ரவீந்திரநாத் தாகூரின் திக்குத் தெரியாத பறவைகள்
தமிழில்: எஸ்.ஏ.பி.

101
புழுதியான போது அவமானமாய்
ஆனால் அது மலர்களைத் தருகிறது.
102
பூக்களை சேகரிக்க காலம் தாழ்த்தாதே
பாதுகாத்திடு, ஆனால் நடந்து செல்
அவை உன்வழியெங்கும் பூத்திருக்கும்.
103
வேர்கள் பூமியினுள் உள்ள கிளைகள்
கிளைகள் காற்றிலாடிடும் வேர்கள்.
104
தொலைவிலிருந்து கோடையில் வரும் இசை
இலையுதிர் காலத்தைச் சுற்றிச் சிறகடிக்கும்
அதன் பழைய கூட்டினைத் தேடி.
105
உனது சட்டைப் பையிலுள்ள தகுதிகளை
உனது நண்பனுக்குக் கடன் கொடுத்து
அவனை அவமானப்படுத்தாதே.
106
பழைய மரத்தைச் சுற்றிப்படர்ந்த
பாசியைப் போல என் இதயத்தினை
பெயரில்லாத நாட்கள் தொடுகின்றன.
107
அவளே முதன்மையானவள் என
நிரூபிக்க, எதிரொலி அவளது
பிறப்பைக் கேலிக்குள்ளாக்குகிறது.
108
அவனது சிறப்பு விருப்பத்தை
வளவாழ்வு வந்து புகழ்ந்தால்
கடவுளுக்கு வெட்கம் போங்கள்.
109
எனது பாதையில் எனது நிழலே
என்னை உருக்கொள்ள வைக்கிறது
ஏனெனில் என்னிடம் உள்ளது
ஏற்றாத விளக்கொன்று.
110
இரைச்சல் மிகுந்த கூட்டத்தினுள்
மனிதன் ஏகமாய் புகுந்தான்
அமைதியில் தான் மூழ்கிப்போக.
111
பயன்படுத்தி முடிந்துவிட்டால்
அது மரணத்தில் முடியும்
ஆனால் முழுமையான முடிவு
எப்போதும் முடிவற்றதாகும்.
112
சூரியன் தனது ஒளியின்
தளர்ந்த ஆடையுடன் தான்.
மேகங்கள் அழகாகவும்
ஆடம்பரமாகவும் மேடையில்.
113
குழந்தைகள் கைகளை உயர்த்தி
நட்சத்திரங்களைப் பிடிக்கக்
கூச்சலிடுகிறார்கள்
அதேபோல் குன்றுகளும்.
114
சாலை அதன் கூட்டத்தில் தனிமையில்.
யாரும் அதை நேசிக்காததால் தான்.
115
அதிகாரம் குறும்புகளை அதிகரிக்கிறது
மஞ்சள் இலைகள் சிரித்தே உதிர்கின்றன
மேகங்கள் கடந்து செல்கின்றன.
116
சூரிய ஒளியில் பூமி இன்று என்னிடம்
ரீங்காரம் இசைக்கிறது,
நெசவு நெய்யும் பெண்ணைப் போல,
நாக்கு மறந்துபோன பழம்பாடலை
மீண்டும் பாடுகிறது.
117
மாபெரும் உலகில் மதிப்புடன் வளர்கிறது
புல்லின் இதழும் மதிப்போடு.
118
மனைவியின் பேச்சுப் போன்றது கனவு
கணவனின் வலி போன்றது தூக்கம்.
119
மங்கிவரும் பகலை இரவு முத்தமிட்டு
அதன் காதில் முணுமுணுக்கிறது
“நான் மரணம், உன் தாய்.
உன்னைப் புதிதாய் பெற்றெடுக்கிறேன்”.
120
நான் உன் அழகை, கருப்பு இரவை
உணருகிறேன், விளக்கேற்றும்
அன்பான பெண்ணைப் போல.
121
வீழ்ந்த உலகங்கள் செழித்திட
எனது உலகில் செழிப்பைச்
சுமந்து செல்கிறேன்.
122
அன்பு நண்பனே, உனது மகத்தான
சிந்தனைகளின் அமைதியை
இந்தக் கடற்கரையோரம்
அலைகளைக் கவனிக்கும்போது
உணர்ந்து கொள்கிறேன்.
123
மீனைக் கொத்திச் செல்லும் பறவை
அதற்கு வானத்தைக் காட்டும்
அன்புச் செயலென நினைக்கிறது.
124
“நிலாக் காலங்களில் உனது
காதல் கடிதங்களை எனக்கு அனுப்பு”
இரவு சூரியனுக்குச் சொன்னது.
“நான் எனது பதிலை புல் மீது
கண்ணீரால் எழுதுவேன்” என்று.
125
பிறந்த குழந்தை மகத்தானது
அவன் இறக்கும்போது உலகிற்கு
குழந்தைத் தனத்தை தந்து செல்கிறான்.
126
நீரின் நடனம் கூழாங்கற்களை
முழுமையாய் வடிவமைக்கிறது
சம்மட்டி அடியால் முடியாதது.
