ஸ்பெக்ட்ரம் ஊழல் முடைநாற்றம் வெளிப்பட்டபின் தமிழக முதல்வரின் பேச்சுக்கள் விசித்திரமாய் வெளிப்படுகின்றன. நான் ஊழலுக்கு நெருப்பு என்றும், இளமையிலேயே தனது குடும்பம் திருடர்கள் வந்து திருடிச் செல்லும் அளவுக்கு வளமானது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஆனால் அவரது வீட்டில் திருடவந்தவர்கள் எதைத் திருடிச் சென்றார்கள் என்று கலைஞரே தனது வாழ்க்கை வரலாற்று நூலான “நெஞ்சுக்கு நீதி” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி ஆண் குழந்தை என்பதால் அவரது பெற்றோர் தங்கள் குலதெய்வத்துக்கு மகனின் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டனர். அதன்படி சிறுவன் கருணாநிதியின் தலைமுடியை ஒரு மண் சட்டியில் வைத்து துணிபோட்டு மூடிக் கட்டி வைத்திருந்தனர். அதைத்தான் திருடன் பொன் நகைகள் உள்ள சட்டி என்று நினைத்துத் திருடிச் சென்றதாகவும், எங்கள் வீட்டில் திருடுவதற்கு வேறு விலை உயர்ந்த பொருள் ஒன்றுமில்லை என்று கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் விளக்கியுள்ளார். ஆகவே கலைஞர் கூறியபடி ஆதியில் இவ்வாறான வசதியான குடும்பம்தான் கலைஞரின் குடும்பம்.

தனக்கு ஒரே ஒரு வீடு மட்டும் இருப்பதாகவும் அதையும் தானமாக உயில் எழுதிவிட்டதாகவும் கலைஞர் கூறியுள்ளார். அதே நேரத்தில் சன் டி.வி. நிறுவனத்திலிருந்து 100 கோடி ரூபாய் வந்ததாகவும் அதைத் தனது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதி ஐந்து கோடி ரூபாயை வங்கியில் போட்டு அதில் கிடைக்கும் வட்டியை வைத்து உதவிகள் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏதுமில்லாதவருக்கு 100 கோடி வந்தது எப்படி? கே டி.வி, கே செய்திச் சேனல், சிரிப்பொலி, சித்ரம், மியூசிக் சேனல் ஆகிய ஐந்து சேனல்கள் வந்தது எப்படி என்பன போன்ற கேள்விகள் கலைஞரிடம் பதிலைத் தேடுகின்றன.

 ராடியா டேப் ரகசியங்கள்

நமது நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆளுங்கட்சி ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நீரா ராடியா போன்ற இடைத்தரர்களும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்பதை நீரா ராடியா ஒலி நாடாக்கள் அம்பலப்படுத்துகின்றன. டாடா, முகேஷ் அம்பானி போன்ற முதலாளிகள் யாரை அமைச்சராக்க வேண்டும், யாரை ஆக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கிறார்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.

நீராவிடம் டாடா தயாநிதிமாறனை அமைச்ச ராக்கக்கூடாது என்று பேசியுள்ளார். இதற்கு முதல்வரின் துணைவியாரின் ஆடிட்டர் ரத்தினம் மூலம் பேசப்பட்டுள்ளது. தயாநிதி மாறனை அமைச்சராக்காமல் தடுப்பதற்கு டாடா 540 கோடி ரூபாய் செலவில் ஒரு பெரிய கட்டிடம் கட்டித் தருவது என்ற உடன்பாடு பேசி முடிக்கப் பட்டுள் ளது. பின்பு தயாநிதிமாறன் 600 கோடி கொடுத்து ஜவுளித்துறை அமைச்சரானதும் ஒலி நாடாவில் பதிவாகியுள்ளது. இந்த ரகசியம் வெளி யான பின்பு தான் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்த செய்தியும் வெளிவந்தது. ஆனாலும் பஞ்சு ஏற்று மதிக்கு தடைவிதிக்காமல் விமோசன மில்லை.

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு அமைச்சர் அனுமதித் ததால் உள்நாட்டில் நூல் விலை ஏறி, பனியன் மற்றும் தறித்தொழில் முடங்கியது அனைவரும் அறிந்ததே. ஏற்றுமதி செய்தாலும் இறக்குமதி செய்தாலும் துறை அமைச்சர்களுக்கு கமிசன் போகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.

முதல்வர் கருணாநிதி தங்கள் குடும்பத் தொலைக்காட்சிகளைக் காண இலவச டிவி ஏழை களுக்கு வழங்கினார். இலவச டி.வி. பெட்டி களில் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிய செய்திகளையும், ராசா மற்றும் கருணாநிதி குடும்பம் பற்றியும் ஏழை மக்கள் பார்த்துப் பூரித்துப் போயிருக் கிறார்கள். 1.76 லட்சம் கோடி என்றால் எவ் வளவு இருக்கும் என்பது தெரியாமல் விழிக் கிறார்கள்.

ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுகளாக ஒரு லட்சம் கோடி ரூபாயை ஏற்றுவதற்கு ஒரு லாரி வேண்டும். மொத்தம் 176 லாரிகளில் ஏற்ற வேண்டி யிருக்கும்.

மாநிலத்தில் நடக்கும் ஊழல்கள் கருணா நிதிக்குத் தெரியாமல் நடைபெறாது. மத்தியில் நடக்கும் ஊழல்கள் சோனியாவுக்குத் தெரியாமல் நடக்காது. சோனியா குடும்பத்துக்கு ஊழல் மட்டும்தான் தெரியும் என்று ஒருவர் சரியாகச் சொன்னார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் சரிபங்கு இருப்பதால்தான் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இன்றைய பிரதமர் மன் மோகன் சிங் சோனியாவால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைதான் என்பது இப்போது அம்பலமாகி வருகிறது.

விண்ணைத்தாண்டி விலைவாசி

விண்ணை முட்டிய விலைவாசி இப்போது விண்ணைத் தாண்டி வெகுதூரம் உயர்ந்து விட்டது. வெங்காயம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் ரூ.70, தக்காளி 60, ஒரு முருங்கைக்காய் ரூ.15 என்று காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. வெங்காயம் பயிரிட்ட விவசாயிக்கு 10 ரூபாய்கூட கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வால் விவாசாயி லாபம் காண முடியாது. இந்த விலை உயர்வை யாரோ தீர்மானிக்கிறார்கள். யார் என்று மக்களுக்கு தெரியாது. விற்கப்படும் விலையில் 10சதம் கூட விவசாயிக்குக் கிடைப்பதில்லை.

கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் 1060 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மின்சார வெட்டும், இடுபொருள்களின் விலை ஏற்றமும் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயவிலை கிடைக்காதததும் அவர்கள் கழுத்தை அறுக்கிறது. எனவே விவசாயிகள் கிராமங்களை விட்டு வெளி யேறுகிறார்கள். நிலங்களை ஆளுங்கட்சிக் கொள்ளைக்காரர்களிடம் பறிகொடுத்து விட்டுப் போவதால் விவசாய உற்பத்தி கேள்விக்குறியாகி வருகிறது.

கடந்த ஓராண்டில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.12 விலையை உயர்த்தி அம்பானிகள் கொள்ளையடிக் கிறார் கள். மத்திய அமைச்சர் கள் 15 சத கமிசன் வாங்குகிறார்கள் என்ப தும், அதில் சோனியா குடும்பத்திற்கும் பாதிப் பங்கு தரப்படு கிறது என்பதும் நீரா ராடியா டேப்பில் பதி வாகியுள்ளது. இதில் எல்லாம் பிரதமர் சோனியா வின் கட்டளைப்படியே உடந்தையாக இருந் துள்ளார்.

2010 - ஊழல் பிரம்மாண்டங்களின் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் வரலாற்றில் ஊழல்களின் எண்ணிக்கையிலும், அவற்றின் பிரம் மாண்டத்திலும் மிக இழிந்த ஆண்டாகும். மத்தியில் ஆளும் காங்கிரசுக் கட்சியும், திமுக போன்ற கூட்டணிக் கட்சிகளும் இந்த ஊழல்களில் உலகப்புகழ்பெற்றுவிட்டன. இவர்கள் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மீதும், அதன் அமைப்புகள்மீதும் கடந்த குளிர்கால நாடா ளுமன்றக் கூட்டத்தில் தாக்குதல் தொடுத்தனர். மத்திய புலனாய்வுத்துறை, மத்திய உளவுத்துறை பற்றி மக்களுக்குப் பெருத்த சந்தேகங்கள் எழுந்துள் ளதும் இந்த ஆண்டில்தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டுவசதி வாரியம் சட்டவிரோத சுரங்கங்கள் போன்ற ஊழல்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்திருக்கி றார்கள். பெட்ரோல், சிமிண்ட், உருக்கு உள்ளிட்ட பொருட்களின் விலையை ஏற்றிக் கொள்ளையடிக்கிறார்கள். உணவுப் பொருள்களின் விலையும் மக்களின் வாழ்வையே குழிபறிக்கிறது.

இந்த ஊழல்களை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்கள் பங்கு அம்பலமாகி விடும் என்று காங்கிரஸ் தலைமை நடுங்குகிறது. நாட்டின் நிதியும், இயற்கைச் செல் வங்களும் சூறையாடப்படுவதைத் தடுக்க இந்திய மக்கள் அலை அலையாய் கிளர்ந்தெழ வேண்டும் என்பதுதான் புத்தாண்டின் அறை கூவலாகும்.

2011 ஊழல் பேர் வழிகளைத் தண்டனைக் குள்ளாக்கவும், ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் உரிய ஆண்டாக இருக்கட்டும். அதற் கான மக்கள் இயக்கம் கிளர்ந்தெழட்டும். மேலும் 2011 மாநிலத் தேர்தல்களின் ஆண்டு ஆகும். இத் தேர்தல்களில் இடதுசாரி, ஜனநாயக சக்திகள் வெல்லட்டும். ஊழலாட்சிகள் மக்களால் தூக்கி எறியப்படட்டும்.

Pin It