுசெய்ய முடியாத இழப்பை சுமக்க வேண்டிய கொடுமையான சூழல் அக்குடும்பத்தைக் கவ்விக் கொண்டது.

ஆம், சின்னஞ்சிறு குழந்தைகளோடு ஒட்டுமொத்த குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் இனி தனித்து சுமந்திட வேண்டிய கொடுமையான நிலை கண் மணிக்கு நேர்ந்ததை எண்ணி உடனிருந்த உற்றார் உறவினர் அனைவரும் நிலைகுலைந்து போயினர். துன்ப துயரங்களை தன் தோள் மீது சுமந்து கொண்டு குடும்பத் தலைவனாகவும் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய நிலை ஒருபுறம், குடும்பத் தலைவனை இழந்து நிற்கும் ஈடில்லா மன வலி மறுபுறம். கதறி அழுதிட முயற்சிக் கிறாள், அதற்கு தனது பலவீன மான உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. தனது சின்னஞ் சிறு குழந்தை களையும் தன்னையும் எப்படி தேற்றிக் கொள்வது என அவளுக்கு எதுவும் புரியவில்லை.

“வாழ வேண்டிய வயதில் வாழா வெட்டியாக நிற்கி றாளே” என வீட்டிற்கு வந்து அழுதவர்கள் உரத்துச் சொல்லி அழுதபோது அவளால் எதுவும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவள் உடைந்த உள்ளத்தோடும் பலவீனமான உடலோடும் நடை பிண மாக மாறிப் போனாள் . . .

உயிரற்ற பிணமாக மணி படுத்துக்கிடக்க, அருகில் உயிருள்ளப் பிணமாக அவள் அமர்ந்திருந்தாள். சின்னஞ் சிறு குழந்தைகள் தன் தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களாக அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். கனத்த இதயத்தோடு வீட்டிற்கு வந்த பெண்கள் அனைவரும் வாரி அனைத்து அழுது தீர்த்தனர். வீட்டிற்கு வெளியே ஆண்களும் இறுக்கமான மனதோடு அமர்ந்திருந்தனர். நேரம் ஆக ஆக வீட்டிற்கு முன் போடப்பட்டிருந்த பந்த லையும் தாண்டி கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்த ஊரே கூடி நிற்கின்றது, இறுக்கமானச் சூழல் எல்லோரையும் உலுக்கியது.

தன் வீட்டிலிருந்து மணி தனது இறுதிப் பயணத் தைத் தொடங்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டி ருந்தது. இறுதிச் சடங்குகள் என்ற பெயரில் கண்ம ணிக்கு செய்ய வேண்டிய ஈம (ஈன)ச் சடங்குகள் அனைத்தும் நடத்தப் பட்டன.

ஆம், மணப் பெண்ணைப் போல் பூ, பொட்டு, தாலி, கம்மல், மூக்குத்தி, வளையல், வண்ணப் புடவை என அனைத்து அலங்காரங்களோடு அழைத்து வரப்பட்ட கண்மணியை இறந்துபோன மணி அருகில் பாயில் உட்கார வைத்து சடங்குகள் என்ற பெயரால் அவள் அணிந்திருந்த யாவும் ஒவ்வொன்றாகக் களையப் பட்டன. புகுந்த வீட்டுக் கோடி - பிறந்த வீட்டுக் கோடி என்று அவள் மீது போடப்பட்ட அந்த நூல் சேலைக ளோடு அங்கிருந்து அவளை அகற்றியது அந்தக் கூட்டம்.

கல் மனமும் கரையும் வகையில் இரக்கமே இல்லாத இந்த மனித சமூகத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்பதை எந்தவித வெட்கமு மின்றி ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.

இனியன் தனது தந்தையின் உடலுக்கு தீ வைக்க சுடுகாட்டிற்கு இறுதிப் பயணத்தில் அழைத்துச் செல்லப் பட்டான். சுடுகாட்டிலும் சடங்குகள் நடந்து, பச்சிளம் குழந்தை தன் தந்தையின் உடலுக்கு தீ வைத்தப் பிறகு அனைவரும் வீடு திரும்பினர்.

இதெல்லாம் இருக்கட்டும், இத்தனைக்கும் பிறகு நடந்ததையெல்லாம் பார்க்கும் போது நமது சமூக அமைப்பு எப்படி மாந்த நேயமே இல்லாமல் இறுகிக் கிடக்கிறது என்பதை உணர முடிந்தது.