127
மலர்களிலிருந்து தேனீக்கள்
தேனை உறிஞ்சிவிட்டு ரீங்காரமிட்டு
நன்றி கூறுகின்றன. ஆனால்
வண்ணத்துப் பூச்சியோ தனக்கு
பூக்கள் நன்றி கூறுவதாய் நினைக்கிறது.
128
முழு உண்மையையும் பேசுவதற்கு
நீ தயங்கவில்லை என்றால்
உனக்குப் பேச்சு எளிதாய் வரும்.
129
முடியும் என்பது முடியாததைப் பார்த்து
“நீ எங்கே வசிக்கிறாய் என்று கேட்டது.”
“ஒரு பேடியின் கனவுகளில்” என பதில் வந்தது.
130
எல்லாத் தவறுகளுக்கும் உனது கதவை மூடினால்
உண்மை பாதுகாக்கப்படும்.
131
என் இதயத்தின் துக்கத்திற்குப் பின்னால்
ஏதோ சலசலப்பைக் கேட்கிறேன்
அவற்றை என்னால் பார்க்க முடியாது.
132
ஓய்வின் இயக்கம் பணிபுரிதல்தான்
கடலின் ஓய்வில் அலைகள் கிளம்பும்.
133
காதல் கொள்ளும் போது இலை பூவாகிறது
 பூஜிக்கும் போது பூ கனியாகிறது.
134
பூமியின் கீழுள்ள வேர்கள்
கிளைகளைச் செழிப்பாக்குகின்றன
ஆனால் அவை பரிசு எதையும் கேட்பதில்லை.
135
மழை மாலையில் காற்றுக்கு ஓய்வில்லை
அசைந்தாடும் கிளைகளைக் கண்டு
ஆழ்ந்து சிந்திக்கிறேன்
அனைத்தும் பெருமைக்குரியவை.
136
நள்ளிரவுப் புயல், அசுரக் குழந்தை
இருட்டில் விழித்துக் கொண்டதுபோல்
அலறி ஆட்டம் போடுகிறது.
137
ஓ கடலே, நீ புயலின் தனி மணப்பெண்
அலைகளைக் கிளப்பி அவன்பின் செல்.
138
வேலையைப் பார்த்து வார்த்தை கூறியது
“எனது வெறுமையால் வெட்கப்படுகிறேன்”
வேலை வார்த்தையிடம் கூறியது
“உன்னைப் பார்க்கும் போதுதான் தெரிகிறது
நான் எத்தனை ஏழை என்று.”
139
காலம் மாறுதலின் செல்வம்,
ஆனால் கடிகாரத்தில் நேரம் மாறுகிறது
ஆனால் செல்வம் ஒன்றுமில்லை.
140
உண்மையை அதன் உடையில் காண்கையில்
அது உடலோடு ஒட்டி இறுக்கமாயிருக்கும்
கற்பனையோ தொளதொளப்பாயிருக்கும்.
141
நான் இங்கும் அங்குமாய் பயணித்தபோது
ஓ சாலையே உன்னால் நான் ஓய்ந்து போனேன்,
ஆனால் இப்போது நீ எல்லா இடங்களுக்கும்
எளிதாய் அழைத்துச் செல்கிறாய்.
நம் இருவருக்கும் காதல் திருமணம் ஆகிவிட்டது.
142
ஏதோ ஒரு நட்சத்திரம் தான் எனது
வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது என்று
நான் நினைக்கிறேன், ஆனாலும்
இருளில் ஒன்றும் தெரியாவிட்டாலும்.
143
பெண்ணே, கருணையோடு உன் விரல்களால்
என் உடமைகளைத் தொட்டாய்.
இசைபோல் எல்லாம் இனிதானது.
144
ஆண்டுகளின் இடிபாடுகளிலிருந்து
ஒரு சோகக்குரல் கேட்கிறது.
அது இரவில் எனக்காய் பாடுகிறது
“நான் உன்னைக் காதலித்தேன்.”
145
பற்றி எரியும் நெருப்பு என்னை எச்சரிக்கிறது.
“சாம்பலில் புதையுண்டு கிடக்கும் என்னைக்
காப்பாற்றாவிட்டால் மடிந்து போவேன்”.
146
எனது நட்சத்திரங்கள் வானில் உள்ளன
ஆனால் ஓ எனது வீட்டில் சிறு விளக்கு எரியவில்லை.
147
இறந்துபோன வார்த்தைகளின் தூசி
உன் காதில் ரீங்காரமிடும்.
அமைதி உன் ஆன்மாவைக் கழுவட்டும்.
148
மரணத்தின் சோககீதம் வாழ்வின்
இடைவெளிகளிலிருந்து கேட்கிறது.
149
உலகம் அதன் இதயத்தைக்
காலை ஒளியில் திறந்துவிட்டது
என் இதயமே வெளியே வா
உன் காதலை நேரில் தெரிவிக்க.
150
மங்கிய இந்த இலைகளோடு
எனது மங்கிய நினைவுகளும்,
சூரிய ஒளி தொடவும் இதயம் பாடுகிறது
என் வாழ்வில் பொங்கிடும் மகிழ்ச்சி
நீலநிற ஆகாயத்தில் பறந்து செல்கிறது
இருண்ட காலத்தை நோக்கி.

Pin It