கவிஞராக, எழுத்தாளராக, தமுஎச ஊழியராக, வாலிபர் அமைப்பின் தலைவராக, நாடகக்கலை ஞராக அறியப்பட்டிருக்கிற கோவை சதாசிவம், சாயக்கழிவுகளால் நாசமான நொய்யல் ஆற்றின் நாற்றத்தால் சீண்டப்பட்டு, சுற்றுப்புறச்சூழலியல் போராளியாகியிருக்கிறார். ஏற்கனவே வனத்தின் அழிவுகளால் ஏற்படுகிற அபாயம் குறித்தும், ஆபத்தான இடத்தில் அணு ஆய்வுக்கூடம் அமைப்பது குறித்தும் கவித்துவமான உயிர்ப்புதையல் என்ற கட்டுரை நூல் தந்தவர். இப்போது ‘ஊர்ப்புறத்துப் பறவைகள்’ என்ற நூலைத் தருகிறார்.

இருபத்தைந்து பறவைகள் பற்றிய விபரங்களை யும் தகவல்களையும், நுணுக்கமான பார்வையை யும் மங்கி மறைந்து வருகிற அதன் நிலவரம் பற்றிய மனப் பதைப்பையும் நூல் விவரிக்கிறது.

நாகணவாய் என்கிற மைனா, பைங்கிளி, கருங் கரிச்சான், பனங்காடை, செம்மூக்கு ஆள்காட்டி, மரங்கொத்தி, குருட்டுக்கொக்கு, கருங்குயில், மீன் கொத்தி, காக்கை, வெளவால் என்று எல்லா வட்டாரத்துப் பறவைகள் குறித்தும் கட்டுரை பேசுகிறது.

மனிதநேயத்தை மையமிட்டு சுழல்கிற சுற்றுப் புறச்சூழலியல் மனோபாவம், உயிர்நேயமாக நீண்டு பரவி பரிணாமம் கொள்கிறது.

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று முழக்கிய மகாகவி பாரதியின் கவிதைக்குரல், சிட்டுக்குருவி பற்றிய குறுங்கதை, குயில்பாட்டு என்று விரிந்து நீள்கிற அவரது உயிர் நேயம் என்பது ஆன்மீகத்தை நோக்கிய பயணமல்ல; மனிதநேயத்தை நோக்கிய யாத்திரை.

அதே பாங்கில் இக்கட்டுரை நூலின் உயிர்த் துடிப்பும் இயங்குவது கூடுதல் சிறப்பு. நகர்மய மாக்கல், உலகமயமாக்கலில் கனவாகி மறைகிற பறவைகள் குறித்து இக்கட்டுரை நூலை அழகாக வும், நேர்த்தியாகவும் அச்சிட்டு, வடிவமைத்து எழில்படுத்தியிருக்கிற “குறிஞ்சி” பாலாஜி பாராட்டுக்குரியவர்.

வெளியீடு : கோவை சதாசிவம், 4/160, குறிஞ்சி நகர், வீரபாண்டி(அஞ்.), திருப்பூர் - 641 605.

விலை ரூ 50.

Pin It