தனது தலைவனை இழந்து வேதனைத் தீயில் வெந்துக் கொண்டிருக்கும் கண்மணி தனது தலைவன் இறந்ததுமுதல் தண்ணீர்க் கூட குடித்திருக்க மாட்டாள் என்பதை நாம் உணர முடியும். சுடுகாட்டிற்கு சென்று வந்தவர்களும் வீட்டிலிருந்த பெண்களும் அவ்வீட்டில் ஏற்பாடு செய்திருந்த உணவை உண்டனர். ஆனால் தலைவனை இழந்த கண்மணிக்கு உணவு வழங்கக் கூடாதாம். பால், ரொட்டி போன்றவற்றை மட்டுமே உண்ண வேண்டுமாம். எத்தனை நாட்களுக்கு?

பால் தெளிப்பு சடங்கு சுடுகாட்டில் செய்வதற்கு முன், வீட்டில் சடங்குகள் நடைபெறுகிறது. அங்கு கூடியிருக்கும் கூட்டத்திலுள்ள குடும்பத் தலைவனை இழந்தப் பெண்களே அந்தச் சடங்குகளை நடத்துகிறார்கள். அப்போது அவளை பச்சை தென்னை மட்டையில் உட்கார வைக்கின்றனர். அங்கு மணி பயன்படுத்திய ஒருசில பொருட்கள் மற்றும் செங்கல்லை நாற்காலியில் வைத்து அதற்குமுன் வாழை இலையில் மணிக்கு விருப்பமான அனைத்து உணவு வகைகளும் படை யல் செய்யப் படுகிறது, தலைவனுக்குப் படைக்கப் பட்ட பலகாரங்கள் அனைத்தையும் வாழை இலையில் வைத்து கண்மணி யைச் சாப்பிடச் சொல்கின்றனர்.

சூழ்ந்து நிற்கும் அனை வரும் அப்போது சாப்பிடச் சொல்லுகின்றனர். ஆனால் இவர்கள் தான் கடந்த மூன்று நாட்களாக கண்மணியை உண்ணாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர் என்பதை எப்படிச் சொல்வது? எங்கே சொல்வது? அதையும் மீறி சிலர் உண்ணச் சொன் னார்கள், அதற்கு அப்படி சாப்பிடுவது வழக்கமில்லை என்று மறுத்து விட்டார்கள்.

அதற்கடுத்து, அன்று மாலை கண்மணியின் பிறந்த வீட்டிற்கும் நெருக்கமான உறவினர் வீடுகளுக்கும் அழைத்துச் சென்றனர். அவ்வீட்டிலுள்ள மூத்தோர் படங்களுக்கு முன்னால் தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. கணவனை இழந்த அவள் வீட்டிற்குள் நுழையும்போது வீட்டிலுள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் வீட்டிலுள்ள அறையினுள் இருந்தனர். அவள் தானாகவே உள்ளே நுழைந்து ஏற்றப்பட்டுள்ள தீபத்திற்கு வணக்கம் செய்துவிட்டு அதன்பின் வீட்டில் வந்து தரையில் உட்காருகிறாள். அதன்பின் உள்ளே இருக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வெளியே வரு கின்றனர். அங்கே கண்மணிக்கு முன்னால் ஒரு தட்டில் குங்குமமும் ஒரு தட்டில் திருநீரும் ஒருதட்டில் மல்லி கைப் பூவும் வைக்கப்பட்டுள்ளது. இதை எதை யுமே இனி வைத்துக் கொள்ள அனுமதிக்காத சமூகம் அதை யெல்லாம் பிறருக்கு தன் கைப்பட வைக்கச் சொல் கிறது. திருமணமானப் பெண்ளுக்கு குங்குமமும் பூவும் வைக்கப்படுகிறது. திருமணமாகாதப் பெண்க ளுக்கு திருநீரும் பூவும் வைக்கப்படுகிறது.

அதன்பின் பால், பழம் மற்றும் வெள்ளைரவை உப்புமா கண்மணிக்கு வழங்கப்பட்டது. கரிய இருள் நிறைந்த இச்சமூகத்தால் கண்மணிக்கு வழங்கப்பட்ட அனைத்தும் வெள்ளை நிறமுடையதாகவே இருந்தது.

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கணவனை இழந்தப் பெண்களுக்கு குடும்பத் தலைவனை இழந்த பெண்களை வைத்தே இச்சடங்குகள் (இத்தீங்குகள்) அனைத் தும் நடத்தப்படுகிறது.

“..„...லு...„...லு..!„லு!”

உடன்கட்டை ஏறினால்கூட ஒருமுறை தான் மரணம் . . .

சடங்குகள் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்தும்

ஒவ்வொரு நொடியும் மரணம் . . . மரணம் . . . மரணம் . .

Pin It