சுற்றும்
விசையாய்
வாழ்க்கை

சூட்சுமத்தின்
இருப்பாய்
நான்

அவலத்தின்
அடையாளம்
முகம்

நடைபின்னும்
நாசக்கால்கள்

வலுவற்று
பதறும்
என் கரங்கள்

மதிகெட்டுத்
தொலையும்
மானம்

விடையற்ற
புதிராய்
தொடரும்
வீண் பழக்கம்

விரயத்தில்
நெருங்கும்
நரகம்!

- அ.செல்வம்

Pin It