நமது தேவைகள் பொய்யைப்
புனிதமாக்கும் என்று நான் நம்பவில்லை
கண்ணில் கண்டதையெல்லாம்
வேண்டும் குழந்தையைப் போல
எதைத் தேர்ந்தெடுப்பதெனக் குழப்பம்

அறுவடைக்குப் பிந்தைய வயலைப் போல
அவளிடம் நான்

இரவின் சுவர்களில்
ஆசைகளைத் தொங்க விட்டேன்
தனிமையிலே வாழ்வதற்கும்
அமைதியாக இருப்பதற்கும்

பொய்களிலிருந்து என்னை
உரித்தெடுத்து விட்டால்
நான் எதைப் பார்ப்பது?
முன்பு அவை எளிதாக இருந்தன
அறுவடைக்குப் பிந்தைய வயலைப் போல

கோடை மிகக் கொடுமையானது
வசந்தத்தின் மரணம்
நம் காதலுக்கு முடிவைச் சொல்லும்.

- கலாமணியன்

Pin It